சின்ன பசங்க ஓட்டு சீமானுக்குத் தான்! – நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி!

Growth of Naam Tamilar Katchi

நாம் தமிழர் இயக்கமாக இருந்து இன்று நாம் தமிழர் கட்சியாக வளர்ந்துள்ளது சீமானின் கட்சி.

பறையன் சீமான் :

கிடைக்கின்ற மேடைகளிலும் இயக்குகின்ற நடிக்கின்ற சினிமாவிலும் சமூக அவலங்களை சுட்டிக்காட்டி உண்மையை உரக்கப் பேச ஆரம்பித்தார். உடனே அவருடேய சாதியை தேட ஆரம்பித்தார்கள். பறையன் சீமான் என்று ஜாதி முத்திரை குத்தினார்கள். பிரபாகரன் பெயரை சொல்லி சொல்லியே அரசியல் பன்றான், அடுத்தவன் பேரை சொல்லி பொழைப்பு நடத்துறான், கிறுக்கனாட்டம் தமிழ்க்கடவுள் முருகன முப்பாட்டங்கறான், கப்பல்ல 60000 யானைங்கறான் என்று சீமானை விமர்சனம் செய்தார்கள்.

பிரபாகரனை சந்தித்ததும் பொய் அவருடன் ஆமைக்கறி சாப்பிட்டதாக கூறுவதும் பொய் என்று மழுப்பினார்கள். அத்தனை விமர்சனங்களையும் சந்தித்தவர். இன்று இளைஞர்களின் மனதை வென்றுள்ளார். நம்பிக்கையை பெற்றுள்ளார்.

“இந்தப் பசங்க எல்லாம் சீமானுக்கு தான் ஓட்டு போட்டுட்டு வரானுங்க… இந்த வருசம் சின்ன பசங்க ஓட்டு பூரா சீமானுக்குத் தான்… போன தடவையை காட்டிலும் இந்த தடவை இளைஞர்கள் ஓட்டு அதிகம்… அதுவும் சீமானுக்கு ஓட்டுப் போட்ட பசங்க அதிகம்… எப்டியும் எதாவது ஒரு இடத்துலயாவது ஜெயிச்சுப்புடுவாப்டி… ” என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர்.

இணையத்தில் கெத்து :

சமூக வலைதளங்கள் உபயோகிக்கும் பலர் சீமான் கட்சிக்கு ஆதரவு தருபவர்களாக இருக்கிறார்கள். அதனாலயே இணையத்தில் நாம் தமிழர் கட்சியின் செயல்பாடு வீரியமாக இருக்கிறது. மற்ற எந்தக் கட்சியும் பெற்றிடாத அளவுக்கு ஆதரவைப் பெற்றுள்ளது சீமான் கட்சி.

Related Articles

தோசைல சாதி இருக்கு!  – வே. மதிமாறன... தோசைல கல் இருக்கு! தோசை கல்லு மாதிரி இருக்கு! இப்படிபட்ட விமர்சனங்கள் தோசை மீது இதுவரை இருந்திருக்கிறது. ஆனால் சாதாரண தோசையில் சாதி இருக்கு என்பது பு...
பேட்ட – மரண மாஸ் பாடல் வரிகளும் இச... கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் பேட்ட. ரஜினி படத்தில் விஜய் சேதுபதி வில்லன் என்பதாலும் அனிருத் இசை என்பதாலும் படத...
பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்... நியூ வேர்ல்டு வெல்த் (New World Wealth) என்ற அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையில், உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாவது இடம் கி...
11 உயிர்களைப் பறித்த ஸ்டெர்லைட் 100 வது ... தாங்கள் வாழும் நிலப்பகுதியில் தங்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும், காற்றை மாசுபடுத்தும் ஒரு ஆலையை மூடச்சொல்லிக் கேட்டார்கள். தூத்துக்குடியில் போராடிய மக...

Be the first to comment on "சின்ன பசங்க ஓட்டு சீமானுக்குத் தான்! – நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி!"

Leave a comment

Your email address will not be published.


*