சுஜித்தின் மரணத்துக்கு வருத்தம் தெரிவித்த பிரபலங்கள்!

Celebrities condolences Sujith's death!
  1. நடிகர் விவேக் : கிட்டத்தட்ட 4 நாட்களாக உணவு உறக்கம் மறந்து ஓய்வின்றி உழைத்து களைத்து ஓய்ந்து போய் நிற்கும் நல் உள்ளங்களுக்கு! சுர்ஜித், உன் உடலை எடுத்து விட்டோம். இப்போது துயரக்குழியில் நாங்கள் விழுந்து விட்டோம். எங்களை யார் எடுப்பது?
  2. நடிகர் பால சரவணன் : எங்களை மன்னித்து விடு #Sujith  Traffic Rulesஐ மதிக்காமல் குப்பைகளை உரிய இடத்தில் கொட்டாமல் ஆழ்துளை கிணறுகளை மூடாமல் பொது இடங்களில் புகை பிடித்து.. உன்னை போன்ற குழந்தைகளை அன்றைக்கோ அல்லது மெல்ல மெல்லவோ தினமும் கொன்று அரசை பலி சொல்லி வாழும் எங்களை மன்னித்துவிடு சுஜித் #நாம்மாறுவோம்
  3. மு. க. ஸ்டாலின் : நான்கு நாட்களாக நாட்டையே ஏக்கத்தில் தவிக்கவிட்ட சுஜித் நமக்கு நிரந்தரச் சோகத்தைக் கொடுத்து போய்விட்டான். சுஜித் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது?அவனது இழப்பு தனிப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பல்ல. நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு. சுஜித் நம் நினைவில் என்றும் நீங்க மாட்டான்! ஆழ்துளைக் கிணற்றுக்குள் இதுவரை எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கிறது. இனியொரு உயிர் பலியாகிவிடக்கூடாது. அதுதான் நாம் சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி! #RIPSujith
  4. டாக்டர் எஸ் ராமதாஸ் : சுர்ஜித்தை உயிருடன் மீட்க தமிழக அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மேற்கொண்ட முயற்சிகளை குறை கூற முடியாது. ஆனாலும் சிறுவனைக் காப்பாற்ற முடியாதது சோகமே. இனியும் இப்படி ஒரு சோகம் நிகழாத அளவுக்கு இத்தகைய சூழல்களை சமாளிக்க புதிய தொழில்நுட்பங்களும்,கருவிகளும் கண்டுபிடிக்கப்பட வேண்டும். சுர்ஜித்தை மீட்பதில் உள்ள சிக்கல்களையும், இடர்பாடுகளையும் அனைவரும் அறிவார்கள். அவற்றையும் கடந்து அதிசயம் ஏதேனும் நிகழும்; அச்சிறுவன் உயிருடன் மீண்டு வருவான் என நம்பினோம். அது நடக்காதது சிறுவனின் குடும்பத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பேரிழப்பு தான். 82 மணி நேர போராட்டத்திற்கு பிறகும் ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்ட 2 வயது சுர்ஜிர்த்தை உயிருடன் மீட்க முடியவில்லை;குழந்தை இறந்து விட்டான் என்ற செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
  5. நடிகர் மனோபாலா : இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு ஆவண செய்ய வேண்டும்..#SorrySujith
  6. நடிகர் சிபி சத்யராஜ் : The inefficiency of the system and carelessness of individuals is the reason for loss of many innocent lives. #RIPDearSujith
  7. திரை விமர்சகர் இட்இஸ் பிரசாந்த் : சென்று வா சுஜித். மூடாத குழிக்கு சொந்தக்காரர்கள் நாங்கள் அனைவரும். எந்த விதியையும் மதிக்காமல் , எவன் பேச்சையும் கேட்காமல் நாங்கள் ஒரு கேடுகெட்ட சமூகமாக வளர்ந்து விட்டோம். இதில் தெரியாமல் நீ உதித்து விட்டாய், நாங்கள் இறக்கமில்லாமல் உன்னை அனைத்து விட்டோம் ! #SujithWilson. பணம் இருந்தா எவன் வேணா, எங்க வேணா போர் போடலாம் என்பதே தமிழகத்தின் இன்றைய நிலை.  பெரிய போர் வண்டி ஓனர்கள் அனைவருக்கும் அரசியல் தொடப்பு இருப்பதால், மூடப்படாத போர் வெல்களும் தொடர் கதையாகவே இருக்கும். இங்கே காசு தான் எல்லாம்.
  8. மு. க. கனிமொழி : சுஜித்தின் இழப்பு ஒட்டு மொத்த சமூகத்தின் தோல்வி. எப்படியாவது அவன் காப்பாற்ற படுவான், காப்பாற்ற படவேண்டும் என்று துடித்த லட்சக்கணக்கான இதயங்கள் இன்று மீளா துயரில். #SujithWilson அச்சிறுவனை இழந்து வாடும்  குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதல். கடந்த நான்கு நாட்களாக இரவு பகல் பாராமல் மீட்புப்பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி.
  9. இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் : Dear little one … we are sorry !!! #RIPSujith
  10. நடிகர் சாந்தனு : Heartbreaking to see dis happen over&over again #RIPSujith In China a kid was saved from 300ft depth borewell Disheartening to see our country spend so much money on so many other things but not able get technology to save lives from such incidents! Parents PLS be more careful.
  11. தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு : Very depressing to see we lost #Sujith Govt. should come up with right laws to punish the land owners who leave the Bore wells open! Also should buy the technology & training for rescue in the future. He should be the last one to loose life to this!! #RIPSujith
  12. கவிஞர் சினேகன் : உயிர்களை இழந்து தான் விழிப்புணர்வு பெறவேண்டி இருக்கிறது. சுஜித்தின் மரணம்  மிக பெரிய விழிப்புணர்வுக்கு பாடமாக அமைந்து விட்டது.
  13. ஆர் ஜே பாலாஜி : How terrible to lose a two year old. Collective failure of all of us as takes yet another life. Sorry Sujith.
  14. நடிகர் சதீஷ் : அந்த மரணக் குழியை மூடாமல் அலட்சியமாக இருந்தவர்கள் தண்டிக்கப்படும் வரை RIP என்பதற்கு அர்த்தமே இல்லை
  15. நடிகர் உதயநிதி ஸ்டாலின் : சிறுவன் சுஜித்தின் உலகில் நாம் அனைவருமே குற்றவாளிகள். ‘இனி இப்படியொரு சம்பவம் நிகழக்கூடாது’ என்பதற்கான அடையாளமாக  சுஜித்தின் மரணத்தை மனதில் ஏந்தி, அரசு தன் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். நீ எங்கள் மனதில் வாழ்வாய் சுஜித், போய் வா. என் அஞ்சலிகள்.
  16. ப்ளூ சட்டை மாறன் : #SujithWilson பற்றி தேசம் முழுவதும் பேசி வைத்ததற்கு முக்கிய காரணம் தொலைக்காட்சி ஊடகங்கள். ஆழ்துளை கிணறு பற்றின அபாயங்களை தேசமே உணர்ந்துள்ளது. தொலைக்காட்சி ஊடகங்களுக்கு நன்றி… #RIPSujith
  17. கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் : #RIPSujith really sad sad morning. Let’s hope such accidents don’t happen again.
  18. இசையமைப்பாளர் இமான் : Baby #SujithWilson Passed away. The whole world was hoping to see you alive.That hope is in vain today.Deeply saddened… .My prayers to the family.#RIPSujith
  19. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் : RIP #RIPSujith .. hope this neve happens again. ..
  20. எச். ராஜா : சிறுவன் சுஜித்தை காப்பாற்ற அரசு தீவிர முயற்சி மேற் கொண்டும் காப்பாற்ற இயலாதது வருத்தமளிக்கிறது. சுஜித்தின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
  21. நடிகர் கிருஷ்ணா : Heart Breaking #RIPSujith my deepest condolences to the family.
  22. இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் : It is heartbreaking to hear the loss of the kid Sujith. May God give strength to his family.  Really hoping that government will take necessary action to prevent this kind of disaster in future. #RIPSujith
  23. இயக்குனர் அட்லி : #RIPSurjith don’t know if any thing else would be so heart breaking
  24. இயக்குனர் சேரன் :

    விழிப்புணர்வின்

    விதையானாய்..

    விடைகொடுக்கக்கூட

    நாங்கள்

    அருகதையற்றவர்கள்

    முடிந்தால்

    மன்னித்துவிடு

    இம்மண்ணில் பிறப்பித்த

    கடவுளை…..

  25. நடிகர் ராகவா லாரன்ஸ் : சுர்ஜித் மீண்டும் வருவான் அவனது பெற்றோருக்குஎனது வேண்டுகோள். குழந்தை சுர்ஜிதின் மரணத்தால் இன்று அக்டோபர் 29 எனது  பிறந்த நாளை கொண்டாட மனம் வரவில்லை”ஒட்டுமொத்த தேசத்தின் கண்களையும் குளமாக்கி விட்டு சென்று விட்டான் சுர்ஜித். அவனை அரவணைக்கத் தவறிய காலமும் இங்குள்ள சூழலும் வேதனைக்குரியது. இந்நிலையில் சுர்ஜித்தின் பெற்றோருக்கு சொல்ல விரும்புவது..சுர்ஜித் இன்று நம் தேசத்தின் பிள்ளையாகி விட்டான். அதுபோல் இந்தத் தேசமெங்கும் எத்தனையோ பிள்ளைகள் பெற்றோரின்றி இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பிள்ளையை எடுத்து  அந்த பிள்ளைக்கு சுர்ஜித் எனப்பெயரிட்டு வளர்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன் ” அதன் மூலம் ஒரு குழந்தைக்கு நீங்கள் வாழ்கை கொடுத்ததாகவும் இருக்கும், சுர்ஜித்தின் ஆத்மா சாந்தியடையும், சுர்ஜித்தும் தங்களுடனே இருப்பான்… அப்படி நீங்கள் குழந்தைய தத்தெடுக்க நினைத்தால் நானே குழந்தையை தத்தெடுத்துக் கொடுக்கிறேன். அவன் படிப்பு செலவு முழுவதையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். #RipSurjith
  26. நடிகர் ரஜினிகாந்த் : சுஜீத்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது, அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும். சுஜீத்தின் பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
  27. நடிகர் பிரசன்னா : My heart bleeds for his parents! That pain n pinning all their hopes to see their baby alive back n at the end….we have lost so many lives to this idiocity. High time we learn our lesson. With deep regret #RIPsujith
  28. நடிகை இந்துஜா : Heart breaking to hear the death of such a small kid dat too bcoz of irresponsible idiots who left it open.u guys have to feel guilty for lifetime .. A big thanks to everyone who are worked for days and nights to save the soul. This should never ever happen again  #RIPSurjith
  29. நடிகை கஸ்தூரி : . #RIPSujith May we never again lose another surjith wilson . Awareness campaign most urgent need . Safety precautions MUST be adhered to #BoreWells must be licensed and policed.
  30. இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் : ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி நமது பொறுப்பற்ற செயலால் ஏற்படும் “பேரிழப்புகளை” நியாயப்படுத்துகிறோம்,தப்பித்துக்கொள்கிறோம் . உபயோகமற்ற ஆழ்துளை கிணறுகளை மூட போர்கால அடிப்படையில் அரசும், தனி மனிதர்களும் முயற்சி எடுக்க வேண்டும் #SorrySujith #RIPSujith

Related Articles

நம்ப வைத்து ஏமாற்றிய அமீர்கான் – த... கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் விக்னேஷ் சிவன் " தக்ஸ் ஆப் இந்துஸ்தான் " படக்குழுவினரிடம் " உங்கள் படத்தை தமிழகம் கொண்டாடப் போவது உறுதி, அதே ப...
சன்னி லியோன் என்ன சாதி? – இந்தச் ச... அடப்பாவி... சன்னி லியோனோட சாதியாடா நமக்கு முக்கியம்... அவ ____ தாண்டா நமக்கு முக்கியம்... இப்படி பச்சையாக கமெண்ட் அடிக்கும் மக்கள் தான் இங்கு நிரம்பிக...
தாய்ப்பால் கொடுக்காததால் ஆண்டுதோறும் 8.2... உலக சுகாதார தினம் வருடந்தோறும் ஏப்ரல் ஏழாம் தேதி பின்பற்றப்படுகிறது. அதனையொட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு டபிள்யூஎச்ஓ - யுனிசெப் அமைப்புகளின் சார்...
2019ல் ஆனந்த விகடனில் அதிக மதிப்பெண் வாங... 2019ல் வெளியான படங்களில் மிக முக்கியமான படம் பேரன்பு. இந்தப் படத்திற்கு ஆனந்த விகடன் 56 மதிப்பெண்கள் தந்தது. இந்தப் படத்திற்கு ஆனந்த விகடன் விமர்சனம் ...

Be the first to comment on "சுஜித்தின் மரணத்துக்கு வருத்தம் தெரிவித்த பிரபலங்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*