ஆண்கள் கெட்ட வார்த்தை பேசினால் கெத்து! பெண்கள் கெட்ட வார்த்தை பேசினால் அபச்சாரமா?

Men Speaking Bad Words Does not Matters but It is a big Deal if Womens Speak

வடசென்னை படம் நல்ல வசூலைப் பெற்றதோ இல்லையோ மிகுந்த எதிர்ப்பை சம்பாதித்து
வருகிறது. காரணம் வடசென்னை மக்களை பற்றி இழிவாக சித்தரிக்கும் காட்சிகள் இப்படத்தில்
பல உள்ளது என்பது தான். மற்றொரு காரணம் காட்சிக்கு காட்சி கெட்ட வார்த்தை நிரம்பி
இருக்கிறது. இந்த காரணங்களால் வடசென்னை படம் வடசென்னை மக்களிடம் இருந்து பலத்த
எதிர்ப்பை சம்பாதித்து உள்ளது. அதையடுத்து வெற்றிமாறன் வடசென்னை பகுதி மக்களிடம்
மன்னிப்பு கேட்டுள்ளார். அவர்களின் மனதை புண்படுத்திய ஆண்ட்ரியாவின் டாப்லெஸ்
காட்சியை நீக்கிவிடுகிறோம் என்று அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தன் தவறை
ஒப்புக்கொண்டுள்ளார்.

எதெல்லாம் கெட்ட வார்த்தை:

தமிழ் மட்டுமல்ல பெரும்பாலான மொழிகளில் கெட்டவார்த்தைகளாக இருப்பது “தாய்மை”
பற்றிய இழிவான சொற்களே. அதற்கடுத்தது அவர்களின் உடல் அங்கங்களை குறிக்கும்
சொற்கள் கெட்ட வார்த்தைகளாகப் பார்க்கப்படுகிறது.

கெட்டவார்த்தைகள் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் தன் வலை தளத்தில் கட்டுரை ஒன்று
எழுதியுள்ளார். அவராலே நிறைய வார்த்தைகளை நேரடியாக எழுத முடியாத அளவுக்கு
வார்த்தைகள் கொச்சையானதாக இருக்கிறது. அதற்கடுத்து ஸ்மைல் சேட்டை குழுவினர் ஸ்மைல் ஓட்ஸ் என்ற யூடியூப் சேனலில் கெட்ட வார்த்தைகள் எப்படி பிறந்தது என்பதை தெளிவுபடுத்தும் வகையில் சில வீடியோக்களை பதிவு செய்து உள்ளார்கள். இவர்களுடைய பதிவுகளில் இருந்து பார்க்கும்போது கெட்டவார்த்தைகளின் நோக்கம் தாய்மையை இழிவு படுத்துவதே மட்டுமே என்பது தெரிய வருகிறது.

ஒருவனை நமக்குப் பிடிக்கவில்லை என்றால் உடனே நாம் அவனை திட்டுவதில்லை. காரணம்
அவனிடம் அவனைப் பற்றி திட்டினால் சுரணை இருக்காது. ஆதலால் அவனுடைய பிறப்பை,
அம்மாவை திட்டினால் அவனுக்கு கோபம் சுர்ரென்று ஏறும். இப்படித்தான் கெட்ட வார்த்தைகள்
பிறந்தது என்றுகூட சொல்லலாம்.

பெண்களின் பிறப்புறுப்பு:

தமிழகம் முழுக்க எல்லா வயதினராலும் பெரும்பான்மையாக பேசப்பட்டும் கெட்டவார்த்தை
“புண்டை”. புண்டை என்பது பெண்களின் பிறப்புறுப்பை குறிப்பதாகச் சொல்கிறார்கள்.

ஒருவனை வார்த்தையால் காயப்படுத்த வேண்டும் என்றால் அந்த வார்த்தை படு
உணர்ச்சிகரமான வார்த்தையாக இருக்க வேண்டும். அதற்காக தேர்ந்து எடுக்கப்பட்டது தான்
பெண்ணின் பிறப்பு உறுப்பு பற்றிய இந்த புண்டை என்ற வார்த்தை .

“புண்டைய நக்கி” “புண்டா மவனே” :

இந்த சொல் முன்பு அதிகம் பேசப்பட்டது. இப்போது புண்ட என்பதோடு நிறுத்திக்
கொள்கிறார்கள். அதிலும் கேன, மொன்ன, பே, திருட்டு, லூசு, இழிச்சாவா போன்ற
வார்த்தைகளின் பின்னொட்டாக சேர்த்துக்கொண்டு வகைவகையாக மாறிமாறி தங்களின்
அம்மாக்களை இழிவுபடுத்திக் கொள்கிறார்கள்.

வெளி உலகை சமாளிக்க முடியாமல் பயந்துபோய் வீட்டுப் பெண்களின் பாவாடைக்குள்
நுழைந்து கிடப்பவனே, உன்னால் அந்த இடத்தில் வாயால் மட்டுமே வேலை செய்ய முடியும்
என்ற பொருள்கள் தருகிறது இந்த இரண்டு வார்த்தைகள்.

அதே பிறப்புறுப்பை குறிக்கும் இன்னொரு வார்த்தை தான் கூதி. இந்த வார்த்தையையும் கேன,
மொன்ன, கிறுக்கு, பேக்கு, லூசு போன்ற வார்த்தைகளின் பின்னொட்டாக
சேர்த்துக்கொள்கிறார்கள்.

எல்லோரும் கேவலமாக நினைக்கும் இந்த உறுப்பு மட்டும் இல்லை என்றால் இந்த உலகத்தில்
எவனும் பிறந்திருக்கவே முடியாது. அப்படி இருக்கையில் இந்த உறுப்பை இழிவுபடுத்துவதன்
மூலம் நம்முடைய பிறப்பை நாமே இழிவுபடுத்திக் கொள்கிறோம் என்பது புரிய வருகிறது.

சூத்து, குண்டி இந்த இரண்டு சொற்களும் மலத்துவாரத்தை குறிக்கிறது. உடல்கழிவை
வெளியேற்றும் இந்த உறுப்பு இல்லையென்றால் உடல்நாறிவிடும். அப்படி இருக்கையில் இந்த
உறுப்பை குறிக்கும் சொற்களை கெட்ட வார்த்தைகளாக மாற்றி வைத்திருக்கிறோம் என்பது
அபத்தம்.

ஆண்களின் பிறப்புறுப்பு:

குஞ்சு, சுன்னி, பூலு போன்ற வார்த்தைகள் சிறுநீர் கழிக்க உதவும், உடலுறவு வைத்துக்கொண்டு
தன் இணையின் உடலுக்குள் தன் விந்தணுவை செலுத்துவதற்கு உதவும் ஆணுறுப்பை குறிக்கிறது. இந்த மூன்று வார்த்தைகளில் குஞ்சு என்ற சொல்கூட கெட்ட வார்த்தையாகப்
பார்க்கப்படுவதில்லை. ஆனால் சுன்னி, பூலு இரண்டும் கெட்ட வார்த்தைகளாக மாறிவிட்டது.
ஏற்கனவே சொன்னதுபோல் ஒருவனுடைய பிறப்பை இழிவுபடுத்துவது தான் இந்த
வார்த்தைகளின் நோக்கம். இந்த உறுப்புகள் இல்லையென்றாலும் இங்கு எவனும் பிறந்திருக்கவே
முடியாது.

தாயை இழிவுபடுத்தும் சொற்கள்:

ஒழுக்கம் கெட்டவனே நீ ஒழுக்கம் கெட்ட அம்மாவுக்குப் பிறந்ததால் தான் இப்படி இருக்கிறாயா?
உன் அம்மா உன்னை ஒழுக்கமாக இருந்து தான் பெற்றாளா? ஒழுக்கமாக இருந்து
விவரமாகத்தான் வளர்த்தாளா? என்று திட்ட வேண்டிய இடத்தில் நாம் தாய்மையை கொச்சைப்
படுத்தும் சொற்களை பயன்படுத்துகிறோம்.

கண்டாரோளி மவனே, தேவுடியா மவனே, தாயோளி, ஓத்தா, உங்கம்மால நடுரோட்ல படுக்கப்
போட்டு நாலு பேர் ஓக்க போன்ற வார்த்தைகள் எல்லாம் தாய்மையை இழிவுபடுத்தும் உச்சகட்ட
வார்த்தைகள்.

கெட்ட வார்த்தைகள் யார் பேசினால் கெத்து? யார் பேசினால் அபச்சாரம்?

ஆண்கள் கெட்ட வார்த்தை பேசலாம் தப்பு இல்லை என்கிறார்கள்!
அதெப்படி திமிங்கிலம் ஆம்பள கெட்ட வார்த்த பேசுனாலும் பொம்பள கெட்ட வார்த்த
பேசுனாலும் தப்பு தப்பு தான? என்று அவர்களிடம் கேள்வி எழுப்ப தோன்றுகிறது.

கோபத்தின் வெளிப்பாடாகவே அவர்கள் கெட்ட வார்த்தை பேசுகிறார்கள் என்பது ஒரு பக்கம்
இருக்க, நிறைய இளைஞர்கள் கெட்ட வார்த்தை பேசுவது கெத்து என்று எண்ணிக்கொண்டு
இருக்கிறார்கள். இவர்களை பெரும்பாலும் யாரும் கண்டிப்பது இல்லை. காரணம் கண்டிக்கும்
அளவுக்கு யாரும் யோக்கியன் இல்லை. ஆம்பள ஆயிட்டான் இனி வார்த்த பேசுனா என்ன?
பேசாதன்னு சொன்னா மட்டும் திருந்தவா போறான்? எப்படியோ போவட்டும் என்று
விட்டுவிடுகிறார்கள்.

இதே வார்த்தைகளை இளைஞிகள் பேசினால் உடனே அவளை கெட்ட பொண்ணு என்றும்
ஒழுக்கம் கெட்டவள் என்றும் பேசத் தொடங்கி விடுகிறோம். சூவ மூடு, பொச்ச சாத்து என்று
இளைஞிகளும் பொது இடங்களில் கெட்ட வார்த்தை பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

இப்படி அன்றாடம் பேசும் வார்த்தைகளோடு வார்த்தையாக கலந்திருக்கும் இந்தக் கெட்ட
வார்த்தைகளை சினிமா தான் இந்த சமூகத்திற்கு கற்றுத் தந்ததா? சினிமாவில் கெட்ட வார்த்தை
பேசினால் பலர் கெட்டவார்த்தை பேசுவது சகஜம் என்று எடுத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது
என்கிறார்கள். இதில் ஓரளவுக்கு உண்மையும் இருக்கிறது. ஆனால் கெட்ட வார்த்தைகள்
சினிமாவில் மட்டுமே கற்பிக்கப்படுவது இல்லை. நம் வீடுகளில் உள்ள நம் தாய், தந்தை,
அண்ணன், தம்பி, அக்கா, மாமா, தாத்தா, பாட்டி, நண்பன், பொது இடங்களில் சண்டை
போடுபவர் போன்றோரிடம் இருந்து தான் கற்றுக் கொள்கிறோம் என்பது தான் உண்மை.

வீட்டினர் பேசும் கெட்டவார்த்தைகள்:

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நடக்கும் சண்டையில் பெரும்பான்மையாக அப்பாவின் குரல் ஓங்கி
இருக்கும். அம்மாவின் குரல் கதறலாக இருக்கும். இந்த ஓங்குதலுக்கும் கதறதலுக்கும் இடையில்
பரிமாறிக்கொள்ளும் வார்த்தைகளை கேட்டால் "why blood, same blood" வடிவேலு கதிதான் நமக்கு.

அப்பா அம்மாவை முண்ட, மூதி என்று திட்டுகிறார். அம்மா அப்பாவை அந்த இந்த மவனே,
பொட்ட நாயே என்று திட்டுகிறார். இப்படி பிள்ளைகளுக்கு கெட்ட வார்த்தை கற்றுத் தருவது
அம்மா அப்பாக்கள் தான்.

அவர்கள் இருவரும் தங்கள் பிள்ளைகளை எப்படிபட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டுகின்றனர்.
வயதுக்கு வந்த மகள் போன் உபயோகித்தாலே போதும் உடனே ஓடுகாளி முண்ட, கூதி
கொழுப்பு எடுத்து திரியுறியா, புண்ட அரிப்பெடுக்குதா என்று திட்டுகிறார்கள் அம்மா அப்பாக்கள். மகன் தங்களுடைய பேச்சைக் கேட்காவிட்டால் திமிரு எடுத்து திரியுறான், ஊதாரி, நாதாரி என்று திட்டுவதோடு சுன்னிகிட்ட மயிர் முளைக்க ஆரம்பிச்சிடுச்சு அவரு நம்ம பேச்ச கேட்பாரா என்றும் தாயோளி என்றும் திட்டித் தீர்க்கிறார்கள். இந்த வார்த்தைகளை கேட்க முடியாமல் மகன்களும் மகள்களும் திருப்பி அவர்களை கெட்ட வார்த்தையில் திட்டினால் அவ்வளவு தான். அவனை தேசத்துரோகியை பார்ப்பது போல் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். வடசென்னை படத்தில் பத்மாவின் தம்பி தன் அப்பாவை கெட்ட வார்த்தையால் திட்டி அடிக்கும் காட்சி கற்பனை அல்ல. வட சென்னையில் மட்டும் இப்படி நடப்பது இல்லை. தமிழகம் முழுக்க இது போன்ற சம்பவங்கள் நடந்துகொண்டு தான் இருக்கிறது.

அம்மா அப்பா தங்கள் மகன் மகள்களை கெட்ட வார்த்தை பேசினால் தப்பு இல்லை. ஆனால்
மகன் மகள்கள் தங்கள் அம்மா அப்பாக்களை கெட்ட வார்த்தை பேசினால் அது உலக மகா பாவம்
என்பது எந்த விதத்தில் நியாயம்.

சின்னவன் பெரியவன் என்று யார் பேசினாலும் கெட்ட வார்த்த கெட்ட வார்த்தைதானே திமிங்கிலம்?

Related Articles

நிலம் பூத்து மலர்ந்த நாள் புத்தக விமர்சன... ஒரு சில புத்தகங்களை ஒருமுறை படித்த பிறகு அதை மூலையில் கடாசி விடுவோம். உள்ளே இருக்கும் விசியம் அவ்வளவு சுவாரஸ்மற்றதாக பயனற்றதாக இருக்கும். ஒரு சில புத்...
இரா. பார்த்திபன் ஒரு பார்வை! – காந... இப்போது வரும் இளம் தலைமுறையினர் ஏதாவது ஒரு சின்ன விஷயத்தில் வெற்றி பெற்றுவிட்டாள், ஏதோ அவர்கள் பெரிய சாதனையை படைத்து விட்டது போல், உடனடியாக அடுத்தவர்க...
பகுத்தறிவுள்ள அம்மாக்களால்தான் சாதி, மத,... இயக்குனர் ராம் பத்திரிக்கையாளர் ஜெயராணி கவிஞர் மனுஷ்ய புத்திரன் ஜோதிமணி இசை தமிழ்நதி ஆதவன் தீட்சண்யா தமயந்தி ஜி. ...
மனசுல அலைபாயுதே மாதவன்னு நினைப்போ! ̵... பெண் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு உரிய பதிலை அளிக்காமல் அவரை கேலி செய்யும் விதமாக பதிலளித்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர்.அதி...

Be the first to comment on "ஆண்கள் கெட்ட வார்த்தை பேசினால் கெத்து! பெண்கள் கெட்ட வார்த்தை பேசினால் அபச்சாரமா?"

Leave a comment

Your email address will not be published.


*