நீ வாழ்றதுக்காகப் பிறந்தவன் நான் வாழவைக்கனும்னு பிறந்தவன்! – காஞ்சனா 3 விமர்சனம்!

Kanchana 3 Movie review

ராகவா லாரன்ஸ் பேய்க்கு பயந்தாங் கோழியாக இருக்கிறார். ஒரு இடத்திற்கு செல்கிறார். அங்கிருந்து பேய் அவரை பின்தொடர்கிறது. ஒரு கட்டத்தில் பேய் அவர் மீது ஏறுகிறது. பேய் ஓட்டுபவர்கள் வருகிறார்கள் பேய்யின் முன்கதையை கேட்கிறார்கள். யாரை பழிவாங்க வேண்டுமோ அவரை பழிவாங்கும் வரை பேய்க்குத் தன் உடலை கொடுக்கிறார் லாரன்ஸ். முனி பார்ட் 1 லிருந்து  முனி பார்ட் 4 வரை இதே கதை தான். இதனாலயே முனி பார்ட் 4 படம் ரசிகர்களுக்கு அதிருப்தியை தருகிறது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை ரசிகர்கள் முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் அளவுக்கு திரைக்கதை அமைத்ததால் விறுவிறுப்பு இல்லாமல் படம் நகர்கிறது.

கோயம்புத்தூர்

தாத்தாவின் 60ம் கல்யாணம் நடக்க இருக்க குடும்பத்தோடு பயணிக்கிறது ராகவா குழு. அங்கு பேய் இருப்பது தெரிய வருகிறது. பேய்க்கு உதவி செய்கிறார்கள். இதற்கிடையில் காமெடி என்கிற பெயரில் எதேதோ செய்கிறார்கள். பின்னணி இசை தமன் செய்துள்ளார். பல இடங்களில் அவருடைய  பின்னணி இசை காதை கிழிக்கிறது. பாடல்களும் பெரிதாக ஈர்க்கவில்லை.

பகலையும் இரவையும் மாறிமாறி காட்ட நிலா ஷாட்ஸ் சூரியன் ஷாட்ஸ் இரண்டையும் ஏகப்பட்ட முறை உபயோகித்து இருக்கிறார்கள். மூன்று ஹீரோயின்கள் மூன்று பொம்மைகள் முனீஸ்வரன் கோயில் அகோரி என்று ஆங்காங்கே ரசிகர்களை கவரும் விஷியங்கள் தூவிக்கிடக்கிறது.

ரஜினியை பிரதிபலிக்கும் காளி கதாபாத்திரம் படத்திற்கு வலு சேர்க்கிறது. மூன்று ஹீரோயின்களை காட்டிலும் ரோசியாக நடித்தவர் அதிகமாக மனதை கவர்கிறார்.

” நீ வாழ்றதுக்காகப் பிறந்தவன்

நான் வாழவைக்கனும்னு பிறந்தவன்… “

” எனக்கு ஒன்னுன்னா விட்டுட்டு போவேன் என் பசங்களுக்கு ஒன்னுன்னா வெட்டிட்டு தான் போவேன்… “

” நான் மனுசனா இருக்கறப்பவே பேய் அடி அடிப்பேன்… இப்ப பேயாவே இருக்கேன்.,. நானே செத்துப்போன டென்சன்ல இருக்கேன்… ” போன்ற வசனங்கள் கைதட்டலை பெறுகின்றன.

ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்குகள் இருந்தாலும் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஜாலி பேய் படம்

என்ற இமேஜை தக்க வைத்துக்கொள்கிறது காஞ்சனா 3.

Related Articles

“சைக்கோ பெண்களுக்கான படம்!”... கடந்த ஜனவரி 24ம் தேதியன்று ரிலீசான மிஷ்கினின் சைக்கோ படம் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தப் படத்திற்கான நேர்மறை எதிர்மறை விமர்சனங்க...
100 தமிழ் சினிமா பிரபலங்களின் சம்பள விவர... இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் இயக்குனர், நடிகர், நடிகைகள், இசை அமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோரின் சம்பள விவரங்கள் அனைத்தும் 2019ம் ஆண்டிற்கு உ...
” பிகில் ” படம் பற்றிய சுவார... தளபதி விஜய்க்கு தந்தை மகன் என்று இரட்டை வேடம். தந்தை மதுரை மார்க்கெட்டில் கசாப்புக்கடை நடத்துகிறார். மகன் மைக்கேல் புட்பால் வீரராக இருக்கிறார். ...
இனி கர்நாடக காடுகளைப் பருந்து பார்வையில்... கெனொபி நடை (Canopy Walk) என்பது கானகத்தின் உயரத்தில் நடை பயணிகளுக்காக ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மேடை அமைப்பதாகும். உயர்ந்து வளர்ந்து நிற்கும் மரங்கள...

Be the first to comment on "நீ வாழ்றதுக்காகப் பிறந்தவன் நான் வாழவைக்கனும்னு பிறந்தவன்! – காஞ்சனா 3 விமர்சனம்!"

Leave a comment

Your email address will not be published.


*