உலக சினிமா “பெண் இயக்குனர்கள்”

Ladies Director in World Cinemas

1.Lee jeong hyang (The way home)

1964இல் தென்கொரியாவில் பிறந்தார்.  அங்கிருக்கும் ஜோன் பல்கலைக்கழகத்தில் பிரஞ்ச் இலக்கியம் படித்த பின் திரைப்பட கலைகளுக்கான கொரியன் அகாதமியில் திரைப்பட நுணுக்கங்களை கற்றார்.  திரைப்படத்தை மேலும் கற்றுக்கொள்ள இரண்டு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். 

இசையையும் மழையையும் பெரிதும் விரும்பும் இவர் 1989இல்  ஏப் பிளேஸ் பார் ஈவ் என்னும் தனது முதல் ஆவணப்படத்தை இயக்கினார்.  1998 இல் தனது முதல் படத்தை எடுத்தார். முதல் படத்துக்கே புதிய இயக்குனருக்கான Grand bell விருது  blue dragon விருதும் choonsa film விருதும் பெற்றார். 

இவர் தனது ‘தே வே ஹோம்’ படத்தை பற்றி கூறுகையில்  ‘பாட்டியும் இயற்கையும் ஒன்று என்பதே இப்படத்தின் கருத்து இயற்கை பேசுவது இல்லை எனவே இந்த கதையில் வரும் பாட்டியும் வார்த்தைகளே இல்லாத அன்பை தருகிறாள்’ என்று சொல்லும் இவர் இந்தப் படத்தில் தொழில்முறை அல்லாதவர்களை நடிகர்களாக பயன்படுத்தினார். 

2. Marzieh Meshkini (The day I became a woman)

ஈரானில் உள்ள டெஹ்ரானில் 1969 இல் பிறந்தவர் மெர்ஸ்யா மெஷ்கினி. இயக்குநர் மக்மல்ப்பிடம்  உதவி இயக்குனராகவும் படப்பிடிப்பை நிழற்படம் எடுப்பதாகவும் பணிபுரிந்து பின் அவரையே திருமணம் செய்து கொண்டார். 

‘ஒரு பெண்ணாக இருப்பதால் நான் பல பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் பெண்களுக்கான சம உரிமையை பெறுவதற்கு திரைப்படம் போன்ற முயற்சிகளை உதவும் என்று நான் நம்புகிறேன்’ என்கிறார் மெர்சியா.  இந்த படத்தின் திரைக்கதை எழுதியவர் இவரது கணவர் மக்மல்பஃப். 

3. Sabiha sumar (Khamosh pani)

பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் 1961 இல் பிறந்தவர் சபிஹா சமர்.  நியூயார்க் பல்கலைக்கழகத்தில் திரைப்பட கல்வியும் அரசியலும் படித்தார். பாகிஸ்தானில் 1979இல் நடைமுறைப்படுத்தப்பட்ட பெண்களுக்கு எதிரான இஸ்லாமிய சட்டங்களை விமர்சிக்கும் படத்தையும் 1996இல் இனத்தின் விடுதலைக்காகப் போராடும் தற்கொலைப் படையில் இருக்கும் பெண் கொரில்லா போராளிகள் பற்றிய ஆவணப் படத்தையும் எடுத்தார். 

‘காமோஷ் பாணி’ படம் குறித்து பேசும்போது ஒரு துளி ரத்தம் கூட இல்லாமல் அதிகமான வன்முறை மிக்க ஒரு படத்தை எடுக்க விரும்பினேன் என்று குறிப்பிட்டார்.  இது இவரது முதல் படம். 

4. Samira makhmalbaf (At five in the afternoon)

1980 ஆம் ஆண்டில் டெஹ்ரானில் பிறந்தார். 14 வயதிலேயே தன் பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்டு தன் தந்தையும் இயக்குனருமான மக்மல்பஃபின் திரைப்படப் பள்ளியில் 8 வருடங்கள் திரைப்படக்கலை பயின்றார். பதினேழு வயதிலேயே “ஆப்பிள்” என்னும் தன் முதல் படத்தை இயக்கினார். 

கேன்ஸ் திரைப்பட வரலாற்றிலேயே முதன்முறையாக மிகக்குறைந்த வயதில் போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு விருதும் பெற்ற பெருமை அடைந்தார். சிறுவயதிலேயே உலகின் மிக உயர்ந்த திரைப்பட விழாக்களான கேன்ஸ் பெர்லின் வெனிஸ் முதலான விழாக்களில் நடுவராக கலந்து கொள்ளும் தகுதியைப் பெற்றார். மூன்று படங்களையே இயக்கியிருக்கும் இவர் உலகப் பெண் இயக்குனர்களில் முக்கியமானவர். 

 “என் கதைக்கு நடிகர்கள் தேவையில்லை என் கதையில் வருவதைப் போன்ற சாயல் உடைய நிஜ மனிதர்களை தேடி கிராமம் கிராமமாக அலைகிறேன் அவர்கள் தங்கள் இயல்பான மொழியில் பேசி நடிப்பது எனக்குப் போதுமானது” என்று சொல்லும் இவரது இந்த படத்திலும் நடித்திருப்பது தெருவோரத்தில் கண்டுபிடித்து சாதாரண மனிதர்களே. 

5. Mira Nair (Salaam bombay)

1957 இல் இந்தியாவில் ஒரிசாவில் சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் மூன்று குழந்தைகளில் கடைசியாக பிறந்தார். டெல்லியில் உள்ள பல்கலைக்கழகத்தில் சமூகவியல் படித்தார். அரசியல் சார்ந்த தெரு நாடக குழுவில் இணைந்து மூன்று வருடங்கள் நடித்தார்.

 19 வயதில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான ஊக்கத்தொகை கிடைத்ததும் அங்கு சேர்ந்து படித்தார். ஆவணப்படங்களின் இயக்குனராக முதன்முதலாக காபரே ஆடும் இந்திய பெண்களின் வாழ்க்கையை படமாக எடுத்தார். 

‘உண்மைக்கு மிக நெருக்கமாக இருந்து என் இதயத்துடிப்பை அதிகரிக்கும் எதார்த்தமான கதைகளையே நான் படமாக எடுக்கிறேன்’ என்று சொல்லும் இவர் கொலம்பியா பல்கலைகழகத்தின் கலைப்பிரிவில் பகுதி நேரப் பேராசிரியர். 

6. Jane campion (The piano)

நியூசிலாந்தில் உள்ள வெலிங்டன் என்னும் இடத்தில் 1954 இல் பிறந்தார். 1975இல் வெலிங்டனில் உள்ள விக்டோரியா பல்கலைக்கழகத்தில் மனித இனம் குறித்த ஆராய்ச்சி படிப்பில் இளங்கலை படித்தார். பின்னர் சிட்னியில் ஓவியத்தை முதன்மையாக கொண்ட இளங்கலை படிப்பை முடித்த பின் அங்குள்ள திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து திரைப்படத்தின் நுட்பங்களை பயின்றார். 

1982 இல் இவர் எடுத்த குறும்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது பெற்றது. தொடர்ந்து குறும்படங்களை இயக்கிய இவர் 1989 இல் தனது முதல் முழுநீள படத்தை எடுத்தார். 

‘சுதந்திரத்துக்காக போராடும் உறுதியான பெண்ணிய இயக்கத்தின் குழந்தையாக என்னை நான் உணர்கிறேன்’  என்று சொல்லும் இவர் கேன்ஸ் திரைப்பட விழாவில் தங்கப் பனை விருது பெற்ற முதல் பெண் இயக்குனர். நியூசிலாந்தின் முக்கியமான இயக்குனரான இவர் தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். 

Related Articles

இன்றைய தமிழ் சமூகத்தில் “பெண் குழந... இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் உருவான படம் "கருத்தம்மா". 1996ல் நான் பிறந்தேன். நான் பிறப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே அதாவது 1994 ல் வெளியான இ...
ரஜினியை சாக்கடைக்குள் தள்ளிவிட்ட ரஞ்சித்... ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான, பலருடைய மூன்றரை வருட உழைப்பை சுமந்த 2.O படம் தற்போது ரிலீசாகி நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது.ரஜி...
இளையராஜாவும் வைரமுத்துவும் பிரிந்த கதை! ... கவிதை தளத்தில் நன்கு அறியப்பட்ட வைரமுத்து மொழிக்கும் மண்ணுக்குமான தொடர்பை திரையில் விரித்திருக்கும் பாரதிராஜா மூலமாய் திரைக்குள் நுழைய விரும்பினார். அ...
டெல்லி டேர்டெவில்ஸ் (DD) 2018 ஐபிஎல் அணி...  வரிசை எண் போட்டி எண் தேதி டெல்லி டேர்டெவில்ஸ் போட்டிகள் நேரம் இடம்1 2 8-ஏப்ரல் டெல்லி vs பஞ்சாப் 4:00 PM டெல்லி...

Be the first to comment on "உலக சினிமா “பெண் இயக்குனர்கள்”"

Leave a comment

Your email address will not be published.


*