பாகுபலி திரைப்படம் இரண்டு பாகங்களாக பல்வேறு மொழிகளில் வெளிவந்து வசூல் ரீதியாகவும், சினிமா ரசனை ரீதியாகவும் பல்வேறு சாதனைகளைச் செய்தது. மறக்கவே முடியாத பல கதாப்பாத்திரங்கள் அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்தன. பாகுபலியாக பிரபாஸும், பல்வாள் தேவனாக ராணாவும் நடித்திருந்தனர். கம்பீரமான ராஜ மாத சிவகாமியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தனர். இந்த வரிசையில் தனது சிறப்பான நடிப்பைக் கட்டப்பா என்ற கதாப்பாத்திரத்துக்கு வழங்கி இருந்தார் தமிழ் நடிகர் சத்யராஜ். அவரது பங்களிப்பை அடையாளப்படுத்தும் விதமாக தற்போது லண்டனில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் அவருக்கு மெழுகு சிலை வைக்கப்பட இருக்கிறது.
மகிழ்ச்சியான இந்தச் செய்தியை சத்யராஜின் மகனும், நடிகருமான சிபிராஜ் தனது அதிகாரப்பூர்வ ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். ‘இது தனக்கு பெருமையான தருணம்’ என்று மேலும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
மெழுகு சிலையாகும் கட்டப்பா
தமிழக நடிகர்களில் மெழுகு சிலை வடிக்கப்படும் முதல் நடிகர் என்ற பெருமையை பெறுகிறார் நடிகர் சத்யராஜ். அதுவும் அவர் நடித்த கட்டப்பா என்ற கதாப்பாத்திரத்தின் தோற்றத்திலேயே அந்த மெழுகு சிலை அமைக்க இருப்பது கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.
யாரெல்லாம் இருக்கிறார்கள்?
இதுவரை பதிமூன்று இந்திய பிரபலங்களுக்கு மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை அமைக்கப்பட்டு இருக்கிறது. ஷாருக்கான், சலமான கான், அமிதாப் பச்சன், பிரபாஸ், ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், கேத்ரீனா கைப், நரேந்திர மோடி, அனில் கபூர், சத்தின் டெண்டுல்கர், மாதுரி தீட்ஷித், ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் வருண் தவன் ஆகியோர் அந்த அருங்காட்சியகத்தில் மெழுகு சிலையாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
பாகுபலியில் நடித்த பிரபாஸின் மெழுகு சிலை பாகுபலியின் தோற்றத்திலேயே உருவாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment on "மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் இடம்பெற இருக்கிறது நடிகர் சத்யராஜின் மெழுகு சிலை"