பிரபஞ்சனின் மயிலிறகு குட்டி போட்டது புத்தகம் ஒரு பார்வை!

A View on the book Mayiliragu Kutti Potathu written by Prapanchan

புத்தகம் : மயிலிறகு குட்டி போட்டது

வகை : கட்டுரைத் தொடர் (புதிய தலைமுறை)

ஆசிரியர் பற்றி…

இயற்பெயர் : சாரங்கபாணி வைத்திலிங்கம்

பிறந்த இடம் : புதுச்சேரி

மனைவி : பிரமிளா ராணி

பிள்ளைகள் : கௌதமன், கௌரி சங்கர், சதீஷ்

விருதுகள் : புதுச்சேரி அரசு தமிழக அரசுப் பரிசுகள் இருமுறை, கோவை கஸ்தூரி ரங்கம்மாள் விருது, மேற்கு வங்க பாரதிய பாஷா பரிட்சத் பரிசு, சாகித்திய அகாதெமி பரிசு.

நூலைப் பற்றி…

ஊர் என்கிற கருப்பை, அப்பா என்கிற இலட்சியம், நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே, என்னைக் கண்டுபிடித்த குரு, கம்யூனிஸ்ட் பத்திரிக்கையில் எழுதறானே, என் வாகனம் சைக்கிள், எந்தரோ மகானுபவ, என் மக்கள் பணி, சினிமா எனும் மாய லோகம், கதை பிறந்த கதை, முத்தம் கொடுத்து பசியாற முடியாது, ஓர் அதிகார வர்க்க நண்பன், ஊர் சுற்றிகளே ஞானவான்கள், திண்ணை தமிழர்களின் வரவேற்பறை, புத்தகத்துக்கு வெளியே ஒரு மனிதர், அந்தக் கடைசி நாள், பச்சை வயலில் நீர் பாய்ச்சி, இவர்கள் இப்படித்தான், உள்ளங்கையில் பெய்த அமுதம், இரண்டு மனித உயிர்கள், ஆகச் சிறந்த பரிசும் விருதும், ரத்தம் ஒரே நிறம், நான் பொன்முடிப்பு பெற்ற கதை, மயிலிறகு குட்டி போட்டது, என் தலைவர் என்று 25 தலைப்புகளில் கட்டுரை எழுதியுள்ளார்.

“இந்துக் கடவுளர்களுக்கு வாகனங்கள் உருவாக்கப் பட்டிருக்கின்றன. பிள்ளையாருக்கு மூஞ்சூறு, சிவனுக்கு காளை, முருகனுக்கு மயில், குபேரன் பணக்காரன். அவன் வாகனம் மனிதன். நரவாகனன் என்பது அவன் பெயர்களில் ஒன்று. பணம் மனிதனையே வாகனப்படுத்தி விடுகிறது. எனக்கு சைக்கிள் மட்டுமே வாகனமாக இருந்தது. ” போன்ற தன் வாழ்க்கை அனுபவங்களை எழுதியுள்ளார். ஒவ்வொரு தலைப்பும் ” சங்கீதம் பற்றிய இரண்டு நாவல்கள் அருமையான இரண்டு படைப்புகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. ஒன்று ஜானகிராமனின் மோகமுள். மற்றது சிதம்பர சுப்ரமணியத்தின் இதய நாதம். ” போன்ற சுவாரஸ்யமான தகவல்களை கொண்டுள்ளன.

176 பக்கங்கள் உடைய இந்தப் புத்தகத்தின் விலை 130 மட்டுமே. நற்றிணை பதிப்பகத்தில் இந்தப் புத்தகம் கிடைக்கிறது.

 

Related Articles

மூன்றாம் உலகப் போர் எப்பவோ ஆரம்பிச்சிடுச... கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, படங்களைத் தொடர்ந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு வெற்றியை கொடுத்திருக்கிறார் விக்ரம் பிரபு. கனக்கச்சிதமான தோற்ற...
பொங்கல் பரிசுத் தொகை ஆயிரம் ரூபாயா? நூறு... பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆயிரம் ரூபாய் பரிசுடன் வருடந் தோறும் வழங்கப் படும் வேஷ்டி சேலை மற்றும் பொங்கல் பொருட்கள் வழங...
எழுத்தாளர் சரவணன் சந்திரன் எழுதிய அன்பும... * தள்ளாடி மேலெழும் தலைமுறை,* எங்கே தொலையக் கொடுத்தோம்?,* கூட்டாஞ் சோற்றுக் கணக்கு,* வியாபார மந்திரம்,* கூண்டுப் புறாக்கள்,* அ...
சூர்யா – வெற்றிமாறன் இணையும் படத்த... அசுரன் வெற்றிப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவை வைத்து இயக்கும் படத்தின் பெயர் வாடிவாசல் என தகவல்கள் வந்துள்ளன. பொல்லாதவன், ...

Be the first to comment on "பிரபஞ்சனின் மயிலிறகு குட்டி போட்டது புத்தகம் ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*