ஆந்திர முதல்வரின் வாழ்க்கை வரலாறு படத்தில் மம்முட்டி, நயன்தாரா நடிக்கிறார்கள்!

mammootty and nayanthara to act in andhra CM biopic

ஒய் எஸ் ஆர் என்று அழைக்கப்படும் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை
வரலாறு திரைப்படமாக உருவாக இருக்கிறது.

ஆந்திர முதல்வராக இருந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கடந்த சில வருடங்களுக்கு முன்பு
ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் உயிரிழந்தார். தற்போது அவருடைய வாழ்க்கை வரலாற்றை
அடிப்படையாக வைத்து படமாக உருவெடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். இதில் ஒய். எஸ். ஆராக
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் இணைந்து நடிக்க
இருக்கிறார்கள்.

ஒய்.எஸ்.ஆர் வாழ்க்கையில் 1999ம் ஆண்டு முதல் 2004ம் வரை நடந்த ஐந்தாண்டு சம்பவங்களை
மையமாக வைத்து திரைப்படம் உருவாக உள்ளது. அந்தக் காலத்தில் அவர் பங்கேற்ற மூன்று
மாத பாதயாத்திரை ஒன்றில் பங்கேற்றார். அந்தப் பாதயாத்திரைக்கு முக்கியத்துவம் தர
இருப்பதாகவும் படத்துக்கு யாத்ரா என பெயரிட்டுள்ளதாகவும் பேசிக்கொள்ளப்படுகிறது.

இதே போல் ஆந்திர முன்னாள் முதல்வர் டி.என்.ராமாராவ் வாழ்க்கை வரலாறும் படமாக
உருவெடுக்க இருக்கிறது. இதில் என்.டி. பாலகிருஷ்ணா நடிக்க இருக்கிறார். அவர் இந்தப்
படத்தில் தந்தை வேடம் ஏற்று நடிக்க இருக்கிறார்.

தமிழக முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறும்
படமாக எடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

” கென்னடி கிளப் ” திரைப்படம்... வெண்ணிலா கபடி குழு படத்தை அடுத்து கபடியை கதைக்களமாக வைத்து சுசீந்திரன் இயக்கும் இரண்டாவது படம் கென்னடி கிளப். இந்தப் படத்தின் மூலமாக சுசூந்திரன...
நான் சிம்பிளான ஆளு இல்ல – நடிகர் ர... சின்னத்திரை பக்கம் அவ்வளவு எளிதாக தலை காட்டாத நடிகர்கள் தான் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்றோர். இதில் விஜய் அவ்வப்போது சில தொலைக்காட்சிகளுக்கு பேட்டி...
ரேசன் அரிசின்னா அவ்வளவு கேவலமா போயிடுச்ச... பசி காரணமாக பள்ளிக்கூடம் பக்கம் ஏழை மாணவர்கள் செல்லாமல் சிறுவயதிலயே வேலை வறுமை என்று அலைகிறார்கள், தங்கள் வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறார்கள் என்ற நோக...
தினேஷுக்கு தேசிய விருது கிடைக்குமா? இரண்... தயாரிப்பு : நீலம் புரொடக்சன்ஸ்தயாரிப்பாளர் : இயக்குனர் பா. ரஞ்சித்எழுத்து இயக்கம் : அதியன் ஆதிரைஇசை : டென்மாஒளிப்பதிவு : கிஷோர் குமார்...

Be the first to comment on "ஆந்திர முதல்வரின் வாழ்க்கை வரலாறு படத்தில் மம்முட்டி, நயன்தாரா நடிக்கிறார்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*