தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் அரசுப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் என்னென்ன?

differences and similarities between private public school teachers

சமீபத்தில் முகநூலில் ஒருவர், தனியார் பள்ளியில் வாத்தியார் வேலை பார்ப்பதற்கு பேசாமல் நாலு ஆடு மாடு வாங்கி மேய்க்கலாம் என்று பதிவிட்டிருந்தார். அதற்கு பலர் ஹா ஹா ரியாக்சன் தர மற்ற சிலர் சோ சேட் ரியாக்சன் தந்தனர்.

தலைப்பைப் பார்த்து பெரிதாக என்ன ஒற்றுமை வேற்றுமைகள் இருக்கப் போகிறது எல்லாம் ஓப்பி அடிக்குற கேசுங்க தான் என்று பலர் கூறலாம் அல்லது இருவருடைய நிலமையும் ஐயோ பாவம் நிலமை தான் என்று கூறலாம்.

ஆனால் உண்மையில் தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களைக் காட்டிலும் மிகுந்த மன உளைச்சலை சந்திக்க வேண்டி இருக்கிறது. நிர்வாகம் அவர்களைப் பாடாய் படுத்துகிறது. அதனாலயே மாணவ மாணவிகளிடம் ஆசிரியர்களால் ப்ரெண்ட்லியாகப் பழக முடிவதில்லை. அப்படி இருந்தும் சில ஆசிரியர்கள் பல்லைக் கடித்துக் கொண்டு மாணவ மாணவிகளை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அரசுப்பள்ளியில் அப்படி இல்லை. ஒரு சில பள்ளிகள் நேர்மையாக செயல்பட்டாலும் பெரும்பாலான பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் ஓப்பி அடிக்கிறார்கள் என்பது தான் உண்மை. மாணவர்களிடம் சுதந்திரமாக ப்ரெண்ட்லியாகப் பழக முடியும் என்ற சூழல் இருந்தாலும் அவர்கள் அதை செய்வதில்லை. பகவான்கள் மிகச் சிலரே இருக்கிறார்கள். அப்படியே இருந்தாலும் அவர்களை மற்ற ஆசிரிய ஆசிரியையகள் சும்மா விடுவது இல்லை.

தனியார் பள்ளியில் ஆசிரியரின் வேலையை ஆசிரியர் தான் செய்ய வேண்டும். சில சமயம் அட்டண்டர் செய்யக் கூடிய வேலையைக் கூட ஆசிரியர்களே செய்ய வேண்டிய சூழல் இருக்கும்.

ஆனால் அரசுப்பள்ளியில் ஆசிரியரின் வேலையைக் கூட மாணவர்கள் தான் செய்கிறார்கள். சில சமயம் துப்புரவு தொழிலாளிகள் செய்ய வேண்டிய வேலையை மாணவர்களை செய்ய வைக்கிறார்கள் ஆசிரியர்கள்.

அரசுப்பள்ளியில் சாதி வேறுபாடு பார்ப்பார்கள், பார்க்கிறார்கள். தனியார் பள்ளியில் பணம் தான் முதன்மை குறி என்பதால் சாதி பாகுபாடு பெரிதும் இல்லை என்றே கூற வேண்டும். அந்த விதத்தில் தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் நிம்மதி கொள்கிறார்கள்.

Related Articles

அப்பான்னா இப்படி இருக்கணும்! – சாத... இந்தி டிவி சீரியல், இந்திப் படங்கள், மணிரத்னம் படங்கள், கமல், சீமானுடன் படங்கள் என்று படிப்படியாக உயர்ந்த நடிகர் மாதவன் இந்திய சினிமா உலகில் தவிர்க்க...
மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் பணியாளர்க... மார்ச் 8 ஆம் தேதி நாடெங்கிலும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களின் தியாகங்களை போற்றும் விதத்திலும், அவர்களின் சாதனைகளை அடையாளப்படுத்தும் ...
இந்திய கல்விமுறை குறித்து நடிகர் சூர்யாவ... முப்பது கோடி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் புதிய கல்வி கொள்கையை நிறைவேற்ற ஏன் இத்தனை அவசரம்? மூன்று வயது குழந்தையால் மூன்று மொழி படிக...
அசுரன் பாடல்கள் தேசிய விருது வெல்லுமா &... பாடலாசிரியர் யுகபாரதி எழுதிய பாடல்கள்பாடலாசிரியர் யுகபாரதி இந்தப் படத்தில் பொல்லாத பூமி, எள்ளு வய பூக்கலையே, கண்ணழகு ரத்தினமே என மூன்று பாடல்களை எ...

Be the first to comment on "தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் அரசுப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் என்னென்ன?"

Leave a comment

Your email address will not be published.


*