சூர்யா – வெற்றிமாறன் இணையும் படத்தின் பெயர் “வாடிவாசல்”!

Surya joins Vetrimaran for "Vadi vasal"

அசுரன் வெற்றிப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவை வைத்து இயக்கும் படத்தின் பெயர் வாடிவாசல் என தகவல்கள் வந்துள்ளன. 

பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் எனும் தொடர் வெற்றிப் படங்களைத் தந்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் வெற்றிமாறன். 

இவர் நாவல்களை திரைப்படமாக்குவதில் கைதேர்ந்தவர். ஆட்டோ ஓட்டுநர் மு. சந்திர குமார் எழுதிய ” லாக்கப் ” நாவலை மையமாக வைத்து அட்டகத்தி தினேஷ் மற்றும் சமுத்திரக்கனி  நடிப்பில் விசாரணை என்ற படம் எடுத்தார். அது உலக அளவில் கவனிக்கத்தக்க படமாக இருந்தது. அதே போல எழுத்தாளர் பூமணி எழுதிய ” வெக்கை ” நாவலை மையமாக வைத்து நடிகர் தனுஷ் நடிப்பில் அசுரன் என்றொரு படம் எடுத்தார். அது தாறுமாறு வெற்றிப்படமாக அமைந்தது. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படமாகவும் இருந்தது. 

அடுத்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் சூர்யா நடிக்க இருக்கும் படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் கலைப்புலி அதிகாரபூர்வமாக அறிவித்தார். தற்போது அந்தப் படத்தின் பெயர் ” வாடிவாசல் ” என்று தகவல் வந்துள்ளது. இந்த தகவல் 100 சதவீதம் உண்மை என்கிறது சினிமா வட்டாரம். ஆம் சூர்யாவுடன் இணையப் போகும் படம்பற்றி இயக்குனர் வெற்றிமாறனே ஆனந்தவிகடன் விருது விழாவில் தகவல் தெரிவித்தாராம். 

கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது எழுத்தாளர் சி. சு. செல்லப்பா எழுதிய ” வாடிவாசல் ” என்ற நாவலின் உரிமை என்னிடம் உள்ளது அதை கூடிய விரைவில் படமாக்குவேன் என தகவல் தெரிவித்திருந்தார் இயக்குனர் வெற்றிமாறன். 

சமீபத்தில் திரைவிமர்சகர் பரத்வாஜ் ரங்கன் நடத்திய நேர்காணல் ஒன்றில் “வெற்றிமாறன், தன்னுடைய படங்கள்ல இன்னும் வெளிப்படையான அரசியல பேசலையோனு எனக்குத் தோனுது…” என்றார் செழியன். அதற்கு “அடுத்து நான் அஜ்னபி நாவலை படமாக எடுக்கப் போறேன்” என்று சொன்னதும், “சூப்பர்… பிரிலியண்ட்…” என பாராட்டினார் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் செழியன். 

அப்போது முதல் அடுத்து சூர்யாவை வைத்து வெற்றிமாறன் இயக்கப் போகும் படம் எழுத்தாளர் மீரான் மைதீன் எழுதிய ” அஜ்னபி ” நாவலை மையமாக கொண்டது என்றுதான் பெரும்பாலானோர் பேசிக் கொண்டனர். அந்த நாவலும் வாடிவாசல் நாவலுக்கு சற்றும் சளைத்ததல்ல என்பது குறிப்பிடத்தக்கது. 

சூர்யாவை வைத்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படம் கண்டிப்பாக தமிழ்சினிமாவின் இன்னொரு மைல்கல்லாக இருக்கும் என்பது மட்டும் உறுதி. சூர்யாவின் தொடர் தோல்விகளால் துவண்டு அவருடைய ரசிகர்களுக்கு இனி கொண்டாட்டம் தான். 

Related Articles

புதிய தொலைக்காட்சி சேனல், புதிய நாளிதழ் ... மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த வரையில் அதிமுகவின அதிகாரப்பூர்வ நாளேடாக நமது எம்ஜிஆரும், அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான ஜெய டிவியும் செயல்பட்ட...
காதும்மாவை விரும்பியவர்களுக்கு கோலமாவு க... இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் அனிருத்தின் இசையில் வெளியாகி இருக்கும் படம் கோலமாவு கோகிலா. நயன்தாராவுக்கு தோழியாக...
பேராண்மை – அரசு பணியும் ஆதி திராவி... ஆதி திராவிடரும் அரசு வேலையும் என்ற தலைப்பில் தான் இந்தக் கட்டுரையை எழுத நினைத்தேன். பிறகு ஏனோ மாற்ற தோன்றியது. மாற்றிவிட்டேன். பேராண்மை படத்தில் அரசு ...
குடியிருப்பு பகுதிகளில் காரை நிறுத்தவும்... தெருக்களில், குடியிருப்பு பகுதிகளில் அமைந்திருக்கும் திறந்த வெளியில் மக்கள் தங்கள் வாகனத்தை நிறுத்த  இனி கட்டணம் வசூலிக்கப்பட்ட இருக்கிறது டெல்லியில்....

Be the first to comment on "சூர்யா – வெற்றிமாறன் இணையும் படத்தின் பெயர் “வாடிவாசல்”!"

Leave a comment

Your email address will not be published.


*