- அப்பா சந்திரன், அம்மா ஜீவசந்திரா. அம்மாவுக்கு சொந்த ஊர் கும்பகோணம். அப்பாவுக்கு சொந்த ஊர் காரைக்குடி. அண்ணன் சாலை வேதன். பிரேம் குமார் பிறந்தது திருச்சியில். அப்பாவின் வேலைக்காக தஞ்சாவூருக்கு குடிபெயர்ந்தார்கள். பிரேம் குமார் படித்து வளர்ந்தது எல்லாம் அங்கே தான்.
- ஆக்ஸீஸயம் பள்ளியில் 5ம் வகுப்பு வரை, கமலா சுப்ரமணியம் பள்ளியில் 10 ம் வகுப்பு வரை படித்தார். இந்தக் காலகட்டத்தில் தான் ஓவியம், கராத்தே, நீச்சல் போன்ற விசயங்களை கற்றுக் கொண்டார். பிறகு அண்ணன் படித்த தஞ்சாவூர் டான்போஸ்கோ ஸ்கூலில் கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப்பில் சேர்ந்து படித்தார்.
- பள்ளி நாட்களில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
- இவருக்கு பள்ளி நாட்களிலயே போட்டோகிராபியால் ஆர்வம் இருந்தது. நேஷனல் ஜியோகிராபியில் வேலைக்கு சேர வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
- ராஜேஷ், வினோத், செந்தில் கதிரவன், பக்ஸ் ஆகியோர் பிரேம் குமாரின் நெருங்கிய நண்பர்கள். நண்பர்கள் சொல்லித் தான் இவர் விஸ்காம் எடுத்து படித்தார். இவரை விஸ்காமில் சேர்த்து படிக்க வைக்க அப்பா நிலத்தை விற்க வேண்டி இருந்தது.
- அப்பாவுக்கும் அண்ணனுக்கும் சென்னையில் வேலை கிடைத்ததும் குடும்பத்தோடு சென்னைக்கு குடிபெயர்ந்தார்கள். சென்னைக்கு வந்த பிறகு பிரேம் குமாரின் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் நடந்தன.
- அடையாறு பிலிம் இன்ஸ்ட்யூட்டில் டிஎப்டெக் படித்தார். கோல்டு மெடல் வாங்கினார். இங்கு தான் பாலாஜி தரணிதரன், மருதுபாண்டியன் போன்றோர் பிரேம் குமாருக்கு நண்பர்கள் ஆனார்கள். எமி விருது வாங்கிய வைல்டு லைப் போட்டோகிராபர் அல்போன்ஸ் ராயிடம் சில வருடங்கள் பணியாற்றினார். பிறகு அல்போன்ஸ் ராயின் மகளையே திருமணம் செய்து கொண்டார்.
- பரமபதம் குறும்படத்திற்காக மாநில விருது வாங்கி உள்ளார். அதை தொடர்ந்து ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரனிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் படம் பாய்ஸ்.
- விபத்தின் காரணமாக முதுகுத் தண்டில் அடிபட்டது. ஓய்வுக்குப் பிறகு தனக்கு மிகவும் பிடித்த ஒளிப்பதிவாளர் ரத்னவேலிடம் உதவி ஒளிப்பதிவாளராக சேர்ந்து பேரழகன், வாரணம் ஆயிரம் உள்பட ஏழு படங்களில் பணியாற்றினார்.
- ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் படம் வர்ணம். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, பசங்க, எய்தவன் போன்ற படங்களுக்கு இவர் தான் ஒளிப்பதிவாளர். இயக்குனராக பணியாற்றிய முதல் படம் 96.
- 2014 ல் கபி கரே கம் என்ற நாவலை எழுதி எழுத்தாளர் பிரபஞ்சனிடம் பாராட்டு பெற்றார். இந்த நாவலின் ஒரு பகுதி தான் 96.
- நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் கதை நிஜத்தில் பிரேம் குமாருக்கு நடந்த சம்பவத்தை மையப்படுத்தியே எழுதப்பட்டது.
- 96 படத்தை இவரே தெலுங்கிவில் ரீமேக் செய்கிறார். அதில் சமந்தா மற்றும் ஷர்வானந்த் நடிக்க இருக்கிறார்கள்.
- இவர் இயக்கிய 96 படத்தின் கதை திருடப்பட்டது என சர்ச்சைக்கு உள்ளானது என்பது குறிப்பிடத் தக்கது.
Be the first to comment on "96 இயக்குனர் பிரேம் குமார் பற்றிய சில தகவல்கள்!"