உத்திரபிரதேசத்தில் நடந்து வரும் சாதி ஆதிக்கம் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பது இல்லை. சக மனிதனை ஜாதியின் பெயரில் பொதுவெளியில் நிர்வாணமாக்கி அடித்து துன்புறுத்தி அதை பேஸ்புக்கில் போட்டு பெருமை பேசும் அரமெண்டல்கள் வாழும் மாநிலம் உத்திரபிரதேசம்.
அப்படிப்பட்ட மாநிலத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சஞ்சய் ஜாதவ்க்கும் கால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நிஜாம்பூரைச் சேர்ந்த ஷீத்தல் குமாரிக்கும் நடைபெற்ற திருமண ஊர்வலம் தான் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பு உரிமையை மீட்டு எடுத்து உள்ளது.
இவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பே திருமணம் நடந்திருக்க வேண்டியது. ஆனால் அப்போது அப்பகுதியில் வாழ்ந்த ஆதிக்க சாதியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். அதைத் தொடர்ந்து மணமக்களும் அவர்களின் நண்பர்களும் மாவட்ட நீதிபதி மற்றும் முதலமைச்சரை நாடிச் செல்ல பிரச்சினை பூதாகரமாகிப் போகிறதோ என்று அஞ்சி மணமக்களின் ஊர்வலத்துக்கு அனுமதி அளித்து உள்ளனர்.
இதனை அடுத்து சார்ட் வண்டியில் மணமகனின் ஊர்வலம் வெற்றிகரமாக நடத்தப்பட்டு உள்ளது.
Be the first to comment on "உத்தர பிரதேசத்தில் எண்பது ஆண்டுகளுக்குப் பின் தலித் மக்கள் மாப்பிள்ளை ஊர்வலம் செல்லும் உரிமையை மீட்டு எடுத்துள்ளனர்!"