சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சிறுநீரக கோளாறு உடல் சூடு குறையும்.
சுரைக்காயில் வைட்டமின் பி சி சத்துக்கள் உள்ளன. நீர்ச்சத்து 96. 07 % , இரும்பு சத்து 3. 2 %, தாது உப்பு 0. 5 % பாஸ்பரஸ் 0. 2 % புரதம் 0. 3 % கார்போ ஹைட்ரேட் 2. 3 % போன்ற சத்துக்களை கொண்டுள்ளது சுரைக்காய்.
சுரைக்காயின் சதை பகுதியை ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச் சாற்றை சேர்த்து பருகி வர சிறுநீரக கோளாறுகளிலிருந்து குணம் பெறலாம். சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு ஆகிய நோய்களுக்கு சிறந்தது.
அஜீரண கோளாறு உள்ளவர்கள் சுரைக்காய் சாப்பிடலாம். கோடைக் காலத்தில் சுரைக்காய் சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. மேலும் நாவறட்சியை போக்கும்.
கை கால் எரிச்சல் நீங்க சுரைக்காயின் சதைப் பகுதியை எரிச்சல் உள்ள இடத்தில் வைத்து கட்டினால் எரிச்சல் குறையும். உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள விரும்பினால் சுரைக்காயை பயன்படுத்தலாம்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த காயை அடிக்கடி பயன்படுத்தி வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.
வெப்பத்தினால் வரும் தலைவலி நீங்க சுரைக்காயின் சதைப் பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும்.
சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்ப நோய்கள் ஏதும் ஏற்படாது.
மனித உடலில் உள்ள தேவையற்ற வியர்வை சிறுநீர் வழியாக வெளியேறும். சுரையின் இலைகளை நீர்விட்டு ஊற வைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம் பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் பயன்படுத்தலாம்.
சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து வந்தால் பித்தம் சமநிலை அடையும். சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வை கொடுத்து உடலை வலுப்படுத்தும்.
சுரைக்காயின் மகிமையை விதை ஒன்று போட சுரை என விளையும் என்ற பழமொழி மூலம் அறியலாம்.
Related Articles
நாம் உண்ணும் உணவின் வரலாறு – பகுதி... மிளகு பொங்கல், பெப்பர் சிக்கன், ரசம் , முட்டை வறுவல். இதில் எல்லாம் சேர்க்கப்படும் பொதுவான ஒரு உணவுப் பொருளை பற்றித்தான் தொடரின் இந்தப் பகுதியில் பார்...
எழுத்தாளர் பிரபஞ்சனின் மகாநதி ஒரு பார்வை... "பிரிவு ரொம்பவும் சங்கடமான விஷியம் தான். பிரியத்துக்கு உரியவர்களைப் பிரிவது என்பது ரொம்பவும் வேதனை தரும் அனுபவம்... " இந்த வரிகள் எழுத்தாளர் பிரபஞ்சனி...
புதிய தொலைக்காட்சி சேனல், புதிய நாளிதழ் ... மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த வரையில் அதிமுகவின அதிகாரப்பூர்வ நாளேடாக நமது எம்ஜிஆரும், அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான ஜெய டிவியும் செயல்பட்ட...
விநாயக சதுர்த்தியை வீட்டில் எவ்வாறு கொண்... பிள்ளையார் அனைவருக்கும் பிடித்த கடவுள். எந்த ஒரு காரியமும் தடையில்லாமல் நிறைவேற விநாயகரை வழிபட்டு ஆரம்பிப்பது நமது வழக்கம். விநாயகரின் பிறந்த நாளான வி...
Be the first to commenton "சுரைக்காயின் பயன்கள் என்னென்ன? "
Be the first to comment on "சுரைக்காயின் பயன்கள் என்னென்ன? "