இயக்குனர் மணி ரத்னம் மற்றும் இயக்குனர் ஏர்.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து லக்ஷ்மி, மா என்று இரண்டு குறும்படங்களை இயக்கி அதன் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் கேம் சர்ஜூன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம்.
பணம் சம்பாதிக்க முடியாமல் ஒரு பணக்கார பெண்ணை கடத்தி அதன் மூலம் பணம் ஈட்டி சொகுசு வாழ்க்கை வாழலாம் என்ற இருவர் திட்டம் தீட்டுகிறார்கள். அதனை செயல்படுத்துகிறார்கள். பணத்தையும் பெறுகிறார்கள், ஆனால் அந்தப் பணம் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தியதா என்பது தான் கதைக்களம். படத்தில் வில்லன், ஹீரோ என்றெல்லாம் யாரும் இல்லை. அதற்காக ஒரு பாராட்டு. சத்யராஜ், கிஷோர் என்ற இரண்டு நடிப்பு பிசாசுகள் படத்தை தாங்கி பிடித்திருக்கிறார்கள். யோகிபாபு படத்திற்குத் தேவையே இல்லை. படம் ஏற்கனவே மெதுவாக சென்றுகொண்டிருக்கிறது. அதற்கு இடையில் ஒரு பாட்டை போட்டு கடுப்பு ஏற்றி இருக்கிறார்கள். ஒளிப்பதிவு அற்புதம். இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி அவ்வளவாக கவனம் ஈர்க்கவில்லை.
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் சென்றால் உங்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் தான். இந்தப் படத்தை இயக்கியது சர்ஜூன் தானா? என்ற கேள்வி படம் பார்க்க பார்க்க பலமுறை வந்து சென்றது. குறைந்த பட்ஜெட்டில் சாதாரண கதையில் ஆங்காங்கே அழுத்தமான காட்சிகளை வைத்து படத்தை எடுத்து இருக்கிறார் சர்ஜூன். நிறைய எதிர்பார்க்கிறோம் சர்ஜூன்.
Be the first to comment on "எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்! – படம் எப்படி இருக்கு?"