கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்!

dmk cheif dr.karunanidhi health condition

அண்ணாவுக்கு அருகிலயே தம்பிக்கு இடம்! நெஞ்சுக்கு நீதி கிடைத்துவிட்டது! இறந்தும் வென்று உள்ளார் கலைஞர்! மிஸ் யூ எழுத்தாளர் கருணாநிதி! என்று  சமூகவலைத் தளங்களில் பலர் தங்களது உணர்வுகளை வார்த்தைகள் மூலமாகப் பகிரத் தொடங்கிவிட்டனர். கவிஞர்கள் தங்கள் மொழியில் இரங்கற்பா எழுதி பகிர்ந்து வருகின்றனர். மாத்ருபூமி, இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கன் க்ரானிக்கல் என்று ஒட்டுமொத்த பத்திரிக்கைகளிலும் அவருக்கு வருத்தமும் கண்கலங்க வைக்கும் கார்டூனும் இடம்பெற்று இருக்கிறது.  இப்படி தமிழகமே ஒற்றை மனிதனைப் பற்றி பேசும் அளவுக்கு அந்த மனிதன் செய்த சாதனைகள் அவ்வளவு இருக்கிறது. அவர் செய்த சாதனைகள் பற்றி வாட்சப்பில் கொட்டிக் கிடக்கும் தகவல்கள் வியப்படைய வைக்கிறது.

மெரினாவில் இடம்:

ஆக்ஸ்ட் 7ம் தேதி மாலை ஆறு மணி அளவில் கலைஞர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் பதினொரு நாட்கள் சிகிச்சையில் இருந்தும் பலனின்றி இறந்துவிட்டார் என்றதும் கலைஞரின் குடும்பம் தமிழக ஆட்சியாளர்களிடம் நேரில் சென்று சில கோரிக்கைகள் வைத்தது. அப்படி இருந்தும் கலைஞருக்கு மெரினாவில் இடம் இல்லை என்றே கூறப்பட்டு வந்தது. காமராஜர் இறந்த போது கருணாநிதி அரசு என்ன செய்ததோ அது தான் கருணாநிதி விஷியத்திலும் நடக்கும் என்று சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுக்கக் கூடாது என்பது தான் அவர்களின் நிலைப்பாடாக இருந்தது. இன்று காலை முதல் அவர்களுக்குச் சாதகமான மெரினாவில் கலைஞருக்கும் இடம் இல்லை என்ற செய்தியைப் பார்த்ததும் மகிழ்ச்சி தாங்கவில்லை. இவ்வளவு பெரிய மனிதனை இறந்தபிறகும் இப்படி அசிங்கப்படுத்துகிறார்களே என்று பலர் வருந்த அடுத்த சில நிமிடங்களிலயே மீண்டும் கலைஞர் வென்றார். இப்போது மெரினாவில் அவருக்கு என்று இடம் ஒதுக்கலாம் எனக்கூறிவிட்டதால் அனைத்துப் பணிகளும் விரைவாக நடந்து வருகிறது.

மிகப்பெரிய ஆளுமைகளை இழந்த தமிழகம்: இருளை நோக்கி செல்கிறது!

மிகப்பெரிய அரசியல் ஆளுமைகளை இழக்க இழக்க தமிழகம் பலவீனம் அடைந்துகொண்டே வருவதைக் கண்கூட பார்த்து வருகிறோம். பெரியாரை இழந்து, அண்ணாவை இழந்து, காமராசரை இழந்து, எம்.ஜி.ஆரை இழந்து, ஜெயலலிதாவை இழந்து, கருணாநிதியை இழந்து இன்று முதல் இருளை நோக்கி பயணிக்கத் தொடங்கிவிட்டது என்பது தான் உண்மை. அவர்களுடைய புகழில் நிழல் தேடி சிலர் அரசியல் செய்து வருகிறார்கள். அவர்கள் யாவரையும் மக்கள் மதிக்கவே இல்லை என்பது தான் உண்மை. காரணம் அவர்களால் நேர்மையாக ஒரு ரோடு கூட போட முடியவில்லை. எதற்கு செலவு செய்ய வேண்டும் எப்படி செலவு செய்ய வேண்டும் என்ற பொருளாதார அறிவு இல்லாமல் இருக்கின்றனர். தமிழகத்திற்கு ஏற்ற திட்டம் எது என்று புரியாமல் திக்கித்து நிற்கின்றனர்.

இந்தி மெல்ல மெல்ல நுழைந்து இன்று இந்தியாவிலயே அதிக அளவில் இந்தியைக் கற்றுக்கொள்பவர்கள் தமிழர்கள் தான் என்றும் அதே போல தாய்மொழிமீது பற்றில்லாமல் வாழும் மக்கள் தமிழகத்தில் தான் உள்ளனர் என்றும் ஆய்வு அறிக்கைகள் சொல்கிறது. திராணியற்ற தற்போதைய ஆட்சியாளர்கள் தமிழகத்தை தமிழை அந்த நிலைமைக்கு கொண்டு சென்றுவிட்டார்கள். நீட் தேர்வுக்கும் ஜல்லிக்கட்டு தடைக்கும் தீர்வு காண முடியாமல் தடுமாறி வருகிறது தற்போதைய தமிழக அரசு. எதிரில் இருப்பவர்கள் திராணியற்றவர்களாக இருந்தும் அவர்களை சாய்க்க முடியாமல் இருக்கின்றனர் எதிர்க்கட்சி ஆட்கள். மொத்தத்தில் சூரியன் மறைந்துவிட்டது. இனி அவ்வளவு தான் என்பது தான் அரசியல் மீது ஆர்வம் கொண்ட மக்களின் பேச்சாக உள்ளது.

கலைஞருக்குப் பாரத ரத்னா வேண்டும்!

கலைஞர் செய்த சாதனைகள் இந்தியாவிலயே யாரும் செய்யாத சாதனைகள் என்று அவருடைய அரசியல் பயணத்தை வைத்து அவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து கடந்த சில தினங்களுக்கு முன்பே வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்பட பலர் கலைஞருக்குப் பாரத ரத்னா விருது கொடுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Related Articles

ரஜினியின் 100 மரணமாஸ் வசனங்கள் ஒரு பார்வ... எனக்கு மரியாதை வேண்டாம், வேலைக்கு மரியாதை கொடுங்க... இது எப்படி இருக்கு? எப்போதுமே ஒருத்தர குறைச்சி மதிப்பிடக் கூடாது. ஆஞ்சநேயர ராவணன் குற...
நகர்ப்புற சாலைகளில் இனி மணிக்கு 70 கிலோ ... நகர்ப்புற சாலைகளில் வாகனங்கள் பயணிக்கும் வேகத்தை அதிகரித்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதன்படி கார்கள் இனி மணிக்கு 70 கிலோ மீட்டர் வ...
ஒரு இந்தியா மூன்று அமெரிக்காவுக்கு சமம்!... ஒரு திரைப்படம் பார்த்தால் அதில் நாம் கற்றுக்கொண்ட விசியங்கள் ஒன்றிரண்டாவது இருக்க வேண்டும். அந்த வகையில் தன்னுடைய படங்களின் மூலமாக புதிய தகவல்களை பார்...
தேசிய விருதுபெற்ற இயக்குனர் செழியனின் &#... சினிமாவில் டைரக்டர் ஆக வேண்டும் என்று ஆர்வம் உள்ள இளைஞர்கள் சினிமா குறித்த கண்ட கண்ட புத்தகங்களை வாங்கிச் செல்வார்கள். உள்ளே விரித்துப் பார்த்தால் ஒன்...

Be the first to comment on "கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்!"

Leave a comment

Your email address will not be published.


*