விஜய் சேதுபதியின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் மேற்குத் தொடர்ச்சிமலை படத்தின் டீஸர் – ஒரு பார்வை!

merku thodarchi malai

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஜய் சேதுபதியின் தயாரிப்பில் ஆரஞ்சு மிட்டாய், ஜூங்கா படங்களைத் தொடர்ந்து  மூன்றாவதாக வெளியாக இருக்கும் திரைப்படம் மேற்குத் தொடர்ச்சி மலை. இந்தப் படம் பல விருதுகளை வென்று உள்ளதாலும், இளையராஜா இசையமைக்கிறார் என்பதாலும் இந்தப் படத்தின் மீது ஆரம்பம் முதலே நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் சுதந்திர தினமான இன்று (ஆகஸ்டு 15) இந்தப் படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது.

எலக்சன் நடக்கும் அன்று 49O படத்தின் டீசரை வெளியிட்டார் நடிகர் கவுண்டமணி. அது லேசான விமர்சனத்தை உண்டாக்கியது. அதைத் தொடர்ந்து முக்கியமான நாளான இன்று உலகமெங்கும் அங்கும் இங்குமாய் பரவிக்கிடக்கும் நிலமற்ற உழைக்கும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையை மையமாகக் கொண்ட இந்தப் படத்தின் டீசரை வெளியிட்டு இருக்கிறார். இந்த நாட்டுல வாழ்றவன்ல பாதி பேரு தங்க இடமில்லாம பல வருசமா நாடோடியா திரிஞ்சுட்டு இருக்கான் ஆனா வருசம் வருசம் மனசாட்சியே இல்லாமே எப்படித்தான் சுதந்திர தினம் கொண்டாடுறிங்களோ என்று கேள்வி எழுப்பும் விதத்தில் உள்ளது இந்த டீசரும் டீசர் வெளியான நாளும்.

பேராண்மை, காடு, கடம்பன், பரதேசி போன்று இந்தப் படமும் மலை வாழ்ப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்களைப் பற்றிப் பேசுகிறது. இதன் காட்சிகளைப் பார்க்கும்போது  அவர்களுக்கு என்று சொந்தமான நிலங்கள் எப்போது உருவாக்கப்பட்டுத் தரும் இந்த அரசு என்பதை கேள்வி கேட்கும் படமாகத் தெரிகிறது. இயற்கையை மிக அழகாக காண்பித்து இருக்கிறார்கள். சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற பேரன்பு, டூலெட் படங்கள் வெளியாக உள்ளது. அந்தப் படங்களின் வரிசையில் இப்போது மேற்குத் தொடர்ச்சி மலை படமும் இணைந்து உள்ளது.

 

Related Articles

தமிழுக்குத் தீங்கு வந்தால் அக்கினி நட்சத... 11 மற்றும் 12ஆம் வகுப்பு மொழிப் பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒரு மொழியைத் தேர்வு செய்து தேர்வு எழுதினால் போதும் என்ற பள்ளிக் கல்வித்துறையின...
நடிகர்களை நம்பாதிங்க – சத்யராஜ்! ந... கமல், ரஜினி இருவரும் தங்களது அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டனர். இந்நிலையில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து நிகழ்ச்சி ஒன்றில், " நடிகர்களை நம்பாதி...
அஜித்திற்குப் ” பில்லா ” வைப... இருவரின் துரத்தலில் இருந்து தப்பித்து வருகிறார் கேகே. அவர் மீது பைக் ஒன்று மோத கேகே அடிபடுகிறார். மலேசிய போலீஸ் அவரை ஆஸ்பத்திரியில்  சேர்க்கிறார்கள். ...
முள்ளும் மலரும் இயக்குனர் மகேந்திரன் கால... இயக்குனர் மகேந்திரன் உதிரிபூக்கள், முள்ளும் மலரும், நெஞ்சத்தை கிள்ளாதே, நண்டு போன்ற படங்களை இயக்கியவர். பல படங்களுக்கு ஒளிப்பதிவ...

Be the first to comment on "விஜய் சேதுபதியின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் மேற்குத் தொடர்ச்சிமலை படத்தின் டீஸர் – ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*