இந்தச் செய்தி பார்க்கும் போது போலியாக நினைக்கத் தோன்றும். ஆனால் இது உண்மை செய்தி தான். பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் பல தரப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும் அவ்வப்போது அவரது ஆட்சியை பாராட்டும் வகையில் சில செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.
இந்தியா ஊழலில் முன்பு இருந்ததை விட இப்போது மோசமான நிலையில் இருக்கிறது என்று போர்ப்ஸ் தனது தரவரிசைப் பட்டியல் வெளியிட்டாலும் இன்னும் பிற பத்திரிக்கைகள் இந்தியாவில் பாலியல் வன்முறைகள் முன்பு இருந்ததை விட அதிகரித்து விட்டது என்று தங்களது தரவரிசைப் பட்டியல் வெளியிட்டாலும் சுவிஸ் வங்கி வெளியிட்டதைப் போல சில நம்ப முடாயாத தகவல்களையும் நாம் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.
கடந்த 2014ம் ஆண்டு தேர்தலின் போது கறுப்பு பண பதுக்கல் பற்றி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார் நரேந்திர மோடி. அதன் பிறகு வழக்கமான அரசியல்வாதிகள் போல கொடுத்த வாக்குறுதியை மறந்தே விட்டார். சமீபத்தில் கூட ராகுல் காந்தி அதனைக் குறிப்பிட்டு இருந்தார்.
தற்போது சுவிஸ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 2016 – 2017 ம் ஆண்டுக்குள் இந்தியாவின் டெபாசிட் 2000ம் கோடியாக உயர்ந்து உள்ளது என்றும் மோடி ஆட்சிக்குப் பின் சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் டெபாசிட் ஐம்பது மடங்காக அதிகரித்து உள்ளது என்றும் தவறான தகவல்கள் பரப்ப பட்டு வந்தது. இந்நிலையில் சுவிஸ் வங்கி அதிகாரப் பூர்வமாக அந்த செய்திகள் அனைத்தையும் மறுத்து உள்ளது.
மோடி ஆட்டிக்குப் பின் சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் டெபாசிட் பணம் எண்பது சதவீதமாகக் குறைந்து உள்ளது என்று தெரிவித்து சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் டெபாசிட் கடந்த சில வருடங்களில் பல மடங்காக உயர்ந்து உள்ளது என்ற செய்தி வதந்தி என்று அதனை மறுத்து உள்ளது.
Be the first to comment on "மோடி ஆட்சிக்குப் பிறகு சுவிஸ் பேங்கில் இந்தியர் டெபாசிட் எண்பது சதவீதமாகக் குறைந்து விட்டதாம்!"