அரவக்குறிச்சி தொகுதி என்றாலே ஓட்டுக்கு அதிகப் பணம் வாங்கும் தொகுதி என்று தான் எல்லோரும் கூறுகிறார்கள். அந்த அளவுக்கு நற்பெயரை சம்பாதித்திருக்கிறது அரவக்குறிச்சி தொகுதி.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் நூற்றுக்கணக்கான மக்கள் வேட்பாளராக நிற்க ஒட்டுமொத்த தமிழகமே அரவக்குறிச்சி தொகுதியை திரும்பி பார்த்தது. அப்போது முதலே அரவக்குறிச்சி தொகுதி தனக்கென ஒரு மாஸை கிரியேட் செய்து வைத்திருக்கிறது. அரவக்குறிச்சி தொகுதியில் எந்தக் கட்சி ஜெயிக்கிறதோ அது தான் வலுவான கட்சி என்ற ரீதியில் ஒரு இமேஜ் கிரியேட் ஆகியுள்ளது.
அவ்வகையில் அரவக்குறிச்சி தொகுதிக்கு சொந்தக்காரரான செந்தில் பாலாஜி இந்த வருடம் தனது தாய்க்கட்சியான திமுகவிற்கே திரும்பி உள்ளார். ஆக எதிர்க்கட்சிகளான அதிமுக உறுப்பினர்கள் மற்றும் அமுமக உறுப்பினர்கள் தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற வெறியோடு காத்திருக்கிறார்கள்.
அரவக்குறிச்சி தொகுதியைப் பொறுத்த வரை அதிமுக தான் சில ஆண்டுகளாக வெற்றி பெற்று வருகிறது. இந்த தொகுதி மக்களும் ஒவ்வொரு தேர்தலின் போதும் ஓட்டுக்கான விலையை அதிகமாக்கி கொண்டே இருக்கிறார்கள். கடந்த தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 3000 வழங்கியது அதிமுக. திமுக 2000 ம் தந்தது. ஆனால் இந்த தேர்தலுக்கோ ஒரு ஓட்டுக்கு குறைந்த பட்சம் 20000ம் வேண்டும் என்று முரண்டு பிடிப்பதாக கூறப்படுகிறது. இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. அரவக்குறிச்சி தொகுதியின் தேர்தல் ஆணையம் எவ்வளவு தான் நடவடிக்கை எடுத்தாலும் பணப் பட்டுவாடா மிக வெளிப்படையாகவே நடந்துகொண்டு தான் இருக்கிறது.
கடந்த தேர்தலின் போதே அரவக்குறிச்சி தொகுதிக்கு தேர்தலை தள்ளி வைத்தார்கள். இந்த வருடம் அதிரடி அரசியல் ஆட்டங்கள் நடக்க இருப்பதால் அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கு ஊலாலா தான். அரவக்குறிச்சி அருகே உள்ள மற்ற தொகுதி மக்களோ நாங்களும் பேசாம அரவக்குறிச்சி ல இருந்துருக்கலாம் என்று பொறாமை படும் அளவுக்கு தேர்தலை ஜமாய்க்கிறது அரவக்குறிச்சி!
ஆர்கேநகர் எலக்சனில் மாஸ் காட்டினார் டிடிவி. அரவக்குறிச்சி தொகுதியில் அவருடைய புகழ் ஓங்க வேண்டும் என்பதற்காக அவர் மக்கள் கேட்பதை விட அதிக தொகை கொடுத்து அனைவரையும் பொங்க வைத்திடுவார் என்றும் பேசப்படுகிறது.
Be the first to comment on "2019ம் ஆண்டு அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கு கொண்டாட்டமான ஆண்டாக இருக்க போகுதா?"