மூன்று மில்லியன் பேஸ்புக் பயனாளிகளின் தகவல்கள் கசிந்தன – நியூ சைன்டிஸ்ட்(New Scientist) இதழ் அறிக்கை

கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா(Cambridge Analytica) என்ற நிறுவனம் 87 மில்லியன் பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களைத் திருடி தங்களது வாடிக்கையாளர்களோடு பகிர்ந்துகொண்ட நிகழ்வு இணைய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருடப்பட்ட தகவல்களை கொண்டு இந்தியா , அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தேர்தல் முடிவுகளையே கூட அசைத்துப் பார்த்திருக்கிறது கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா நிறுவனம். இந்தச் சர்ச்சை ஓய்வதற்குள் மறுபடியும் மூன்று மில்லியன் பேஸ்புக் பயனாளிகளின் தகவல்கள் கசிந்திருப்பதாக நியூ சைன்டிஸ்ட் என்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இதழ் செய்தி வெளியிட்டு இருக்கிறது. கேம்பிரிட்ஜ் என்ற பெயருக்கும் பேஸ்புக் நிறுவனத்திற்கும் ஏழாம் பொருத்தம் போலிருக்கிறது, மற்றுமொரு பூதம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இருந்து கிளம்பி இருக்கிறது.

 

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் அலட்சியம்

மனிதர்களின் ஆளுமை குறித்து ஆராய்ச்சி செய்யும் திட்டப்பணி(Project) ஒன்றிற்காக மூன்று மில்லியன் பேஸ்புக் பயனாளிகளின் தகவல்கள் மை பர்சனாலிட்டி(myPersonaliy app) என்ற செயலியின் மூலம் பயனாளிகளிடமிருந்து பெறப்பட்டன. அப்படிப் பெறப்பட்ட தகவல்கள் அனைத்தும் தரவுகள் சேமித்து வைக்கும் தளமான(Data Sharing Portal) கிட்ஹப்பில்(GitHub) ஆராய்ச்சியாளர்கள் சேமித்து வைத்திருந்தனர். அதைப் பெயர் மற்றும் கடவுச்சொல்(Password) இட்டுப் பாதுகாத்தும் வந்தனர்.

இந்த நிலையில் மாணவர்கள் சிலருக்கு அந்தத் தரவுகளை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் கிட்ஹப் தள கணக்கின் கடவுச்சொல் தரப்பட்டது. இது நடந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மாணவர்கள் தளத்தின் பயனாளி பெயர் மற்றும் கடவுச்சொல்லை இணையத்தில் வெளிப்படையாக அறிவித்துவிட்டனர். இதனால் அந்தக் கடவுச்சொல்லை கொண்டு கிட்ஹப் தளத்தினுள் நுழைந்து யார் வேண்டுமானாலும் பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும். பேஸ்புக் பயனாளியின் கடவுச்சொல்லைக் கூட அறிந்துகொள்ள முடியும் என்று நியூ சைன்டிஸ்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் துணை தலைவர் இமே அர்ச்சிபோங் இது குறித்து தெரிவிக்கையில் ‘ஃபேஸ்புக்கின் கொள்கைகள் மீறப்பட்டிருக்கலாம் என்று நாங்கள் நம்புவதால் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்னரே மை பர்சனாலிட்டி  செயலியை இடைநீக்கம் செய்துள்ளோம்.தொடர்ந்து விசாரித்து வருகிறோம் மை பர்சனாலிட்டி  செயலி தரப்பில் இருந்து போதுமான அளவுக்கு விளக்கமோ, ஒத்துழைப்போ இல்லாத பட்சத்தில் செயலியை முற்றிலும் தடை செய்வோம்’ என்றார்.

பயனாளிகளின் தகவல்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாக கிட்டத்தட்ட 200 செயலிகளை பேஸ்புக் நிறுவனம் நீக்கியது. மேலும் பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் மற்ற செயலிகளின் செயல்பாடுகளையும் கண்காணித்து வருகிறது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், சைக்கோமெட்ரிக்ஸ் மையம் மற்றும் ஆராய்ச்சியாளர் அலெக்ஸாண்டர் கோகன் ஆகியோர் இந்தத் தகவல் கசிவு குறித்த கேள்விக்குப் பதிலளிக்கவில்லை.

‘நிறையச் செயலிகள் எங்களோடு இணைந்திருப்பதால், அது ஒவ்வொன்றையும் குறித்து விசாரிக்க நிறைய நேரம் பிடிக்கும். பயனாளிகளின் தகவல்களை பாதுகாக்க நிறைய முதலீடு செய்வோம். நிச்சயம் சிறப்பானதொரு கட்டமைப்பை உருவாக்குவோம்’ என்று பேஸ்புக் நிறுவனத்தின் துணை தலைவர் இமே அர்ச்சிபோங் மேலும் தெரிவித்தார்.

Related Articles

“ரெஸ்பெக்ட்” என்பது எவ்வளவு ... நடிகர் விஜய் ஆண்டனியின் இரண்டாவது படமான அதாவது ஹீரோவாக நடித்த இரண்டாவது படமான சலீம் படத்தில் ரெஸ்பெக்ட் என்ற வார்த்தையின் அர்த்தத்தை மிக ஆழமாக விளக்கி...
இலவசம் சரியானது என்பவர்களுக்கு சீமானின் ... தி. மு. க மற்றும் அ. தி. மு. க அரசு இரண்டும் மாற்றி மாற்றி இதுவரை இலவசமாக கொடுத்த பொருட்கள் என்னென்ன என பார்ப்போம். மதிய உணவுத் திட்டம்: ஏழைகள் சாப...
இசைக்குத் தாய்ப்பாலு நாதஸ்வரம்! – ... 2018ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்றது எழுத்தாளர் ராமகிருஷ்ணன் எழுதிய சஞ்சாரம் நாவல். இந்த வருட சென்னை புத்தக கண்காட்சியில் அந்தப் புத்தகம் அதிக...
2018ல் மீம் கிரியேட்டர்களுக்கு கன்டன்ட் ... கடந்த சில வருடங்களுக்கு முன்பு மீம் என்றால் என்ன என்றே தெரியாமல் இருந்தது. இன்று மீம் என்பது கலை வடிவமாகப் பார்க்கப் படுகிறது. பல சமூக மாற்றங்களும் சி...

Be the first to comment on "மூன்று மில்லியன் பேஸ்புக் பயனாளிகளின் தகவல்கள் கசிந்தன – நியூ சைன்டிஸ்ட்(New Scientist) இதழ் அறிக்கை"

Leave a comment

Your email address will not be published.


*