‘தற்போதைக்கு சேவை இல்லை’, ‘உங்கள் இடத்திற்கு இந்தச் சேவை இல்லை’ போன்ற விதவிதமான புகார்களை உணவு செயலியில் பார்த்துச் சலித்து போன பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர், இங்கிலாந்தில் இருக்கும் ஒரு இந்திய உணவகத்தில் இருந்து தனக்கும், தனது நண்பர்களுக்கும் தனக்கு விருப்பமான உணவை விமானத்தில் வரவழைத்து உண்டு மகிழ்ந்துள்ளனர்.
இங்கிலாந்து நாட்டில் ஹாம்ப்ஷயர் பகுதியில் இயங்கி வரும் இந்திய உணவகத்தின் பெயர் ஆகாஷ். அங்கிருந்து ஐந்நூறு மைல் தொலைவில் உள்ள பிரான்ஸ் நாட்டிற்கு, தனியார் விமானம் மூலம் அவர்கள் கேட்ட உணவு வகைகள் அனுப்பப்பட்டு இருக்கிறது. எண்பத்து ஒன்பது சாப்பாடு, எழுபது வகையான தொடு கறிகள், மாங்காய் ஊறுகாய், நூறு அப்பளம் என்று ராஜ உணவு பிரான்சுக்கு பார்சல் அனுப்பப்பட்டு இருக்கிறது. பிரான்சில் கிடைக்கும் இந்திய உணவுகள் மிகவும் தரமற்று இருப்பதாகவும், அதனால் இங்கிலாந்தில் இருந்து வர வைத்ததாக அதைப் பெற்றுக்கொண்டவர் தெரிவித்தார். ஆகாஷ் நிறுவனத்தின் நிறுவனர் இது தங்களின் உணவகத்திற்குக் கிடைத்த பேறு என்று தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கு அடுத்த பிளைட்டு எப்பன்னு கேளுங்க, கொஞ்சம் பழைய சோத்தை பார்சல் பண்ணுவோம்.
Be the first to comment on "விமானம் கண்டுபிடிச்சது வேணும்னா உங்க ஊர்க்காரனா இருக்கலாம். ஆனா அதுல அப்பளம் வெச்சு அனுப்பலாம்னு கண்டுபிடிச்சது நாங்கதாண்டா"