இந்தியாவில் குழந்தைகள் திருமணம் குறைந்துள்ளது. ஆனால் குழந்தை தொழிலாளர்களின் நிலை?

child marriage decreased in India but not child labour

யுனிசெப் அமைப்பு

குழந்தைகள் திருமணம் இந்தியாவில் வெகுவாக குறைந்து வருவதாக யுனிசெப் அமைப்பு
பாராட்டு தெரிவித்துள்ளது.

குழந்தை திருமணம் குறித்த யுனிசெப் நேற்று வெளியிட்ட அறிக்கையில் முன்பு இந்தியாவில்
குழந்தைகள் திருமணம் அதிகளவில் இருந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு 47 சதவீதமாக இருந்த பதினெட்டு வயதுக்கு இளையவர் திருமணம் தற்போது 27 சதவீதமாக குறைந்துள்ளது. உலக அளவில் 2.5 கோடி குழந்தை திருமணங்கள் நடந்துகொண்டிருந்தது. இப்போது தெற்கு ஆசிய நாடுகளில் கடந்த பத்து ஆண்டுகளில் இந்த பிரச்சினை குறைந்துள்ளது கொஞ்சம் ஆறுதலான விசியம். அதே சமயம் குழந்தை திருமணங்களே இல்லை என்ற நிலைமையை அடைய 2030 ஆண்டில் தான் முடியும் என்று தெரிவித்துள்ளார். கடந்த பத்து ஆண்டுகளில் இருபது சதவீதம் குறைந்துள்ளது. இன்னும் பத்து ஆண்டுகளில் மிச்ச இருபது சதவீதம் குறைவதற்கு வாய்ப்பு உள்ளதாகவே வைத்துக்கொள்வோம்.

இப்போது குழந்தை தொழிலாளர்கள் பற்றி பார்த்தால் நிலைமை அப்படியே வேறாக இருக்கிறது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு எடுத்த கணக்கெடுப்பின்படி இந்தியாவில் குழந்தைத்
தொழிலாளர் முறையை ஒழிக்க இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்ற அதிர்ச்சித்
தகவலை வெளியிட்டுள்ளது கிரை என்ற குழந்தைகள் அமைப்பு.

சைல்ட் ரைட்ஸ் அண்ட் யூ (Child Rights and You), அதாவது சுருக்கமாக கிரை ( CRY) என்ற அமைப்பு
குழந்தைத் தொழிலாளர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அதன் படி, ஆண்டுதோறும் 2.2
என்ற விகிதத்திலேயே குழந்தைத்தொழிலாளர் முறை குறைந்து வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும், ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் இன்னமும் இந்தியாவில் குழந்தைத்
தொழிலாளர்களாக இருப்பதாக இந்த அமைப்புக் கூறுகிறது. இது ஆண்டு தோறும் 2.2 என்ற
விகிதத்தில் குறைந்து வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இன்றைய தலைமுறையினர் கவனத்திற்கு…

இங்கு எத்தனை பேர் மெரினா, ஸ்கெட்ச், வாகை சூடவா படம் பார்த்தீர்கள்.
பார்க்கவில்லையென்றால் அந்தப் படங்களின் கிளைமேக்ஸ்க்காக முடிந்தால் ஒரு முறை
பாருங்கள். அதில் வருவதைப் போன்று உங்கள் சுற்றத்தில் [ கல்லூரி மெஸ்ஸில் குறைந்த
கூலிக்கு அடிமை வேலை பார்க்கும் சிறுவன், பள்ளி கட்டிட சுவர் எழுப்பும் சித்தாள் சிறுவன், ரயில் பேருந்து நிலையங்களில் பிச்சை எடுக்கும் சிறுவன், கெத்து காட்டுவதாக கத்தி தூக்கி
கெத்து காட்டும் சிறுவன் ] இருக்கும் சிறுவர்களை நண்பர்களுடன் இணைந்து பள்ளியில் சேர்த்து
படிக்க வைக்க முற்படுங்கள். அப்போது கிடைக்கிற பீலிங்கே வேற. உங்கள நீங்களே ஹீரோவா
பீல் பண்ணுவிங்க.

Related Articles

பெண் பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு சில ஆலோ... பெண் பிள்ளைகளின் பெற்றோர் செய்யக் கூடியவை, செய்ய வேண்டாதவைதாய் தந்தையை தவிர வேறு யாரும் குழந்தையை தீண்ட அனுமதிக்க கூடாது. குழந்தைகள் தனியாக இ...
செப்டம்பர் 2-ஆவது வாரத்தில் ரஜினி கட்சி ... கடந்த டிசம்பர் மாதம் முப்பத்தி ஒன்றாம் தேதி அரசியலுக்கு வருவதை உறுதி செய்தார் ரஜினி. அதைத் தொடர்ந்து அவருக்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வர...
பூனை நம்மை கடித்து விட்டால் உடனடியாக நாம... ஏதாவது ஒரு விலங்கினை செல்லப்பிராணிகளாக வீட்டில் வளர்ப்பது உலகம் முழுக்க உள்ள மனிதர்களின் நற்பண்பாக இருக்கிறது. அந்த வகையில் மனிதர்கள் நாய்களை பூனைகளை ...
ஜூலை 23 – காப்பான் பிறந்தநாள்! ... காப்பான் படம் நடிகர் சூர்யாவும் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் கே. வி. ஆனந்தும் இணையும் மூன்றாவது படம். இதற்கு முன் அயன், மாற்றான் படங்களில் இணைந...

Be the first to comment on "இந்தியாவில் குழந்தைகள் திருமணம் குறைந்துள்ளது. ஆனால் குழந்தை தொழிலாளர்களின் நிலை?"

Leave a comment

Your email address will not be published.


*