சென்னையில் 12 வயது சிறுமியை ஏழு மாதங்களாக சீரழித்த 17 ஆண் மிருகங்கள்!

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் வசித்து வந்த செவித்திறன் குறைபாடு கொண்ட 12 வயது பள்ளி மாணவியை, அவள் வசிக்கும் அபார்ட்மெண்டின் பல இடங்களில்  வைத்து அங்கு பணிபுரியும் காவலாளி, தோட்டாக்காரன், லிப்ட் ஆப்ரேட்டர் இவர்களின் நண்பர்கள் என 54,60,66,40,50,60,58,40,55,42,36,32,32,23,23,23,26 வயது உள்ள 17 பேர் சிறுமியை சீரழித்துள்ளனர்.

பள்ளி வாகனத்தில் இருந்து சிறுமி இறங்கியதும் அவளை நைசாகப் பேசி அழைத்து சென்று மது , போதை வஸ்து, மயக்க மருந்து என குளிர்பானங்களில் கலந்து, சிறுமியை நினைவிழக்க செய்து இந்தக் கொடுமைகளை அரங்கேற்றி இருக்கின்றனர்.

இப்படி கொடுமைகள் செய்தது மட்டுமின்றி பலாத்கார காட்சிகளை வீடியோ எடுத்து மிரட்டியதில் பயந்து போன சிறுமி, வீட்டில் இதை சொல்ல பயந்திருக்கிறார். ஆகவே 7 மாதங்களுக்கு மேல் தினசரி இந்த கொடுமைகள் தொடர்ந்திருக்கின்றன.

டெல்லி கல்லூரியில் படிக்கும் அந்தச் சிறுமியின் அக்கா வீட்டுக்கு வந்த பிறகு, அவரிடம் சொல்லி அழுதிருக்கிறார் அந்தச் சிறுமி. அதுவரை சிறுமியின் பெற்றோர்களுக்கு இந்த மிருகங்களின் வேட்டை பற்றி எதுவும் தெரியவில்லை.

POSCO  சட்டம் பத்தாது!

போலீஸ் விசாரணையில் அந்த 17 பேரும் அபார்ட்மெண்டில் காலி வீடுகள், ஜிம், மாடி, பாத்ரூம் என பல இடங்களில் வைத்து சிறுமியை கற்பழித்ததை  ஒத்துக்கொள்ள அவர்கள் அனைவரையும் கைது செய்து POSCO சட்டத்தில் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர் காவல்துறையினர்.

POSCO சட்டத்தில் 12 வயத்துக்குட்பட்டோர் கற்பழிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வரஇருக்கிறது. ஆனால் இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி 12 வயது நிறைவடைந்தவர். குற்றவாளிகளுக்கு 7 வருடங்கள் மட்டுமே கிடைக்கும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது போன்ற மிருகங்களுக்கு இந்த தண்டனை பத்தாது. கழுவேற்றம் செய்து அதனை 18+ வீடியோவாக பேஸ்புக், டுவிட்டர், வாட்சப் போன்றவற்றில் பதிவு செய்தால் தான் சில மிருகங்களுக்கு புத்தி வரும் என்று கருத்து தெரிவித்து உள்ளனர் நெட்டிசன்கள்.

Related Articles

பிரபஞ்சனின் மயிலிறகு குட்டி போட்டது புத்... புத்தகம் : மயிலிறகு குட்டி போட்டதுவகை : கட்டுரைத் தொடர் (புதிய தலைமுறை)ஆசிரியர் பற்றி...இயற்பெயர் : சாரங்கபாணி வைத்திலிங்கம்பிறந்த இடம...
வங்கி கணக்கு தொடங்க ஆதார் அவசியம் என்கிற... ஆதார் வழக்கில் கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கி இருந்தது. அதன்படி வங்கி கணக்கு மற்றும் கைப்பேசி எண்களுடன் ஆதாரை இணைக்க வேண்டிய கடைசி ந...
முதன்முறையாக நடக்கும் பதினோறாம் வகுப்பு ... பல தனியார் பள்ளிகளில் பதினோறாம் வகுப்பு படிக்க வேண்டிய காலத்திலயே பண்ணிரண்டாம் வகுப்பு பாடங்களை நடத்த தொடங்கிவிடுகிறார்கள். இதனால் மாணவர்கள் பண்ணிரெண...
“ருத்ர தாண்டவம்” படத்தால் உண... எந்தெந்த பத்திரிக்கைகள்"அறம்" தவறாமல் நடந்து கொள்கின்றன... எவையெல்லாம் ஜால்ட்ரா அடிக்கும் பத்திரிக்கைகளாக இருக்கின்றன என்பதை தெரிந்துகொள்ள முடிந்...

Be the first to comment on "சென்னையில் 12 வயது சிறுமியை ஏழு மாதங்களாக சீரழித்த 17 ஆண் மிருகங்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*