உங்கள் வீட்டு மின் சாதனங்களுடன் பேசும் வசதியை அறிமுகம் செய்யவிருக்கிறது கூகுள்

google may help you talk to AC's fans and more

இணையதள சந்தையில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளக் கூகுள் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது நுகர்வோர் சாதனங்களுடன் கூகுள் நிறுவனத்தின் குரல் உதவியாளரை (Voice Assistant) இணைக்கும் பேச்சுவார்த்தையை இந்திய நிறுவனங்களுடன் கூகுள் மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் வீட்டிலிருக்கும் குளிர்சாதன கருவி, மின்விளக்குகள், மின் விசிறிகள் மற்றும் ஸ்விட்சுகளை குரல் வழி கட்டளைகள் (Voice Commands) மூலம் கட்டுப்படுத்த முடியும். தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் தங்கள் சந்தாதாரர்களுக்கு குரல் உதவியாளர் சேவையை வழங்கும் திட்டத்தை பற்றியும் கூகுள் பேசி வருகிறது. இதன்மூலம் சந்தாதாரர்கள் தங்களது பில்கள் மற்றும் மாதாந்திர திட்டங்களை தெரிந்துகொள்ள இயலும்.

இந்திய சந்தையில் கவனம்

இந்தியாவில் ஆண்ட்ராய்டு திறன்பேசி பயன்படுத்துபவர்களை மனதில் வைத்தே இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. திறன்பேசி பயன்பாட்டாளர்களில் 98% பேர் ஆண்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தையே பயன்படுத்துகின்றனர். அமேசான் நிறுவனத்தின் எக்கோ குரல் உதவியாளருக்குப் போட்டியாகவே கூகுள் நிறுவனம் தனது குரல் உதவி ப்ளூடூத் ஸ்பீக்கர்களை (Voice Assistant Bluetooth Speakers) முன்பு அறிமுகப்படுத்தியது.

‘கூகுள் நிறுவனத்தைப் பொறுத்த வரையில் இந்தியா மிகப்பெரிய சந்தை. இந்தியாவில் அதிக அளவில் ஆண்ட்ராய்டு திறன்பேசியை மக்கள் பயன்படுத்துகின்றனர். அது மட்டுமல்லாமல் கூகுள் உதவியாளருக்கான தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது’ என்று தயாரிப்பு நிர்வாகத்தின் துணைத் தலைவர் மற்றும் கூகிள் நிறுவனத்தில் வீட்டுப் பொருட்களின் பொது மேலாளர் ரிஷி சந்திரா தெரிவித்தார்.

‘ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை உருவாக்க நிறைய உள்ளூர் இந்திய உற்பத்தியாளர்களுடன் சேர்ந்து நாங்கள் மேலும் பணியாற்ற இருக்கிறோம். வீட்டிலுள்ள முக்கிய உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் நிறையக் குரல் செயலாக்கம் அடிப்படையில் உருவாக்கப்படும். இந்தியாவில் ஒரு பெரிய முதலீட்டைக் கூகுள் நிறுவனம் செய்யவிருக்கிறது’ என்று மேலும் அவர் தெரிவித்தார்.

ஆர்வம் காட்டும் இந்திய நிறுவனங்கள்

கூகுள் எந்தெந்த இந்திய நிறுவனங்களுடன் பேசி வருகிறது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இருப்பினும் ஜியோமி, மைக்ரோமேக்ஸ் மற்றும் இன்டெக்ஸ் போன்ற நிறுவனங்கள் நிறைய நுகர்வோர் பொருட்களை இந்தியாவில் உற்பத்தி செய்து வருகின்றன.

‘தொலைக்காட்சிகளில் குரல் உதவியாளர் வசதி நிறுவப்பட்டிருக்கும் பட்சத்தில், சேனல் மாற்ற ரிமோட் தேவை இருக்காது. நுகர்வோர் தங்கள் குரல் வழி கட்டளைகளின் மூலமாகவே கூட சேனல்களை மாற்ற முடியும். தொலைக்காட்சியை ஆன் ஆப் செய்யக்கூடக் குரல் வழி கட்டளைகள் பயன்படுத்தலாம்’ என்று ரிஷி சந்திரா தெரிவித்தார்.

ஏர்டெல், வோடபோன், ஐடியா மற்றும் ஜியோ நிறுவனங்கள் ஏற்கனவே குரல் உதவியாளர்களைப் பயன்படுத்தி வருகின்றன. தற்போது சந்தையில் அமேசான் எக்கோ மற்றும் கூகுள் ஸ்பீக்கர்கள் கிட்டத்தட்ட ஒரே விலையில் கிடைக்கின்றன.

இனி தனியாக பேசிக்கொள்பவர்களைப் பார்த்து யாரும் சிரிக்க முடியாது.

Related Articles

தமிழ் நாட்டின் முதல் பெண் டைரக்டர் டி. ப... ஆசாரமான பிராமணக் குடும்பத்தில் 1911 ம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்தார். சொந்த ஊர்: தஞ்சை மாவட்டம் திருவையாறு. தந்தை பஞ்சாபகேச அய்யர், கிராம கணக்க...
பல நன்மைகளை தரும் பனம் பழம்!... விதைக்க வேண்டியதுமில்லை. வளர்க்க வேண்டியதுமில்லை என்கிற அளவில் நமக்கு சிரமம் தராதது பனை மரம். பனை மரத்தின் பழம் எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளது. ...
தினேஷுக்கு தேசிய விருது கிடைக்குமா? இரண்... தயாரிப்பு : நீலம் புரொடக்சன்ஸ்தயாரிப்பாளர் : இயக்குனர் பா. ரஞ்சித்எழுத்து இயக்கம் : அதியன் ஆதிரைஇசை : டென்மாஒளிப்பதிவு : கிஷோர் குமார்...
கணவர்கள் பார்க்க வேண்டிய படம்! – க... நடிகர் நடிகைகள் : பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன், அன் ஷீட்டல்இயக்கம் : ஸ்ரீ செந்தில்இசை : விஷால் சந்திரசேகர்ஒளிப்பதிவு : சுரேஷ் பாலா ...

Be the first to comment on "உங்கள் வீட்டு மின் சாதனங்களுடன் பேசும் வசதியை அறிமுகம் செய்யவிருக்கிறது கூகுள்"

Leave a comment

Your email address will not be published.


*