இனி உங்கள் வணிகத்திற்கும் வாட்ஸஅப் பயன்படுத்தலாம்

Business Whatsapp

சிறு வணிகர்களையும், வணிகத்தையும் குறிவைத்து வாட்ஸஅப் பிசினஸ் என்ற செயலியை வாட்ஸஅப் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதற்கான முன் நகர்வுகளை எடுத்த அந்த நிறுவனம் தற்போது இந்தியாவில் வணிகத்திற்கான பிரத்யேக செயலியை அறிமுகப்படுத்தும் திட்டத்திற்கு செயல் வடிவம் தந்துள்ளது.

என்ன இருக்கிறது இந்த புதிய செயலியில்?

வாட்ஸஅப் பிசினஸ் என்ற செயலியை பயன்படுத்துவதன் மூலம் வணிகர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை எளிதில் தொடர்பு கொள்ள முடியும். வாட்ஸஅப் நிறுவனத்தை பேஸ்புக் கையகப்படுத்திய பிறகு, வணிகம் சார்ந்து இயங்கும் வாடிக்கையாளர்களைக் குறிவைத்து நிறைய புதிய அம்சங்கள் அதில் சேர்க்கப்பட்டு வந்தன. அதன் ஒரு பகுதியாக சிறு மற்றும் குறு வணிகர்களுக்கு பிரத்யேகமாக சேவை வழங்கும் ஒரு செயலியை வடிவமைத்து வெளியிடக் கடந்த செப்டம்பர் மாதம் திட்டமிட்டனர். முதற்கட்டமாகச் சோதனை முயற்சியாக, புக மை ஷோ, நெட்ப்ளிக்ஸ் மற்றும் மேக மை ட்ரிப் போன்ற நிறுவனங்களோடு கை கோர்த்து இந்தச் செயலி பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்தியாவில் பரிசோதனை செய்து பார்க்கப்பட்ட இந்தச் செயலி இந்தோனேசியா, இத்தாலி, மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளது.

எப்படி இயங்குகிறது?

உலகம் முழுவதும் 1 . 3 பில்லியின் வாடிக்கையாளர்கள் ஏற்கனவே வாட்ஸஅப் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், வணிகத்திற்கான பிரத்தியேக செயலியை இப்போது அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்து கொள்ளும் வகையில் நிறைய புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தொழில் முனைவோர் தங்களுக்கென பிரத்தியேகமாக சுயவிவர குறிப்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும். அதில் தாங்கள் என்ன மாதிரியான தொழில் செய்கிறோம் என்ற விவரம், மின்னஞ்சல் குறிப்புகள், இணையதளம், தொலைப்பேசி எண் போன்ற மேலதிக விவரங்களையும் உருவாக்கிக் கொள்ளலாம். மேலும் வாடிக்கையாளர்களில் அடிக்கடி கேட்கும் கேள்விகளுக்குத் தானாகவே பதிலளிக்கும் வகையில் குறுந்செய்தி தளமும் இந்தச் செயலியோடு இணைக்கப்பட்டுள்ளது. வாட்ஸஅப் வெப் மூலமும் எத்தனைச் செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன, அதில் எத்தனை வாசிக்கப்பட்டுள்ளன போன்ற விவரங்களை மேசை கணினி மூலம் தெரிந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.

மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், இந்தியா மற்றும் பிரேசிலில் உள்ள எண்பது சதவீதத்திற்கும் அதிகமான சிறு தொழில்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளவும், தொழிலை விருத்தி செய்யவும் வாட்ஸஅப் பயனுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

என்னென்ன வசதிகள்?

வாட்ஸஅப் செயலியை போலவே , வாட்ஸஅப் பிசினஸ் செயலியிலும் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. அதன்மூலம் உங்கள் சுயவிவரங்களையும், உங்கள் நிழற்படத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். தொல்லை தரும் தொடர்புகளை பிளாக் செய்யலாம். தொழில் செய்யும் நிறுவனம் இருக்கும் இடத்தை வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கலாம். வாட்ஸஅப் போலவே இதிலும் குரல் அழைப்பு மற்றும் காணொளி அழைப்பு மேற்கொள்ளலாம். வாட்ஸஅப் போலவே இதில் அனுப்பப்படும் செய்திகளும் மறையாக்கம் செய்யப்பட்டுப் பாதுகாப்பு அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

அடுத்த தீபாவளிக்கு எவ்வளவு தள்ளுபடி என்பதை உங்கள் கடைக்காரரிடம் வாட்சப்பில் கேளுங்கள்.

Related Articles

இத இட்லினு சொன்னா சட்னி கூட நம்பாது̷... சூதுகவ்வும் திரைப்படம் வெளியாகி இன்றோடு (01-05-2013) ஆறு வருடங்கள் ஆகப்போகிறது. நலன் குமாரசாமி, ஸ்ரீனிவாஸ் கவிநயம் இருவரும் கதை எழுதி உள்ளனர். நயன்தார...
கூர்கா படத்தின் கதை திருடப்பட்டதா? ̵... கூர்கா படம் யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் 2 வது படம். ஹீரோவாக நடித்த முதல் படம் தர்ம பிரபு. ஜீவி யின் டார்லிங், ஜீவி யின் எனக்கு இன்னோரு பேரு இ...
ஜூலை 23 – காப்பான் பிறந்தநாள்! ... காப்பான் படம் நடிகர் சூர்யாவும் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் கே. வி. ஆனந்தும் இணையும் மூன்றாவது படம். இதற்கு முன் அயன், மாற்றான் படங்களில் இணைந...
சர்தார் வல்லபாய் படேல் சிலையும் விவசாயிக... அக்டோபர் 31 சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு (தேசிய ஒற்றுமை தினம்) இன்று அவருடைய சிலை திறப்பு விழா குஜராத்தில் கோலாகலமாக நடந்து முடிந்...

Be the first to comment on "இனி உங்கள் வணிகத்திற்கும் வாட்ஸஅப் பயன்படுத்தலாம்"

Leave a comment

Your email address will not be published.


*