பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் தமிழ் சினிமாவில் அவ்வப்போது வருவதுண்டு. கடந்த சில வருடங்களில் அருவி, தரமணி, காதலும் கடந்து போகும் போன்ற நல்ல படங்கள் வந்துள்ளன. இதேபோல காலத்துக்கும் மறக்க முடியாத இரண்டு படங்கள் உள்ளன. ஒன்று “அவள் அப்படித்தான்” படம். இன்னொன்று “அவள் ஒரு தொடர்கதை”. அந்த இரண்டு படங்களைப் பற்றி பார்ப்போம்.
1. அவள் அப்படித்தான்
ருத்ரய்யா இயக்கத்தில் கமல் ரஜினி ஸ்ரீப்பிரியா நடிப்பில் உருவான படம்.
” பெண்கள் சுதந்திரம் ” என்ற தலைப்பில் டாக்குமெண்ட்ரி படம் எடுக்கிறார் அருண்(கமல்). கேப்ரா டான்ஸ் ஆடுபவர் சேவா சங்கம் வைத்திருப்பவர் என்று பல பெண்களை சந்திக்கிறார். அப்படிபட்ட தருணத்தில் அவருடைய நண்பரான தியாகு (ரஜினி) தன்னிடம் பணிபுரியும் ஆர்ட் டைரக்டர் மஞ்சுவை (ஸ்ரீப்ரியா) அருணுக்கு உதவியாளராக சேர்த்துவிடுகிறார்.
ஆண்கள் பற்றி வெறுமை கலந்த வார்த்தைகளே மஞ்சுவிடமிருந்து வர மஞ்சுவைப் பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறார் அருண். மஞ்சுவின் அம்மா வேறொருவருடன் உறவு கொண்டாடுகிறாள். அதனை கண்கூட பார்த்த மஞ்சுவுக்கு அது முதல் அதிர்ச்சி. அம்மாவை வைத்திருப்பவன் பின்னாட்களில் மஞ்சு மீதும் ஆசைப் படுகிறான். மனம் உடைகிறது மஞ்சுவுக்கு.
கல்லூரி கால நண்பன் கிருபாவை காதலிக்கிறாள். அவனும் இவளை ஏமாற்றிச் செல்கிறான். அடுத்ததாக சர்ச் பாதர் பையன் மனோவை காதல் கொள்கிறாள். கலவி முடிந்த பிறகு அவனும் இவளை தங்கச்சி என்று ஏமாற்றுகிறான். இவற்றையெல்லாம் அருணிடம் சொல்கிறாள். அருண் கடைசி வரைக்கும் கூட இருந்து பார்த்துக் கொள்வார் என்று நினைக்கிறாள் மஞ்சு.
இந்த ஆண்களே இப்படித்தான் பெண் உடலுக்கு அலையுதுங்க என்று நினைக்கும் மஞ்சு, தியாகு தன் மீது ஆசைப்படுகிறார் எனத் தெரிந்ததும் வேலையை ரிசைன் செய்கிறாள். இந்நிலையில் அருண் டாக்குமெண்ட்ரி படம் எடுப்பதில் கவனம் செலுத்த மஞ்சு நியாபகம் வராமல் போகிறது. ஒருநாள் இருவரும் பேசுகிறார்கள். அருண் மஞ்சுவுக்காக தியாகுவிடம் பேசிப் பார்க்கிறேன் என சொல்ல மஞ்சு வேண்டாமென்று சொல்கிறாள். பிறகு அவளாகவே வேலையில் சேர்ந்துகொள்கிறாள். அருண் ஊரைவிட்டே கிளம்புகிறார். இதை அறிந்த மஞ்சு எப்படியாவது அருணை பார்க்க வேண்டும் எனத் துடிக்கிறாள்.
அருணோ பெண் சுதந்திரம்னா என்னவென்றே தெரியாத பெண்ணை திருமணம் செய்துகொள்ள மஞ்சுவோ அவர்களைப் பார்த்து சிரித்துவிட்டு தன் வாழ்க்கைப் பயணத்தை தொடங்குகிறாள். அவளால் மட்டும் தான் இதுபோன்ற அதிர்ச்சிகளை தாங்க முடியும் ஏனென்றால் அவள் அப்படித்தான்!
2. அவள் ஒரு தொடர்கதை
கே பாலசந்தர் இயக்கத்தில் சுஜாதா விஜயகுமார் நடிப்பில் உருவான படம். ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் சாயலில் உருவான படம் இது.
குடும்பத்துக்காக ஓடிஓடி தன்னலமில்லாமல் உழைக்கும் மூத்த பெண் தான் கவிதா. இரு சகோதரிகள். அவர்களில் ஒருத்தி விதவை. இரு மூன்று சகோதரர்கள். அவர்களில் ஒருவன் வேலைக்குப் போகாத அண்ணன். ஒருவன் கண் தெரியாத சிறுவன். இப்படிபட்ட குடும்பத்தில் பிறந்த கவிதா திலக் என்பவரை காதலிக்கிறாள்.
கவிதா, ஒரு நாள் திலக்குடன் கடற்கரையில் நேரம் கழிக்க அப்போது தன்னுடைய தம்பிகள் இருவரும் செய்யும் வேலைகள் தெரிய வருகிறது. திலக் ஒருமுறை கவிதா வீட்டிற்கு வருகிறார். சிறுவர்களை அடையாளம் கண்டுகொள்கிறார். விதவை தங்கை பாரதியை பார்க்கிறார். காதல் வயப்படுகிறார். இவ்வளவு நாள் திலக்கை அக்கா கவிதா காதலித்து வந்தாள் என்பது குறிப்பிடத் தக்கது. அதே போல கவிதாவின் தங்கை பாரதியை விகடகவி ஒருதலையாக காதலிக்கிறார். இருந்த போதிலும் திலக் மற்றும் பாரதி கல்யாணம் வெற்றிகரமாக முடிகிறது. கவிதாவின் தோழி சந்திரா ஒருவருடன் உறவாடி கருவுற்று பின் அதை சிதைக்கிறாள். ஏமாற்றியவன் சந்திராவின் அம்மாவோடு உறவாடுகிறான். இது தெரிந்ததும் சந்திரா கிணற்றில் விழுந்து இறக்கப் போகிறாள். அவளை நல்வழிப்படுத்தி மேல் வீட்டுக்காரனான (கமலுக்கு) கச்சேரி கிடைக்காத விகடகவிக்கு திருமணம் செய்ய முயல்கிறாள் கவிதா.
பார்ப்பவர்களிடம் பொய் பித்தலாட்டம் பேசிபேசி அனுதாபத்தை சம்பாதித்து பணம் பெறுகிறான் கவிதாவின் அண்ணன். ஒருமுறை கவிதாவின் ஆபிசில் அம்மாவுக்கு கேன்சர் என பொய் சொல்லி பணத்தைப் பெறுகிறான். அன்று வீட்டில் ஒரே சண்டை. தம்பிகள் இருவரும் அக்காவின் காலில் விழுந்து அழ அண்ணன் திருந்துகிறான். ஹோட்டலில் சர்வர் வேலைக்குப் போகிறான். இனி பாரம் குறைந்தது என்று முடிவெடுத்து தனது முதலாளியின் காதலை ஏற்று திருமணம் செய்ய முற்படுகிறாள். இந்நிலையில் சந்திராவையும் சந்திராவின் அம்மாவையும் கெடுத்தவன் வண்டியில் வர, அடகு கடையில் இருந்த குத்துவிளக்கை மீட்டு வரும் அண்ணன் கெடுத்தவன் வண்டியில் ஏறி அமர கல்யாண விசியம் இருவருக்குள்ளும் சண்டையை உருவாக்குகிறது. சண்டையில் குத்துவிளக்கால் குத்துப்பட்டு இறக்கிறான் அண்ணன். அண்ணன் இறந்த செய்தி கவிதாவுக்கு தெரிய வர, தனக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளையோடு தன் தங்கையை உட்கார வைக்கிறாள்.
மீண்டும் குடும்ப பாரம் கவிதாவின் மேல் விழுகிறது. அண்ணன் மனைவி விதவை ஆகி தையல் மிசின் மிதிக்க, அவளின் குழந்தைகள் தம்பிகள் வீட்டில் நடமாட , தன் குடும்பத்துக்காக தன்னலமில்லாமல் உழைக்கும் கவிதாவின் கதை தொடர்கிறது.
Be the first to comment on "பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இரண்டு படங்கள்!"