தமிழகத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து கட்டண உயர்வு! – மக்கள் அதிருப்தி!

tamil bus

கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 18-ல் பேருந்து கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டது.
அதையடுத்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது பேருந்து கட்டண உயர்வுக்கான
அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கட்டண உயர்வுக்கான காரணம்?

தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் 22.509 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, ஓய்வூதியம், டீசல் விலை உயர்வு போன்ற காரணங்களினால்
கூடுதல் செலவு ஏற்படுவதால் பேருந்துகளை முறையாக இயக்குவதற்கு தேவையான வருவாய்
ஈட்ட முடியவில்லை என்பதாலும் பேருந்துகளை பராமரிக்க இயலவில்லை என்பதாலும், இயக்க
செலவுகளைக் காட்டிலும் வருவாய் குறைவாக இருப்பதால் நாளொன்றுக்கு ஒன்பது கோடி
நஷ்டம் ஏற்படுவதாலும் பேருந்து கட்டணங்களை மாற்றி அமைக்க வேண்டிய சூழலுக்கு தமிழக
அரசு தள்ளப்பட்டுள்ளது.

சென்னை நீதிமன்ற இடைக்கால உத்தரவு!

கடந்த ஆண்டு நவம்பர் 24ம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில்
நீதிபதிகள் மணிக்குமார், கோவிந்தராஜ் ஆகியோரைக் கொண்ட அமர்வு, “தற்போதுள்ள
கட்டணம், இயக்கச் செலவுகளைக்கூட சந்திக்க போதுமானது அல்ல. அரசிடம் இருக்கும் நிதி
ஆதாரங்களை ஒப்பிடும்போது பராமரிப்புச் செலவு, கடன், இழப்பு, இதர பொருளாதாரக்
காரணிகள் உயர்வாகவே உள்ளன. எனவே, “பயணிகளுக்கு சுமையாக இருந்தாலும் கட்டண
உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டது” . போக்குவரத்து கழகங்கள் சிறப்பாக செயல்படுவது,
அரசு எடுக்கும் முடிவுகளைப் பொறுத்தது. எனவே ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கும்படி
உத்தரவிடுகிறோம்" என்று இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.

அரசு எடுத்த ஆக்கப்பூர்வமான முடிவு மக்களுக்கு உகந்ததா?

பேருந்து கட்டணம் உயர்வு குறித்த அரசு அறிவிக்கையின் படி பேருந்து கட்டணம் ஐம்பது முதல்
அறுபது சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் அன்றாடம் பேருந்து மூலமாக பொது
போக்குவரத்து மேற்கொள்ளும் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். “ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய்
ஏத்துனா பரவால… ஒரேயடியா டபுள் ரேட்டுக்கா டிக்கெட் விலைய ஏத்துறது… என்னம்மோ
போ… ” என்று தலையில் அடித்துக்கொண்டு புலம்புகின்றனர். இவர்களிடம் மாட்டிக்கொண்டு
வழி நடத்துனர்கள் படாதபாடு படுகிறார்கள். அரசு விலை உயர்த்தியதற்கு இவர்களை திட்டி
என்ன பயன்? சமூகவலைதளங்களிலும் இளைஞர்கள், தங்கள் பேருந்தில் பயணித்த போது எடுத்த டிக்கெட்டை புகைப்படம் எடுத்து, “என்னங்கடா… திருப்பி திருப்பி எங்களையே அடிக்குறிங்க… சாமான்ய மக்கள் வாழ முடியாது போல… ” என்று புலம்பி வருகின்றனர். போக்குவரத்துகழக ஊழியர்கள் போராட்டத்தின் போதும், பேருந்து கட்டண உயர்வின் போதும் அதிக பாதிப்பு பொதுமக்களுக்கு தான்.

Related Articles

“மக்களே”, “ஒரு வேல இரு... யூடியூப் என்ற விஷயம் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக நம்ம ஆட்களுக்குத் தெரிய வருகிறது. இந்தியா கிளிட்ஸ், பிகைன்ட்வுட்ஸ் போன்ற சினிமா செய்தி கம்பெனிகள் கொஞ்சம் ...
கேப் டவுணைப் போல் பாலைவனமாக மாறி வருகிறத... தென் ஆப்ரிக்காவின் இரண்டாவது பெரிய நகரம் கேப் டவுண். உலகின் பிரதான நகரமான இது தற்போது முழுக்க முழுக்க பாலைவனமாக மாறியுள்ளது. இந்தப் பகுதியில் உள்ள நாற...
தனுஷ் படங்களும் ஆனந்த விகடன் மதிப்பெண்கள... புதுப் பேட்டை - 45 திருவிளையாடல் ஆரம்பம் - 41 பொல்லாதவன் - 43 யாரடி நீ மோகினி - 42 உத்தமபுத்திரன் - 41 ஆடுகளம் - 44 வேங்கை - 37 ...
சார்பட்டா திரைவிமர்சனம்! ...  ஒரு சில படங்களை பார்த்தால் ஏண்டா பார்த்தோம் என்று இருக்கும் ஒரு சில படங்களை பார்த்தால் இந்த மாதிரி படங்களை நல்ல வேளை பார்த்து விட்டோம் என்று தோன்றும்...

Be the first to comment on "தமிழகத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து கட்டண உயர்வு! – மக்கள் அதிருப்தி!"

Leave a comment

Your email address will not be published.


*