- ” பிரச்சினை இல்லாத விவசாயி எவன் இருக்குறான்… “
- ” எவன தலைவராக்குறதுனு உங்களுக்கும் தெரியல… தலைவன்னா எப்டி நடந்துக்கனும்னு அவனுக்கும் தெரில… “
- ” வயல்லயும் வரப்புலயும் மட்டும் குனிங்க… வரவன் போறவன்டலாம் குனியாதீங்க… “
- ” 80 வயசா… “
” சாகரப்ப இளைஞரணில இல்ல இருந்தாரு… “
- ” அடுக்குமொழில தமிழ்ப்பேசனும்… இல்லன்னா அடிவயித்துல இருந்து தமிழ் பேசணும்… உடனே இவனுங்கெல்லாய் சேந்து அவன தலைவனாக்கிடுவானுங்க… இனம் இனம்னு சொல்லி இனத்த அழிக்கறதே இவிங்க தாண்டா… “
- ” விவசாயிங்களுக்கு மானமெல்லாம் ஒரு காணி நிலந்தாண்டா… என்னைக்கு அத நீங்க வித்து திங்களாம்னு நினைச்சீங்களோ அன்னைக்கே நீங்க செத்துட்டீங்கடா… “
- ” கோழிக்குஞ்சுக்கு பருந்து காவலு… அவன் நமக்கு வழிகாட்ட வரல வாழ்க்கைய அழிக்க வந்துருக்கான்… “
- ” மக்களுக்கு எதாவது கெடுதல் நடக்குதுன்னா தனித்தனியா நிப்பாங்க… அதே மக்களுக்கு எதாவது நல்லது நடக்குதுன்னா எல்லா ஒன்னா சேந்து வந்து அத கெடுக்க பாப்பாங்க… அவிங்க தான்டா அரசியல்வாதிங்க… “
- “இந்தியாவே ஒரு விவசாய நாடு தான சார்… “
” சும்மா வாயால சொல்லிட்டா இந்தியா விவசாய நாடு ஆகிருமா சார்… ஒரு இந்தியக் குடிமகனுக்கு அடையாளம் வோட்டர் ஐடியும் ரேசன் கார்டும் தான்… அது இல்லைன்னா அவன் இந்தியக் குடிமகனே இல்ல… அதேமாதிரி தான் ஒரு விவசாயிக்கு அடையாளம் மண்ணும் விவசாயமும் தான்… மனுசனுக்க பசி இருக்கற வரைக்கும் விவசாயம் அழியாது… ஏழைங்க கையில இருக்குற விவசாயம் நாளைக்கு கார்ப்ரேட் காரங்களுக்கு மாறும்… அன்னைக்கு அரிசி விலை தங்கத்தவிட அதிகமாகும்…”
- உலகம் முழுக்க சொல்லலாம் வருங்காலத்துல திங்கறதுக்கு மாத்திர வருதுன்னு… ஆனா அந்த மாத்திரய தின்னுட்டு எத்தன நாளைக்கு உயிர் வாழ முடியும்… மன்னுல விளையறத தின்னாத்தான் மண்ணு நம்மள தின்னும்… அத விட்டுட்டு மருந்து மாத்திரய தின்னிங்கனா அந்த மண்ணுகூட நம்மள திங்காது… வாந்தி எடுத்துரும்… “
- சாதியே எங்களுக்குத் தெரியாது… என்னைக்கு தலைவர்கள் வந்தாங்களோ அன்னைக்கு தான் தெரிஞ்சது சாதி…
- சட்டையே போடாதவங்ககிட்ட சட்டம் பேசுறிங்க…
Be the first to comment on "கவுண்டமணியின் 49-O திரைப்பட வசனங்கள்!"