மருத்துவ பரிசோதனைகள் செய்து பார்க்க குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட குரங்குகள்

Monkey

இருபது ஆண்டுகளுக்கு முன்பு குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட டோலி என்ற ஆட்டுக்குட்டியைப் போலவே, அதே தொழில்நுட்பத்தை பின்பற்றி தற்போது சோங் மற்றும் ஹுவா என்ற இரண்டு குரங்கு குட்டிகள் சீனாவில்  உருவாக்கப்பட்டுள்ளன. மருத்துவ பரிசோதனைகள் செய்து பார்க்க இந்தக் குரங்கு குட்டிகள் உருவாக்கப்பட்டிருப்பதாக அதை உருவாக்கிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ பரிசோதனைகளுக்காக

பிறந்து பத்து வாரங்களே ஆன இந்தக் குரங்கு குட்டிகள் மருத்துவ பரிசோதனைகள் செய்து பார்க்க உருவாக்கப்பட்டுள்ளன. இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வரும் காலங்களில் நிறைய இதே போல குரங்கு குட்டிகள் உருவாக்கவும் திட்டம் உருப்பதாக அதை உருவாக்கியவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் குளோனிங் முறை மிகச் சிக்கலானதாகவும், மிகவும் விலைஉயர்ந்ததாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

‘இருபத்தியோர்  குரங்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டு , எழுபது கருக்கள் அவற்றின் உள்ளே செலுத்தப்பட்டன. அவற்றில் ஆறு குரங்குகள் மட்டுமே கர்ப்பம் தரித்து, முடிவில் இரண்டு குட்டிகள் பிறந்தன’ என்று ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

நோய்களுக்கான தீர்வு

மனிதர்களுக்கும், மனிதர் அல்லாத உயிரினங்களுக்கும் நெருக்கமான ஒற்றுமைகள் இருப்பதாகவும், அவற்றில் குரங்கு முதன்மையில் இருப்பதால் குளோனிங் முறையில் நிறையக் குட்டிகள் உருவாக்கப்பட்டு அவற்றின் மீது மருத்துவ சோதனைகள் செய்து பார்க்கும் பட்சத்தில் மருந்து கண்டுபிடிக்க எளிமையாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக பார்கின்ஸன் போன்ற நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்க குரங்குகள் உதவியாக இருக்கும் என்றும் மேலும் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

குளோனிங் எப்படி வேலை செய்கிறது?

1996 ஆம் ஆண்டு குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட ஆட்டுக்குட்டியைப் பின்பற்றி நிறைய விலங்குகள் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டன. மாடு, குதிரை மற்றும் நாய் போன்றவை விளையாட்டு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தேவைகளுக்காக குளோனிங் செய்யப்பட்டு இருக்கின்றன. அவை ‘Somatic Cell Nuclear Transfer ‘ என்ற முறையில் குளோனிங் செய்யப்பட்டு இருக்கின்றன.

‘Somatic Cell Nuclear Transfer என்றால் என்ன?

1 ) Somatic Cell Nuclear Transfer என்பது குளோனிங் செய்ய பின்பற்றப்படும் ஒரு தொழில்நுட்பம்.

2 ) ஆரோக்கியமான முட்டை ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டு, பிறகு அதன் கரு அகற்றப்படும்

3 ) கரு நீக்கப்பட்ட முட்டை இப்போது இன்னொரு கருவை சுமக்க தயாராகிறது

4 ) இன்னொரு உயிர் அணுவில் இருந்து எடுக்கப்படும் கரு, ஏற்கனவே கரு நீக்கப்பட்ட முட்டையில் செலுத்தப்படும்

5 ) முட்டை, பிறகு தேர்ந்தெடுத்த புதிய உயிரினம் எதிலாவது செலுத்தப்படும்.

6) அந்த உயிரினத்திற்கு பிறக்கும் குட்டி,  கருவை தானம் செய்ததன் டிஎன்ஏவை ஒத்து இருக்கும்.

ஒரு உதாரணத்தின் மூலம் எளிமையாகப் புரிந்துகொள்வோம். ஒரு முட்டைத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் கரு அகற்றப்படுகிறது. பிறகு அந்த முட்டையில் சக்திமானின் உயிரணுவில் இருந்து ஒரு வித்து பிரிக்கப்பட்டு, ஏற்கனவே கரு அகற்றப்பட்ட முட்டையில் செலுத்தப்படுகிறது. இப்போது அந்த முட்டையை x என்ற பெண்ணுக்குள் செலுத்தப்படுகிறது. பிறக்கும் குழந்தைக்கும், சக்திமானுக்கும் ஒரே டிஎன்ஏ இருக்கும். பிறக்கும் குழந்தை சக்திமானின் காப்பியாக இருக்கும்.

இரண்டு குரங்கு குட்டிகளையும் குளோனிங் முறையில் உருவாக்கம் செய்ய 55000 டாலர்கள் செலவு செய்யப்பட்டு இருக்கின்றன.

Related Articles

முள்ளும் மலரும் இயக்குனர் மகேந்திரன் கால... இயக்குனர் மகேந்திரன் உதிரிபூக்கள், முள்ளும் மலரும், நெஞ்சத்தை கிள்ளாதே, நண்டு போன்ற படங்களை இயக்கியவர். பல படங்களுக்கு ஒளிப்பதிவ...
கலைக்கும் கலைஞனுக்கும் சாவு இல்லைதான் அத... சீதக்காதி பெயர்க்காரணம் ஏன்?'செத்துங் கொடுத்தான் சீதக்காதி` என்று இன்றும் தமிழ் உலகில் வழங்கிவரும் முதுமொழி ஒன்றே அவரின் வள்ளன்மையை உலகுக்குப் பற...
ஜூலை 23 – காப்பான் பிறந்தநாள்! ... காப்பான் படம் நடிகர் சூர்யாவும் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் கே. வி. ஆனந்தும் இணையும் மூன்றாவது படம். இதற்கு முன் அயன், மாற்றான் படங்களில் இணைந...
இவர்களில் “பொன்னியின் செல்வன̶்... கல்கி எழுதிய பொன்னியின் செல்வனை படமாக எடுத்தால் எப்படி இருக்கும்? என்ற கேள்வி பல வருடங்களாகவே புத்தக வாசிப்பாளர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் மத்தியில...

Be the first to comment on "மருத்துவ பரிசோதனைகள் செய்து பார்க்க குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட குரங்குகள்"

Leave a comment

Your email address will not be published.


*