” என்ன வேலை செய்றீங்க? ” என்ற கேள்வி எழுப்புவது இத்தாலி நாட்டில் அநாகரிகச் செயல் – சில வித்தியாச சம்பிரதாயங்கள் மற்றும் சில கோயில் அதிசயங்கள்!

wonders of temple

வித்தியாசம், அதிசயம் என்ற வார்த்தைகளுக்கு எப்போதுமே தனி மதிப்பு உண்டு. ஏனென்றால் அவை தான் மனிதனை வியப்பிற்கு உள்ளாக்குகின்றன. அப்படி சில கோயில்களின் அதிசயங்களும், சில நாடுகளின் வித்தியாசமான சம்பவங்களையும் இங்கே பார்ப்போம்.

சில கோயில்களின் அதிசயங்கள்:

காசி நகரைச் சுற்றி 45 மைல் தூரம் வரை கருடன் பறக்காது. குளித்தலை மணப்பாறை வழியில் ஐவர் மலை என்னும் இரத்தினகிரி மலை உள்ளது. இந்த மலை மேல் காகங்கள் பறப்பது இல்லை. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வராது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மொத்தம் பதிநான்கு கோபுரங்கள் உள்ளன. வேறு எந்தக் கோயிலிலும் இவ்வளவு அதிகமான கோபுரங்கள் இல்லை.

சென்னிமலை முருகனுக்கு அபிஷேகம் செய்யும் தயிர் புளிப்பது இல்லை. கும்பகோணம் திருநாகேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ ஒப்பிலியப்பன் கோவிலில் எந்த நைவேத்தியத்திலும் உப்ப சேர்ப்பதில்லை. இரத்தினகிரி கோவிலில் உள்ள முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பால் சிறிது நேரத்தில் தயிராக மாறும்.

சிதம்பரம் கோவிலில் ஒரே இடத்தில் நின்றபடி கோவிந்தராஜ பெருமாளையும் நடராஜனையும் தரிசிக்கலாம். இதே சிதம்பரத்தில் மட்டும் தான் சைவர்களுக்கு உண்டான திருவோதிரையும் வைணவர்களுக்கு உண்டான வைகுண்ட ஏகாதசியும் ஒரே இடத்தில் நடைபெறுகிறது.

சில நாடுகளின் சில வித்தியாசமான சம்பிரதாயங்கள் பற்றி பார்ப்போம். என்ன வேலை செய்றீங்க? என்று கேள்வி கேட்பது அநாகரிகமான செயல் என்று அந்த நாட்டு சம்பிரதாயம் சொல்கிறது. சிவப்பு மையால் பெயர் எழுதுவதை கொரியாக் காரர்கள் அநாகரிகமான செயலாக கருதுகிறார்கள். அறிமுகம் இல்லாத பெண்களுக்கு உதவி செய்வதை பிலிப்பைன்ஸ்ஸில் அநாகரிகமான செயலாக கருதுகிறார்கள். தாய்லாந்து நாட்டில் தலையில் கை வைத்து வாழ்த்துவதை அநாகரிகமாக கருதுகிறார்கள். ஜப்பான் நாட்டில் குனியாமல் வணக்கம் சொல்லுதல் அநாகரிகமாக கருதப்படுகிறது. படுக்கை மெத்தையில் தொப்பியை வைப்பது அர்ஜெண்டினாவில் அநாகரிகமாக உள்ளது. எகிப்து நாட்டில் வெங்காயத்தை கொடுப்பது அநாகரிகம். கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் கையுறை அணிந்து கொண்டு கை குலுக்குவதை அநாகரிகமாக கருதுகிறார்கள். சீனாவில் கடிகாரத்தை பரிசாகக் கொடுத்தால் அநாகரிகமாக கருதப்படுகிறது. ஏனெனில் அது அந்நாட்டினருக்கு மரணச் சின்னமாகும். ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்லும் போது மேலே கையை தூக்கி அசைப்பது அநாகரிகமாக கருதப்படுகிறது.

நம் நாட்டிலும் அநாகரிகமாக கருதப்படும் சில விஷியங்கள் உள்ளது. அவை அனைத்துமே சாதி,
மத ரீதியில் மட்டும் உள்ளது தான் நம் நாட்டின் சாபக்கேடு.

Related Articles

அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குற... பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர்  குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள். பசிக்கும் போது பயமில்...
2018ல் ஜனவரி மாதமே இப்படி என்றால் மார்ச்... தமிழக அரசு போக்குவரத்துகழக ஊழியர்கள் போராட்டம், ஆண்டாள் குறித்த வைரமுத்து பேச்சு சர்ச்சைக்குள்ளானதால் இந்து மதத்தினர் போராட்டம், சூர்யாவின் உயரத்தைக்...
+2 மாணவர்களின் பெற்றோர்களே உஷார்! –... நாளை ( 16/05/2018) பண்ணிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. ரிசல்ட் என்றாலே அடுத்தநாள் பேப்பரை பார்க்க முடியாது. அவ்வளவு தற்கொலை ச...
ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) 2018 ஐபிஎல் அணி...  வரிசை எண் போட்டி எண் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டிகள் நேரம் இடம்1 4 9-ஏப்ரல் ஹைதராபாத் vs ராஜஸ்தான் 8:00 PM ஹைதராபாத் ...

Be the first to comment on "” என்ன வேலை செய்றீங்க? ” என்ற கேள்வி எழுப்புவது இத்தாலி நாட்டில் அநாகரிகச் செயல் – சில வித்தியாச சம்பிரதாயங்கள் மற்றும் சில கோயில் அதிசயங்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*