முள்ளும் மலரும் இயக்குனர் மகேந்திரன் காலமானார்!

Mullum Malarum Director Mahendran passed away!
  1. இயக்குனர் மகேந்திரன் உதிரிபூக்கள், முள்ளும் மலரும், நெஞ்சத்தை கிள்ளாதே, நண்டு போன்ற படங்களை இயக்கியவர்.

 

  1. பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்தவர்.

 

  1. தெறி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தவர்.

 

  1. நிமிர், பேட்ட, சீதக்காதி போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

 

  1. சினிமாவும் நானும் என்ற தலைப்பில் தன்னுடைய சினிமா வாழ்க்கை அனுபவ கட்டுரைகள் எழுதியுள்ளார். புத்தகமாக கிடைக்கிறது.

 

  1. அந்திமழை எனும் நாவல் எழுதியுள்ளார்.

 

  1. சிறுகதைகளை படமாக்குவதில் கைதேர்ந்தவர்.

 

  1. கல்கி போன்ற இதழில் பிரசுரமான கதைகளை, சிவசங்கரி போன்ற பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளை  படமாக்கியுள்ளார்.

 

  1. இன்றைய இயக்குனர் பலருக்கு அவருடைய படங்கள் ( முள்ளும் மலரும், நண்டு, உதிரிப்பூக்கள் ) பாடமாக உள்ளன.

 

  1. BOFTA திரைப்பட பள்ளியில் இவர் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.

பாலச்சந்தர், பாலுமகேந்திரா, பாரதிராஜா வரிசையில் உள்ளவர் இயக்குனர் மகேந்திரன். தமிழ் சினிமாவிற்கு அவருடைய மரணம் நிச்சயம் ஒரு பேரிழப்பு தான்.

Related Articles

தத்தகிட தித்தோம் – உறியடி 2 விமர்ச... கெமிக்கல் இன்ஜினியரிங் படித்த மூன்று வேலையில்லாத இளைஞர்கள் ஒரு பக்சான் என்ற கெமிக்கல் கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார்கள். அந்தக் கெமிக்கல் கம்பெனியில்...
யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே! ... கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த திமுக மாநாட்டில் யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே என்று தவறுதலாகப் பழமொழியை மாற்றி வாசித்து நெட்டிசன்களுக்கு...
ஜவுளிக்கடையில் குழந்தை தொழிலாளர்கள் படும... நவம்பர் 14 குழந்தைகள் தினம் இந்தியா முழுக்க கொண்டாடப் படுகிறது. ஆனால் இந்தியாவைப் பொறுத்த வரையில் பண்டிகைகளை தவிர தேசிய தினங்கள் எதுவும் உண்மையாக கொண்...
2019ல் ஆனந்த விகடனில் அதிக மதிப்பெண் வாங... 2019ல் வெளியான படங்களில் மிக முக்கியமான படம் பேரன்பு. இந்தப் படத்திற்கு ஆனந்த விகடன் 56 மதிப்பெண்கள் தந்தது. இந்தப் படத்திற்கு ஆனந்த விகடன் விமர்சனம் ...

Be the first to comment on "முள்ளும் மலரும் இயக்குனர் மகேந்திரன் காலமானார்!"

Leave a comment

Your email address will not be published.


*