பில்லா2 இயக்குனரின் அடுத்த படம் எப்படி இருக்கு? – கொலையுதிர் காலம் விமர்சனம்!

Kolaiyuthir Kaalam movie review

கமலின் உன்னைப் போல் ஒருவன், அஜீத்தின் பில்லா 2 படங்களை இயக்கிய இயக்குனரின் மூன்றாவது படம். இவருடைய முந்தைய இரண்டு தமிழ் படங்களும் ஆங்கில படங்களுக்கான நிகரான தரத்தில் இருந்தன. குறிப்பாக பில்லா 2 படம் வியப்பை உண்டாக்கும் தரத்தில் இருந்தது. கொலையுதிர் காலம் படமும் சற்றும் சளைக்கவில்லை. அந்தப் படங்களைப் போலவே ஆங்கில படத்தை பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. 

காது கேட்காத வாய் பேச முடியாத ஆனால் ஓவியம் நன்கு வரையக்கூடிய நபராக நடித்துள்ளார் நயன்தாரா. நானும் ரௌடிதான் படத்தை நினைவூட்டுகிறது நயன்தாராவின் நடிப்பு. மேக்கப் இல்லாத காட்சிகளில் நயன்தாரா அழகாக இருக்கிறார். காதும்மாவை அடுத்து வசனமே இல்லாத சுருதி என்ற கதாபாத்திரம் அவருக்கு நன்றாகவே பொருந்தியுள்ளது. 

பிரதாப் போத்தனுக்கு வாய்ஸ் கொடுத்தது யாராக இருப்பார். அவருடைய குரலா என்று வியப்பை தருகிறது அந்த சோர்வான குரல். உங்க மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு என்று நயன்தாரா போனில் டைப் அடித்து காட்டுகிறார், அந்த இடத்திலயே தெரிந்துவிட்டது பிரதாப் வில்லனாக உருவெடுக்க இருக்கிறார் என்று. இப்படி எளிதில் யூகிக்க கூடியதை முறியடிக்கும் வகையில் பிரதாப் போத்தன் கொலை செய்யப் படுகிறார். இப்படிபட்ட எதிர்பாராத திருப்பங்கள் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது. பாடல்கள் சுமார் என்றாலும் பின்னணி இசை மனதை கவர்கிறது. குறிப்பாக நயன்தாரா வரும் இடங்களில் ஒலிக்கும் பின்னணி இசை இனிமையும் மிரட்டலும் கலந்து இருக்கிறது. ஒரு சில இடங்களில் சிலிர்ப்பையும் உண்டாக்குகிறது.  

ஆங்கில உரையாடல்களுக்கு தமிழில் சப்டைட்டில் போட்டிருக்கலாம். ஒரே வீட்டிற்குள் கதை நகர்கிறது. நாயகியை தவிர மற்ற நபர்கள் “ஒருவனால்” கொல்லப்படுகிறார்கள். அதையடுத்து நயன்தாரா மற்றும் கொலைகாரன் துரத்தல் காட்சிகள் இடைவேளை வரை நீள்கிறது. கையில் கத்தியை வைத்துக்கொண்டு எதிர்க்க துணிச்சலின்றி கொலைகாரனுக்கு பயந்து ஓடி ஓளியும் வண்ணம் இருக்கிறார் நயன். கொலைகாரன் யார்? எதற்காக துரத்துகிறான்? அவனிடம் இருந்து எப்படி நாயகி தப்பித்தார் என்ற வினாக்களோடு இடைவேளை வருகிறது. இடைவேளைக்குப் பிறகு அந்தக் கொலைகாரன் சொத்துக்காக தான் துரத்துகிறான் என தெரிய வருகிறது. நயன்தாரா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதை தொடர்ந்து கொலைகாரன் என்ன செய்தான்? நயன்தாரா தனது சொத்தை காப்பாற்றிக் கொண்டாரா என்பதே மீதிக்கதை.

இதே கதை அம்சத்துடன் பீட்சா, வாட்ச்மேன் என்று பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளதால் இந்தப் படத்தின் துரத்தல் காட்சிகள் கொஞ்சம் சலிப்பை தருகின்றன.

அந்த படங்களை போலவே  முதல் இருபது நிமிடங்கள் மட்டுமே இந்தப் படத்திலும் வசனங்கள் உள்ளன.  ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் நன்றாகவே உள்ளன. 

பார்ட் டூவுக்கான லீட் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இந்தப் படம் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை என்பதே உண்மை. சுஜாதாவின் கொலையுதிர் காலம் நாவல் அளவுக்கு நன்றாக இருக்கும் என்று வந்தால் ஏமாற்றமே மிஞ்சும். நயன் தாரா கதை தேர்வில் கவனம் செலுத்தினாள் நன்றாக இருக்கும். அறம், மாயா போன்ற படங்களில் நடித்தவர் இதுபோன்ற படங்களில் நடித்தால் தன் ரசிகர்களை இழக்க கூடும். 

Related Articles

பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்களுக்கு ... கடந்த வாரம் (ஜூலை 5) ம் தேதியன்று வெளியாகி கலவையான விமர்சனம் பெற்ற படம் ராட்சசி. ஜோதிகா லீடாக நடிக்க பூர்ணிமா பாக்யராஜ், சத்யன் உள்ளிட்டோர் நடிப்பில் ...
ரஜினியை சாக்கடைக்குள் தள்ளிவிட்ட ரஞ்சித்... ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான, பலருடைய மூன்றரை வருட உழைப்பை சுமந்த 2.O படம் தற்போது ரிலீசாகி நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது.ரஜி...
வில்வதையில் தேசிய அளவில் சாதனை படைத்த நா... 14 . 40 நொடிகளில் 15 மீட்டர்கள் தொலைவுக்கு 118 அம்புகள் எய்து தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார் விஜயவாடாவைச் சேர்ந்த நான்கே வயதான ஆருஷ் ரெட்டி.  இந்திய...
வங்கி நெருக்கடிகளுக்குத் தீர்வு காண ஹைதி... ஹைதிராபாத் தற்போது அடிக்கடி செய்திகளில் அடிபடுகிறது. சில மாதங்களுக்கு முன்பு வாஸ்து படி இருக்க வேண்டும் என்பதற்காக அரசு கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வாஸ்...

Be the first to comment on "பில்லா2 இயக்குனரின் அடுத்த படம் எப்படி இருக்கு? – கொலையுதிர் காலம் விமர்சனம்!"

Leave a comment

Your email address will not be published.


*