தெரிந்தோ தெரியாமலோ தவறுகள் செய்து சிறை வாழ்வை அனுபவித்து வரும் கைதிகளை நல்வழிப்படுத்த அரசு சார்பிலும், தனியார் அமைப்பு சார்பிலும் நாடு முழுவதும் பல்வேறு நல்லெண்ண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறையில் இருந்துகொண்டே தடைப்பட்ட படிப்பைத் தொடர்வது, கைதிகளுக்கு யோகா கற்றுத்தருவது எனப் பல முன்னுதாரணங்களைச் சொல்லலாம். அதன் ஒருபகுதியாக மஹாராஷ்ட்ரா மாநிலம் அகமதுநகர் சிறையில் கைதிகளுக்காக உள் வானொலி நிலையம் ஒன்றை அமைத்துத் தந்திருக்கிறது சிறை நிர்வாகம்.
கைதிகளால், கைதிகளுக்காக ஒரு வானொலி நிலையம்
மறுவாழ்வு மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சிறையில் கைதிகளுக்காக, கைதிகளே நடத்தும் ஒரு உள் வானொலி நிலையம் அமைத்துத் தந்திருக்கிறது அகமதுநகர் சிறை நிர்வாகம்.
இது குறித்து சிறை கண்காணிப்பாளர் என்.எஸ்.சவந்த் பேசுகையில் ‘தங்களுக்கு விருப்பமான பாடல்களை கேட்பது, சுகாதாரம் மற்றும் ஆன்மீக பாடல்களை ஒலிபரப்பும் நிகழ்ச்சிகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு செய்வதற்காக ஒவ்வொரு பட்டயத்திலும் ஒலிபெருக்கிகள் நிறுவப்பட்டு இருக்கின்றன.’கைதிகளின் மனதை எதிர்மறையில் இருந்து திசை திருப்ப மற்றும் அவற்றை நேர்மறையான பாதையைத் தேர்வு செய்ய உதவுவதற்கு இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது,” என்று மூத்த ஜெயிலர் ஷாம்கந்த் சேட்ஜ் கூறினார்.
Be the first to comment on "கைதிகளுக்காக வானொலி நிலையம் அமைத்துத் தந்தது மகாராஷ்ட்ரா சிறை நிர்வாகம்"