கடந்த சில தினங்களுக்கு முன்பு அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பிரான செந்தில்பாலாஜி அதிமுகவில் இருந்து திமுகவிற்கு மாறினார். இது குறித்து தினகரனும், செந்தில்பாலாஜியும் கருத்து தெரிவித்துவிட்டார்கள் என்றாலும் இவர்கள் மூடி மறைக்கும் விஷியம் ஒன்று இருக்கிறது என்று பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
தற்போதைய அரசியல் சூழலைப் பொறுத்தவரை எதற்கும் அஞ்சாத சிங்கம் என்றால் அது டிடிவி தினகரன் தான். எவ்வளவு இக்கட்டான சூழலிலும் மிக யதார்த்தமாக கூலாக பதில் அளிக்க அவரால் மட்டுமே முடியும். அரசியல் நுட்பம் தெரிந்தவர் தினகரன். அப்படி இருக்கையில் அவர் இன்னும் சில தினங்களில் கைது செய்யப்படுவார் என பேசப்பட்டு வருகிறது.
அப்படி பேசுபவர்கள் அதற்கான சரியான காரணத்தையும் கூறுவதில்லை. எலக்சனில் டிடிவி தினகரன் தனியாக நிற்க மாட்டார், ஒன்று கைது செய்யப்படுவார் அல்லது அதிமுக வுடன் கூட்டணி வைத்துக்கொள்வார் என்று வெறுமனே புரளியைக் கிளப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இன்னொரு பக்கமோ தினகரனுக்காக செந்தில்பாலாஜி சுமார் 300 கோடி ரூபாய் செலவு அளித்திருப்பதாகவும் வேலை முடிந்ததும் தினகரன் செந்தில்பாலாஜியைக் கண்டுகொள்ள வில்லை என்பதாலும் திமுக உதவியுடன் செந்தில்பாலாஜி திட்டமிட்டு தினகரனை உள்ளே தள்ள இருக்கிறார் என்று பேசப்பட்டு வருகிறது.
Be the first to comment on "டிடிவி தினகரன் இன்னும் சில தினங்களில் ஜெயிலுக்குள் இருப்பார்! செந்தில்பாலாஜிக்கும் தினகரனுக்கும் இடையில் நடந்தது என்ன?"