தியேட்டர் கிடைக்காததால் இணையத்தில் வெளியாகிறது பரியேறும் பெருமாள் கதிரின் சிகை!

Pariyerum perumal fame kathir's movie Sigai to be released in the web due to lack of theatre.

வருகிற 10 ம் தேதி ரஜினியின் பேட்ட மற்றும் அஜீத்தின் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்கள் ரிலீஸ் ஆவது நமக்கு தெரிந்த விஷியமே. இப்போது அந்தப் படங்களுடன் சேர்த்து கதிரின் சிகை படமும் ரிலீஸ் ஆக உள்ளது. ஆனால் தியேட்டரில் அல்ல… இணையத்தில்… ZEE5 என்ற ஆப் வழியாக ரிலீஸ் ஆகிறது.

மதயானைக் கூட்டம், கிருமி, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கதிர். இளம் வயதிலயே நல்ல நல்ல கதைகளை தேர்ந்து எடுத்து நடிக்கும் நடிகர். அட்லி மற்றும் விஜய் இணையும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கதிர் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் இந்தாண்டு தொடக்கமே கதிரின் நடிப்பில் உருவான சிகை திரைப்படம் வெளிவர இருக்கிறது. திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் டீசர் ட்ரெய்லர் பல மாதங்களுக்கு முன்பே ரிலீஸ் ஆகி இருந்தது என்றாலும் திரைக்கு வருவதற்கு உரிய நேரம் அமையாமல் தள்ளிச் சென்று கொண்டே இருந்தது. இந்த ஆண்டு துவக்கமே இந்தப் படத்திற்கு விடிவு காலம் பிறந்துள்ளது.

தியேட்டர் பிரச்சினை :

பேட்ட , விஸ்வாசம் இரண்டு படங்களுமே தமிழகத்தின் பெரும்பாலான தியேட்டர்களை கை பற்றிக் கொள்ள மிஞ்சிய தியேட்டர்கள் மட்டுமே சிகைக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. பெனாயில் வாடை வீசும் கொசுக்கள் நிறைந்த நாற்காலிகள் உடைந்த போன தியேட்டர்கள் தான் இந்தப் படத்தை திரையிட போகிறது. பேட்ட, விஸ்வாசம் இரண்டும் கமர்சியல் படங்கள் என்பதால் தீவிர சினிமா ரசிகர்களுக்கு சிகை போன்ற வித்தியாசமான கதைக்களம் உடைய படம் பிடித்துப் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நற்பெயரை சம்பாதித்து நாளடைவில் தியேட்டர்களை கைபற்றவும் அதிக வாய்ப்பு உண்டு.

இப்படி ஆரம்ப காலத்தில் பேச்சு அடிபட்டது. ஆனால் படம் தியேட்டருக்கு வரப் போவதில்லை. நேரடியாகவே இணையத்தில் வெளியாகிறது. இனி இது போன்ற சின்ன படங்கள் எல்லாம் தியேட்டரில் ரிலீஸ் ஆவது சந்தேகம் தான்! இருந்தாலும் இது நல்லதொரு மாற்று வழி என்கிறது சினிமா வட்டாரம்!

Related Articles

வதந்திகள் பரவாமல் இருக்க சில புதிய கட்டு... ஆகஸ்ட் ஐந்தாம் தேதி நண்பர்கள் தினமாம். ஆனால் நேற்று யாரோ ஒருவர் வாட்சப்பில் நண்பர்கள் தினம் வாழ்த்துக் கூற, மக்களும் நேற்று தான் உலக நண்பர்கள் தினம் ப...
ஈரோடு புத்தகத் திருவிழா கொண்டாட்டங்களும்... ஈரோடு வட்டாரத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் என்றாலே கொண்டாட்டம் தான். காரணம் ஈரோடு வ.உ.சி மைதானத்தில் பிரம்மாண்டம்மான புத்தகத் திருவிழா நடைபெறுவ...
ரஷ்யாவிடம் இருந்து S-400 ரக ஏவுகணைகள் வ... ரஷ்யாவிடம் இருந்து மேம்பட்ட இராணுவ தளவாடங்களை வாங்கும் இந்தியாவின் திட்டத்தால், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்ற...
நகர்ப்புற சாலைகளில் இனி மணிக்கு 70 கிலோ ... நகர்ப்புற சாலைகளில் வாகனங்கள் பயணிக்கும் வேகத்தை அதிகரித்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதன்படி கார்கள் இனி மணிக்கு 70 கிலோ மீட்டர் வ...

Be the first to comment on "தியேட்டர் கிடைக்காததால் இணையத்தில் வெளியாகிறது பரியேறும் பெருமாள் கதிரின் சிகை!"

Leave a comment

Your email address will not be published.


*