சிவனேன்னு சினிமாவில் இருந்த சீமானை வாங்கண்ணே… வாங்கண்ணே… என்று இழுத்து வந்து தொண்டை கிழிய பேச மேடை அமைத்து தந்து… இயக்கம் ஆரம்பிக்க வைத்து… அதற்கு நாம் தமிழர் இயக்கம் என்று பெயர் வைக்க வைத்து… இயக்கத்தை கட்சியாக மாற்றி அரசியலுக்குள் தள்ளிவிட்டு… இன்று உருப்படாத கழுசடைகள் எல்லாம் கேலி செய்து பேசும் நிலைக்குத் தள்ளவிட்டார்கள் அவர் உடன் இருக்கும் ஆட்கள்!
உடன் இருக்கும் ஆட்கள் :
இயக்கமாக இருக்கும் வரை சீமான் மீது பெரும்பாலான மக்களுக்கு உண்மையிலயே மிகுந்த மரியாதை இருந்தது. நல்லா பேசுறாப்டி… கொஞ்சம் கூட பயமே இல்லாம அம்மா ஆட்சில இருந்தாலும் சரி… அய்யா ஆட்சில இருந்தாலும் சரி… உண்மைய பட் பட்டுனு பேசுறாப்ல பாரு… அதான் கெத்து… என்று பலரை வியக்க வைத்த நபர்.
இன்னும் சொல்லப் போனால் தமிழால் இணைவோம் என்ற பெயரில் உலகெங்கும் உள்ள தமிழர்களை ” தமிழன் ” என்ற முறையில்… ஒரு நாட்டில் இருக்கும் தமிழனுக்குப் பிரச்சினை என்றால் பக்கத்து நாட்டு தமிழன் ஓடி வந்து பார்த்து நலம் விசாரிக்கும் அளவுக்கு ஒரு புள்ளியில் இணைய வைத்தது இணையம் என்றாலும் ஒரு வகையில் உலகெங்கும் தமிழ் என்று முழக்கமிட்ட சீமானும் காரணமாகிறார்.
சிரமப்பட்டு எடுத்த நல்ல பெயரெல்லாம்.,. கொஞ்ச நாட்களில் டேய் இந்த ஆளு சரியான டுபாக்கூருடா… என்று கலாய்க்கும் அளவுக்கு காற்றில் பறந்துவிட்டது. காரணம் அவர் நேரத்திற்கு ஒருவாறு பேசுவதே.
தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன பெரியாரை புறக்கணிப்போம் என்று ஆரம்ப கால கட்டத்தில் முழங்கியவர் சில நாட்களிலயே பெரியாரை தோளில் தூக்கி வைத்து கொண்டாடினார். அதிமுக அரசு மற்றும் திமுக அரசு இரண்டையும் சகட்டு மேனிக்கு விமர்சித்தவர் இந்த திருட்டு திமுக ஆட்சி ஒழிய வேண்டுமென்று அதிமுக எவ்வளவோ பரவாயில்லை என்பது போல பேசினார்.
இதுபோல மாற்றி மாற்றி பேசிய விஷியங்கள் பல. அரசியலுக்கு வந்தால் இப்படி மாற்றி மாற்றி பேச வேண்டிய சூழல் கட்டாயம் வரும்… என்பது மறுக்க முடியாத உண்மை என்றாலும் சீமானை கண்காணிக்கும் அளவுக்கு மற்ற தற்போதைய மற்ற அரசியல்வாதிகளை அவ்வளவாக கண்காணிப்பது இல்லை அல்லது நமக்கு சீமான் தான் டார்கெட் என்ற மனநிலையுடனே திரிவதா??? சீமான் பேசும் கருத்துக்கள் பற்றி கவலைபடாதோர் சீமானை எதிர்ப்பதற்கு மட்டும் ஒன்று திரண்டுவிடுகிறார்கள். உடன் இருக்கும் மனிதர்கள் எப்படியோ அப்படியே சூழலும்.
உடன் இருந்து உசுப்பி விடும் ஆட்களால் தான் இப்படியெல்லாம்! அடுத்த முதல்வர், அடுத்த பிரபாகரன் என்று வெறியை ஏத்திவிட்டு கோமாளி ஆக்கி கொண்டிருக்கிறார்கள் என்பதை சீமான் உணர்கிறாரா?
இவ்வளவு நாட்கள் நடிகர் விஜய்யை என் தம்பி… என் தம்பி… என்று முழங்கிக் கொண்டிருந்தவர் இன்று நடிகர் சிம்புவை தலையில் வைத்தக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். எதை பேசுகிறோம்? எப்போது என்ன பேசுகிறோம்? என்ற தெளிவு அரசியல்வாதிக்கு இல்லாமல் இருப்பது ஏன்?
போகிற போக்கைப் பார்த்தால் என் தம்பி சிம்பு சிஎம் ஆவான்… நான் நேரடியாக பிஎம் ஆவான்… சினிமாவில் சிம்பு விட்ட சூப்பர்ஸ்டார் இடத்தை தம்பி கூல்சுரேஷ் பிடிப்பான்… என்று அடித்துவிட்டாலும் ஆச்சர்யப் படுவதற்கு இல்லை. இவரை நம்பி சொந்த பணியை செய்வது போல சமூக பணிகள் செய்து வந்த தம்பிகள் தான் பாவம்!
Be the first to comment on "அடுத்த பிரதமர் சீமான்! அடுத்த சிஎம் சிம்பு! அடுத்த சூப்பர்ஸ்டார் கூல்சுரேஷ்! – இந்தியா இனி இவர்கள் கையில்!"