இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் K-13. நாயகன் திரைப்பட இயக்குனர், நாயகி எழுத்தாளர்(காட்சிப் பிழை என்ற புத்தகம் எழுதியுள்ளார்). இருவரும் ஒரு ஹோட்டலில் குடியும் கும்மாளமுமாக இருக்கும்போது சந்திக்கிறார்கள். நாயகியின் அறையில் அன்றிரவு நாயகன் ஒரு நாற்காலியில் கட்டிப்ப்போட பட்டிருக்கிறார். நாயகி மணிக்கட்டை அறுத்து இறந்து கிடக்கிறார். நடந்தது கொலையா? தற்கொலையா? என்று வினா எழுப்பி பதட்டப்படுத்தி பதில் தருகிறது K13 படம்.
பிணத்துடன் ஆவேசமாக கெஞ்சலாக இரக்கமாக புலம்பலாக பேசும் காட்சியில் ரத்த்தத்துக்கு ஸ்பிரே அடித்தல், கிப்ட் பொம்மையின் வாயைப் பொத்துதல் போன்ற இடங்களில்
நாயகனின் நடிப்பு அருமை. நாயகியை காட்டிலும் இரண்டாம் நாயகியாக வரும் காயத்ரி அதிகம் மனதை கவர்கிறார். யோகி பாபு கொரியர் பாயாக வருகிறார். ஒன்லைன் வசனங்களால் சிரிக்க வைக்கிறார். எரும சாணி விஜய் லொடாலொடவென பேசிக்கிட்டே இருக்கிறார் ஆனால் சிரிப்பே வரவில்லை. ஒரே அறைக்குள் ஒளிப்பதிவு சலிக்க வைக்காமல் விறுவிறுப்பாக செல்கிறது. பின்னணி இசை அருமை. செம மிரட்டலாக இருக்கிறது சாம் சிஎஸ்ஸின் திக்திக் இசை. ஆனால் பாடல்கள் மனதைக் கவரவில்லை.
1000ம் விஷியங்கள் யோசிப்போம் ஆனா எழுதும்போது ஒன்னுமே வராது…
சினிமாதானன்னு சொன்னா உயிர்தானன்னு எடுத்துருவேன்…
ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு பொறப்பு… அது கூடவே பிறந்து வளர்ந்து அழுது சாகனும்…
100 பேருக்கு முன்னாடி அறிவு இல்லைன்னு திட்னது, என் கதைய பிரெண்டு திருடனது, முதல்படம் ஷூட் ஆரம்பிச்சி பத்துநாள் ஷூட்டிங் போய் கேன்சல்… பத்து வருசம் காணாம போச்சு…
மத்தவங்க எதிர்பாக்குற மாதிரி நாம இல்லன்னா அது ஒரு நோயா… போன்ற வசனங்கள் ஒரு இயக்குனரின் மனநிலையை அப்படியே பிரதிபலிக்கின்றன.
உனக்கு எல்லாமே கதை தான் எல்லாருமே கதாபாத்திரம் தான்… எழுத்தாளர்கள் ஒரு கதைக்காக எந்த எல்லைக்கும் போவாங்க…
எழுத தனிமை தான வேணும்… போன்ற வசனங்கள் ஒரு எழுத்தாளரின் மனநிலையைப் பிரதிபலிக்கின்றன. மொத்தத்தில் பரத் நீலகண்டன் எழுத்து இயக்கம் ஆகிய இரண்டையும் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார். கிளைமேக்ஸ் மட்டும் எளிய முறையில் அமைந்திருந்தால் படம் இன்னும் நன்றாக வந்திருக்கும்.
போட்றதுக்கு தான வந்திருக்கேன்… என்ற இரட்டை அர்த்த வசனத்தின்போது தியேட்டரில் கலகல. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் டிமாண்டி காலனி அளவுக்கு வந்திருக்கும். இருந்தாலும் பின்னணி இசை நடிகர்களின் நடிப்பு போன்றவற்றிற்காக கண்டிப்பாக இந்தப் படத்தை பார்க்கலாம்.
Be the first to comment on "K – 13 படம் எப்படி இருக்கு?"