நகர்ப்புற சாலைகளில் வாகனங்கள் பயணிக்கும் வேகத்தை அதிகரித்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதன்படி கார்கள் இனி மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்திலும், சரக்கு வாகனங்கள் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இருசக்கர வாகனங்கள் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் செல்லலாம் என்று அறிவித்துள்ளது. எனினும் மாநில அரசுகள் இந்த வேகத்தை தங்கள் விருப்பப்படி குறைத்துக் கொள்ளலாம் என்ற அனுமதியையும் வழங்கி உள்ளத மத்திய அரசு.
தற்போதைய வேக நிலவரம்
தற்போதைய நிலவரத்தைப் படி, நகர்ப்புறங்களில் வாகனங்கள் மணிக்கு 40 முதல் 50 கிலோ
மீட்டர் வேகத்தில் செல்லலாம். ரிங் ரோட் மற்றும் நெடுஞ்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்து
வருவதால் மத்திய அரசு இந்த வேக அளவீட்டை அதிகரித்திருக்கலாம் என்று தெரிகிறது.
எனினும் மாநில அரசுகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, வேக அளவைக் குறைத்துக்கொள்ளலாம்
என்றும், ஆனால் மத்திய அரசு வெளியிட்டுள்ள அளவைக் காட்டிலும் கூடுதலான வேகத்தை
நிர்ணயிக்க இயலாது என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்தத் திட்டத்திற்கான ஒப்புதலைப்பு தன்கிழமை அன்று வழங்கினார். போக்குவரத்துக்கான கூட்டு செயலாளர் அபே டம்லே அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையை ஏற்று இந்த அறிவிப்பை மத்திய போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது.
விதிவிலக்கு
இந்த அறிவிப்பின் படி, அதிகபட்ச வேக அளவைக் காட்டிலும் 5% கூடுதலாக தங்கள்
வாகனங்களை இயக்குபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.
சரியான நடவடிக்கை தானா?
இந்த அறிவிப்பின் ஊடாக சில கேள்விகளும் நமக்கு எழாமல் இல்லை. உலகம் முழுவதும்
வாகனங்களின் வேகத்தைக் குறைக்க பல்வேறு குரல்கள் எழுந்து வரும் நிலையில், இந்தியா
போன்ற ஜன நெருக்கம், வாகன நெருக்கம் மிகுந்த ஒரு நாட்டில் வேகத்தின் எண்ணிக்கையைக்
கூட்டி அறிவிப்பு வெளியிட்டு இருப்பது ஆரோக்கியமானது அல்ல. ஏனென்றால் 2016 ஆம்
ஆண்டு மட்டும், வேகத்தின் காரணமாக இந்தியாவில் 74000 உயிர்கள் காவு வாங்கப்பட்டு
இருக்கின்றன.
மத்திய மாநில அரசுகள் நிர்ணயம் செய்வது ஒருபக்கம் இருக்கட்டும், ஒரு ஓட்டுநராக நம்
மனசாட்சியின் படி நம் வேகத்தை நாமே நிர்ணயம் செய்வது ஒன்றுதான் விபத்துகளைத்
தடுப்பதற்கான ஒரே வழி.
Be the first to comment on "நகர்ப்புற சாலைகளில் இனி மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம்."