இன்றைய தமிழ்சினிமாவின் மிக முக்கியமான நடிகர்கள் இரண்டு பேர். ஒருவர் விஜய்சேதுபதி மற்றொருவர் சிவகார்த்திகேயன். இருவருமே படம் தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். விஜய்சேதுபதி ஆரஞ்சு மிட்டாய், ஜூங்கா, மேற்குத் தொடர்ச்சி மலை என்று தன்னுடைய பாணியில் படங்கள் தயாரிக்க மற்றொரு பக்கம் சிவகார்த்திகேயன் கனா எனும் படத்தை தயாரித்து உள்ளார். தயாரிப்பாளராக இது அவருக்கு முதல் படம். இன்று டீசர் வெளியாகி உள்ளது.
சாதாரண விவசாயிக்குப் பிறந்து எப்படி நம் நாட்டிற்கு ஒரு யுவதி பெருமை சேர்த்து தருகிறாள் என்பதை மையக்கதையாக கொண்டுள்ளார்கள். இதுவரை இந்திய சினிமா பெண்கள் கிரிக்கெட் பற்றி சொன்னது இல்லை. இந்தக் கதையின் மூலம் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் முதல் படத்திலயே தன்னுடைய வித்தியாசத்தைக் காட்டி உள்ளார்.
டீசரில் ஐஸ்வர்யா எந்த வசனமும் பேசவில்லை. ஆசப்பட்டா போதாது அடம்பிடிக்கத் தெரியனும், பயிர் கருகறத பாத்தா குழந்த கருகற மாதிரி தெரியுது, விவசாயி ஏன் இன்னும் உசிரோட இருக்கான் தெரியுமா… ஏன்னா விஷம் வாங்க அவன்ட்ட காசு இல்ல போன்ற வசனங்கள் தெறிக்கிறது.
Be the first to comment on "“ஆசப்பட்டா மட்டும் போதாது அடம்பிடிக்கத் தெரியணும்!” – சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் கனா படத்தின் டீசர் ஒரு பார்வை!"