இந்த தலைப்பை பார்த்ததும் எத்தனை பேர் பிரேசர்ஸ், பார்ன்ஹப், எக்ஸ்என்எஸ்எஸ்,
எக்ஸ்வீடியோஸ் பக்கங்களுக்கு விரைந்தீர்கள் என்பது தெரியவில்லை. ஆனால் சர்வதேச
அளவில் என்றதும் இந்த நான்கு இணையதள பக்கங்களின் பெயர்களும் மொட்டைத் தலை ஜானி
அண்ணனின் முகமும் கட்டாயம் நினைவுக்கு வந்து சென்றிருக்கும் என்பது மட்டும் உறுதி.
“மாப்ளைக்கு அவ்வளவு வெறி” என்பது போல் அவ்வளவு சபலம் நமக்கு!
827 ஆபாச இணைய தள பக்கங்களை இந்திய அரசு முடக்கம் செய்துள்ளது! என்ற செய்தியைக்
கேட்டதும் அதிர்ச்சியடையாத இந்திய இளைஞர்களே இருக்க மாட்டார்கள். அய்யய்யோ
முடக்கம் செய்துட்டாங்களே என்ற வேதனையைக் காட்டிலும் என்னது இவ்வளவு இணையதள
பக்கங்கள் இருந்துச்சா… இவ்வளவு நாள் இது தெரியாம போயிடுச்சே எனக்கு… என்று
வியப்பவர்கள் தான் உண்டு.
இந்தியாவில் ஆபாச தளங்களை முடக்க வேண்டும் என்று பல நாட்களாகவே பேச்சு
அடிபட்டுக்கொண்டு இருந்தது. இந்தியாவின் பிரபல எழுத்தாளர் ஒருவர் அதற்கு எதிர்ப்பு
தெரிவித்திருந்தார். ஆனால் நாட்டில் நடக்கும் சில கொடூர சம்பவங்களை வைத்து கட்டாயம்
அந்தப் பக்கங்களை முடக்கம் செய்தே ஆக வேண்டும் என்று தான் பெரும்பான்மையோனோர்
விரும்பினர்.
“செக்ஸ்” என்ற அற்புதமான அழகான விஷியத்தை ( இயக்குனர் பாக்கியராஜே செக்ஸ்
அழகானது என்று தான் கூறி இருக்கிறார்!) ஆபாசமாக படம் பிடித்து இணைய தளங்களில்
வெளியிட்டு ஏராளமான நிறுவனங்கள் வியாபாரம் செய்கிறது. இப்படிபட்ட சில நிறுவனங்கள்
சர்வதேச அளவில் எந்த தடையும் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிறுவனங்களின் இணைய தளங்களுக்கு சில நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. சில
நாடுகளில்
குழந்தைகளை, பள்ளி சிறுமிகளை ஆபாசமாக காட்டக்கூடிய படங்கள் மட்டும் தடை
செய்யப்பட்டிருந்தது. இன்னும் சில நாடுகளில் அந்தரங்க உறுப்புக்களை "ப்ளர்" செய்யாமல் வெளியிடப்படும் வீடியோக்களுக்கு மட்டும் தடை இருந்தது.
இந்நிலையில் ஆபாச இணைய தளங்களை முடக்கும்படி உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில்
வழக்கு ஒன்று தொடரப்பட்டு இருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் 857 ஆபாச இணைய
தளங்களை முடக்கும்படி போன மாதம் 27-ந் தேதி உத்தரவிட்டிருந்தனர்.
இதையடுத்து மத்திய எலெக்ட்ரானிக் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அவற்றை
முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்தது. உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட 857
ஆபாச தளங்களை ஆய்வு செய்ததில் 30 தளங்களில் ஆபாச படங்கள் இல்லை. மீதி 827
தளங்களில் ஆபாச படங்கள் இருந்திருக்கின்றன.
அதை தொடர்ந்து அந்த 827 தளங்களை மட்டும் முடக்கும்படி மத்திய எலெக்ட்ரானிக் தகவல்
தொழில்நுட்பத்துறை டெலிபோன் துறைக்கு உத்தரவிட அந்த துறை இணையதள வசதிகள்
வழங்கும் அனைத்து டெலிபோன் நிவனங்களுக்கும் ஆபாச தளங்களை முடக்குமாறு
உத்தரவிட்டுள்ளது. தற்போது அந்த தளங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதற்கு தடை எதுவும் இல்லாமல் இருக்கிறதே, ஏற்கனவே நம் நாட்டில்
கற்பழிப்புகள் அதிகம் நடந்து வரும் சமயத்தில் ஜியோ இலவச நெட்டை தர ஆபாச இணைய
தளங்களின் பார்வையாளர்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது என்று சில சமூக ஆர்வலர்கள்
உண்மையிலயே மனம் வருந்தி இருக்கின்றனர். அப்படிபட்டவர்களுக்கு இது ஒரு நற்செய்தியே!
ஆனால் இந்த ஆபாசங்களுக்கு அழிவே இல்லை என்பது தான் உண்மை.
அழிக்க முடியாதவை:
என்ன தான் அரசு நடவடிக்கை எடுத்தாலும் இது மீண்டும் பரவக் கூடிய நச்சு. ஏற்கனவே
இணைய தளங்களில் இருந்த வீடியோக்களை பலர் டவுன்லோட் செய்து டன் கணக்கில் ஹார்ட்
டிஸ்கில் சேகரித்து வைத்து இருக்கிறார்கள். இந்த வீடியோக்களை மீண்டும் புதிதாக
தொடங்கப்பட்ட தளத்தில் பதிவிடப்படலாம் அல்லது வேறொரு உருவத்தில் தலை
விரித்தாடலாம் என்ற அச்சமும் இருக்கிறது.
ஆபாச வீடியோக்கள் என்ற விஷக் கிருமிகள் பரவியது பரவியது தான். இனி பரவாமல் இருக்க
தொடர் முயற்சி எடுப்பது தான் அவசியம்!
Be the first to comment on "சர்வதேச அளவில் செயல்பட்டு வந்த ஆபாச இணையதள பக்கங்களுக்கு இந்தியாவிலும் தடை! – Singles அதிர்ச்சி!"