தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல இந்திய சினிமாவுக்கே கிடைத்த பரிசு தனுஷ் !

Dhanush is the gift of Indian cinema!

இயக்குனர் பாலாவை பற்றி யாவரும் அறிந்ததே. மனதுக்கு மிக நெருக்கமான மனிதர்களுக்காக என்ன வேண்டுமானால் செய்யக் கூடியவர். உதாரணமாக தங்க மீன்கள் படத்தின் ட்ரெய்லரை தனது பரதேசி படத்துடன் இணைத்து வெளியிட்டதாகட்டும், தங்க மீன்கள் படம் வெளியாக எதாவது பண உதவி தேவையா என்று தாமாகவே கேட்ட மனிதர். அதே சமயம் பிடிக்காதவர் என்றால் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் அவருக்கு அஞ்சி நடக்காதவர் பாலா. உதாரணமாக பாரதிராஜாவை எதிர்த்துப் பேசியதாகட்டும், விஜய்க்கு கொடுக்கப்பட்ட விகடன் விருதை விஜய் இருக்கும் மேடையிலயே விமர்சித்து பேசியதாகட்டும் பாலாவின் துணிச்சல் வேற லெவல்.

அப்படிப்பட்ட மனிதர் அவ்வளவு எளிதில் யாரையும் பாராட்டிவிட மாட்டார். ஆனால் அவரே தனுஷை பார்த்து சொன்ன வரிகள் தான் தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல இந்திய சினிமாவுக்கே கிடைத்த பரிசு தனுஷ் என்பது. அதை நிரூபிக்கும் வகையில் செயல்படும் தனுஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பலமான கூட்டணி :

தனுஷின் The Extraordinary Journey Of Fakir – வாழ்க்கையைத் தேடி நானும் போனேன் என்ற தமிழில் டப் செய்யப்பட்ட ஹாலிவுட் படம் விரைவில் வெளிவர இருக்கிறது. அதே போல கார்த்திக் சுப்புராஜ் படம், கௌதம் மேனன் படம், வெற்றிமாறன் படம் என்று கூட்டணி வியக்க வைத்த நிலையில் மீண்டும் வியக்க வைத்திருக்கிறார் தனுஷ்.

பரியேறும் பெருமாள் எனும் அட்டகாசமான  படத்தை தந்த மாரி செல்வராஜூடன் தனுஷ் இணைகிறார் என்பது தான் அந்த வியப்பான செய்தி. திறமைசாலிகளை கூட வைத்துக் கொள்வதன் மூலம் நாம் மேலும் மேலும் வலுப்பெறுகிறோம் என்பது கமலின் வெற்றி மந்திரம். அந்த மந்திரத்தை யார் பின்பற்றுகிறார்களோ இல்லையோ தனுஷ் ஆணித்தரமாக மனதில் இறக்கி கொண்டு வெற்றிநடை போடுகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. இயக்குனர் ராம் உடன், இயக்குனர் பாலாவுடன் ஒரு படம் செய்ய இருப்பதாக செய்தி வெளியானது. அதுவும் கூடிய விரைவில் நடந்தால் தனுஷ் இன்னும் ஒரு படி மெருகேறுவார் என்பதில் சந்தேகமே இல்லை.

ஒல்லிப்பிச்சான் என்ற இளக்காரம் செய்தவர்களை நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், பாடகர் என்று தனது வெற்றிப் பயணத்தால் துரத்தி துரத்தி அடிக்கிறார் தனுஷ் !

Related Articles

அஜித்திற்குப் ” பில்லா ” வைப... இருவரின் துரத்தலில் இருந்து தப்பித்து வருகிறார் கேகே. அவர் மீது பைக் ஒன்று மோத கேகே அடிபடுகிறார். மலேசிய போலீஸ் அவரை ஆஸ்பத்திரியில்  சேர்க்கிறார்கள். ...
ஜூன் 12 – குழந்தை தொழிலாளர்கள் எதி... உலகம் முழுக்க ஜூன்12ம் தேதி குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பத்து லட்சமாக இரு...
2.0 படத்திற்கு எதிர்பார்ப்பு அவ்வளவாக இல... தமிழ் சினிமாவை உலக அரங்கத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் சினிமா எடுக்கும் இயக்குனர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இயக்குனர் ...
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – ... காட்ஃபாதர் - மூன்று தந்தைகளின் பாச போராட்டம்!  பின்னணி இசை அருமை. டைட்டில் கார்டு டிசைன் கதைக்கு சம்பந்தப்பட்டதாக இருந்தது. பாடல்கள் ஒருமுறை கேட்கும்...

Be the first to comment on "தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல இந்திய சினிமாவுக்கே கிடைத்த பரிசு தனுஷ் !"

Leave a comment

Your email address will not be published.


*