சமீபத்தில் தான் 96, பரியேறும் பெருமாள், ராட்சசன் என்று அட்டகாசமான படங்கள் எல்லாம் குறிப்பிட்ட ஒரே நாளில் வெளிவந்து பர்சை காலி செய்தன. தற்போது அதே போல ஒரு சந்தர்ப்பத்தை மீண்டும் தமிழ் சினிமா தந்துள்ளது.
தமிழ் சினிமாவில் நன்றாக நடிக்கத் தெரிந்த இளம் நடிகர்கள் நடிகைகள் என்று பட்டியலிட்டால் அவற்றில் தனுஷ், ஜெயம் ரவி, விஷ்ணு விஷால், விஜய சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய ஐவரும் நிச்சயமாக அடங்குவார்கள்.
அந்த வகையில் தனுஷின் மாரி2, ஜெயம் ரவியின் அடங்க மறு, விஷ்ணு விஷாலின் சிலுக்குவார் பட்டி சிங்கம், விஜய சேதுபதியின் சீதக்காதி, ஐஸ்வர்யா ராஜேஷின் கனா ஆகிய ஐந்து படங்களும் ஒரே வாரத்தில் திரைக்கு லர இருக்கிறது.
அனைத்து படங்களுமே ஒரே மாதிரியான எதிர்ப்பார்ப்பை ரசிகர்களிடையே உருவாக்கி உள்ளது. அனைத்துமே இளம் நடிகர்களின் படம் என்பதால் இந்த வாரம் முழுக்க திரையரங்குகளில் இளைஞர்கள் கூட்டம் நிரம்பி வழியும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த ஐந்து படங்களில் இரண்டு படங்கள் போலீஸ் கான்ஸ்டபிள் கதையை மையமாகக் கொண்டது. ஒன்று ஜெயம் ரவியின் அடங்கமறு. இன்னொன்று விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்.
லட்சியத்தை விட்டுக் கொடுக்காமல் அடித்துப் பிடித்து முன்னேறிய மனிதர்களைப் பற்றிய கதையை மையமாகக் கொண்ட படங்கள் இரண்டு. ஒன்று சீதக்காதி. வறுமை நிலையில் இருந்து நாடக நடிகராக உயர்ந்து சினிமாவுக்குள் நுழைந்த அய்யா ஆதிமூலம் பற்றிய படம். இன்னொன்று கனா. சாதாரண ஏழை விவசாயி குடும்பத்தில் பிறந்த பெண் பெரிய கிரிக்கெட் வீராங்கனை ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் போராடி வென்ற இளம் பெண்ணின் கதை. இன்னொரு பக்கம் மாரி 2 என்ற அடாவடியான படம்.
மொத்தத்துல இந்த வாரம் பக்கா எண்டர்டெயின்மென்ட் இருக்கு! ஆனா பர்சுல காசு தான் இல்ல! என்பது ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ்.
Be the first to comment on "கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு மொத்தமாக களம் இறங்கும் நடிக்கத் தெரிந்த இளம் நடிகர்கள்!"