கடந்த 2015ம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தில் 2016ம் ஆண்டு 73 நகரங்கள், 2017ஆம் ஆண்டு 434 நகரங்கள், 2018ஆம் ஆண்டு 4 ஆயிரத்து 41 நகரங்கள் பங்கேற்றன. இதில் தூய்மையான நகரங்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்து எடுக்கப்படுகிறது. அதிகாரிகளின் கள ஆய்வுக்கு தனி மதிப்பெண், மக்களின் கருத்துக்கு தனி மதிப்பெண், அரசு ஆவணங்களுக்கு தனி மதிப்பெண் என்று பலவித ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. அவ்வாறு இந்த ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியல் மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்டு உள்ளது.
இதில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தூர் மாவட்டம் இந்த ஆண்டு பிடித்து உள்ளது. கடந்த ஆண்டும் இந்தூர் மாவட்டம் தான் முதலிடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. போபால் இரண்டாவது இடமும் கடந்த பதினோறாம் இடத்தில் இருந்த சண்டிகர் இந்த ஆண்டு மூன்றாம் இடத்தைப் பிடித்து உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு முதல் பத்து இடங்களுக்குள் இடம்பெற்ற திருச்சி மாவட்டம் பற்றி எந்த அறிவிப்பும் இல்லாததால் அம்மாவட்ட அதிகாரிகள், அலுவலர்கள் லேசாக ஏமாற்றம் அடைந்து உள்ளனர். தற்போது முதல் மூன்று இடங்களை மட்டுமே மத்திய அரசு அறிவித்து உள்ளதால் நிச்சயம் இடம் பிடிக்கும் என்று அவர்கள் நம்பிக்கை உடன் இருக்கின்றனர். இடத்தைப் பிடிக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். அதே சமயம் இது மத்திய அரசின் பட்டியல் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மற்ற தனியார் நிறுவன அமைப்பு, பல வெளிநாடுகளின் ஆய்வுகளைப் பொறுத்தவரை இந்தியா மிகுந்த மாசு அடைந்த நாடு. சுருங்கச் சொன்னால் குப்பை நாடு.
Be the first to comment on "தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் உள்ளான இடத்தைப் பிடிக்குமா திருச்சி?"