தமிழ் சினிமாவை உலக அரங்கத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் சினிமா எடுக்கும் இயக்குனர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இயக்குனர் செழியனின் டூலெட் படமும் இயக்குனர் ராமின் பேரன்பு படமும் உலக அரங்கில் மாஸ் காட்டிக்கொண்டிருக்க இன்னொருபுறம் உலகையே வியக்க வைக்கும் முயற்சி என்கிற பெயரில் கோடி கோடியாய் செலவழித்து படம் எடுக்கும் இயக்குனர்களும் பெருகி வருகிறார்கள். அவர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர். தேவையில்லாத காட்சிகளுக்கு கூட கோடிகளில் செலவு செய்து எடுப்பார். அந்த வகையில் 2.O படத்தை 500 கோடி செலவு செய்து எடுத்து உள்ளார்.
பல வருடங்களாக எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தின் மீது ஆரம்பத்தில் இருந்த அளவு எதிர்பார்ப்பு கூட இப்போது இல்லை என்பதே உண்மை. துபாய் போன்ற வெளிநாடுகளில் சில முக்கியமான இடங்களில் மட்டுமே நல்ல விளம்பரம் செய்திருக்கிறார்கள். மற்றபடி தமிழகத்தில் அவர்களின் விளம்பரம் எடுபடவில்லை.
டீசர், ட்ரெய்லர், பாடல்கள் என்று அனைத்துமே தற்போதைய அளவில் சுமாராகவே இருப்பது போல் தோன்றுகிறது என்பது தான் பலருடைய பதிலாக இருக்கிறது. 3D ல் எடுத்திருக்கிறார்கள், சிறப்பு ஒலியை சேர்த்திருக்கிறார்கள் என்ற செய்தி மட்டுமே இப்போது வரை இந்தப் படத்தின் நம்பிக்கை வைக்க காரணமாக உள்ளது என்று பலர் கருத்து தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் 500 கோடி முழுசா போகப் போகுது, படம் கண்டிப்பா ப்ளாப் என்று படத்தை பார்ப்பதற்கு முன்பே நெகட்டிவ் கமெண்ட்கள் கொடுத்து வருகின்றனர். இந்தப் படம் ஓடுனாலும் ஓடவில்லை என்றாலும் படத்தின் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் எந்த பிரச்சினையும் வரப் போவதில்லை. எல்லா வியாபாரமும் ஏற்கனவே ஓரளவுக்கு முடிந்துவிட்டது என்பதே உண்மை.
3D ல் பார்த்த பிறகு ரசிகர்களின் மனநிலை மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதால் படம் பாசிட்டிவ் கமெண்ட்களைப் பெற்று சாதனை படைக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
Be the first to comment on "2.0 படத்திற்கு எதிர்பார்ப்பு அவ்வளவாக இல்லை ! 500 கோடி என்ன ஆகும் ?"