தமிழ் எழுத படிக்கத் தெரியாத தமிழ்பிள்ளைகளை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Internet users blamed the tamil students who don't know to read and write their mother tongue.

விஜய் தொலைக்காட்சிக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. காரணம் நீயா நானாவில் சமீப காலமாக மிக முக்கிய தலைப்புகளில் விவாதங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம், தமிழகத்தில் பிறந்து வளர்ந்து தமிழை தாய் மொழியாக கொண்டிருந்த போதும் தமிழ் தெரியாத பிள்ளைகளுக்கும் தமிழகத்தில் பிறந்து வளராமல் வேற்று மாநிலத்தில் பிறந்து வளர்ந்து தமிழகத்திற்கு தஞ்சம் புகுந்து தமிழை எழுதப் படிக்க கற்றுக்கொண்டவர்களுக்கும் விவாதம் நடத்தப் பட்டது. அதில் பேசிய சில தமிழ் தெரியாத தமிழ் பிள்ளைகளை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பேசும் வகையில் பல சம்பவங்கள் நடைபெற்றது. ஜப்பானில் பிறந்து வளர்ந்த ஒருவர் தவில் கற்றுக்கொள்வதற்காக தமிழை எழுத படிக்க கற்றுக்கொண்டிருக்கிறார்.

இந்தியை தாய்மொழியாக கொண்டவர் மாலா என்பவர்.  தமிழை கற்றுத் தேர்ந்து இந்தியில் இருந்து இருபத்தி இரண்டு நூல்களை தமிழுக்கு மொழி பெயர்த்திருக்கிறார். இவரைப் போலவே குஜராத்தியை, மராத்தியை தாய் மொழியாக கொண்டவர்கள் எல்லோரும் தமிழைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்கள். அதுவும் சாதாரணமாக அல்ல. பதிணெண்கீழ்கணக்கு நூல் என்றால் என்ன ? மௌரியப் பேரரசு, சோழ சேர பாண்டிய பேரரசு காலத்தில் தமிழர்களின் நிலை ? தற்போது கீழடியில் என்ன நடந்துகொண்டு இருக்கிறது ? அந்துவன் யார் ? என்பது வரை தெரிந்து வைத்திருக்காறார்கள்.

இதற்கு எதிரணியில் இருந்த நம் வீட்டுப் பிள்ளைகளோ திருச்சிற்றம்பலம், பிசிராந்தையர் போன்ற வார்த்தைகளை கூட சரியாக படிக்கத் தெரியாமல் திணறுகின்றனர். பொங்கல் பண்டிகை எந்த மாதம் கொண்டாடுகிறார்கள் ? என்ற கேள்விக்கு ஜனவரி என்று பதிலளித்த மாணவனால் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் தமிழ் மாதத்தை சரியாக சொல்லத் தெரியவில்லை. அவர்களுடைய தாய் மொழிப்பற்று அந்த அளவில் உள்ளது. அதற்கு காரணம் சோம்பேறித் தனம், தமிழ் தானே என்ற அலட்சியம், பெற்றோர் வளர்ப்பு அப்படி என்று தங்கள் பிரச்சினையை அவர்களாகவே ஒத்தக் கொண்டு தமிழ் எழுத படிக்கத் தெரியாததற்காக வருத்தம் தெரிவித்து உள்ளார்கள். அனைத்து தமிழர்களும் கட்டாயம் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய நிகழ்ச்சி அது.

குறிப்பாக தமிழகத்தில் பிறந்து வளராதவன் தமிழன் அல்ல என்று கூறி வரும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் அவருடைய தம்பிகளும் அந்த நிகழ்ச்சியை கட்டாயம் பார்க்க வேண்டும்.

Related Articles

தல அஜீத்தை பற்றி அட்லீ என்ன சொன்னார்? &#... அக்டோபர் 24ம் தேதி மாலையில் #askatlee என்று டுவிட்டரில் ட்ரெண்ட் ஆனது. ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்துக் கொண்டிருந்தார் அட்லீ. அப்போது ரஜினி...
பள்ளி கல்லூரிகளில் எவிட்டாக்கள் தயாளன்கள... தமிழ் சினிமாவில் இதுவரை எப்படிப்பட்ட ஆசிரியர்களை எல்லாம் காண்பித்து இருக்கிறார்கள் என்பதை சுருக்கமாகப் பார்ப்போம். 1. தங்க மீன்கள் தங்க மீன்கள் எவிட...
கூலித் தொழிலாளிகள் ஏமாற்றி சம்பாதிப்பவர்... கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலைஞர் டிவியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன் நடுவராக பங்கேற்றார். அப்போது அவர் பல படங்...
மார்ச் மாதமே மண்டைய பிளக்கும் வெயிலா? &#... சில தினங்களுக்கு முன்பு சேலத்தில் நூறு டிகிரி பாரன்ஹீட் பதிவாகியிருக்கிறது. மார்ச் மாதமே இந்த நிலைமை என்றால் மே மாதங்களில் என்னென்ன பாடுபட போகிறோமோ? ...

Be the first to comment on "தமிழ் எழுத படிக்கத் தெரியாத தமிழ்பிள்ளைகளை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*