மனைவிக்கு கார் ஓட்டக் கற்றுக்கொடுக்கும் போது விபத்து. சாலையில் விளையாடிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமி பலி

The newlywed is learning to drive runs over seven years old in Chennai

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் துரைவேலன் மற்றும் அவரது மனைவி ஜெயந்தி. இவர்களது ஏழு வயது மகள் பவித்ரா யாரும் எதிர்பாராத வகையில் கார் விபத்தில் உடல் நசுங்கி உயிர் இழந்துள்ளார்.

குழந்தையைக் காவு வாங்கிய கார்

துரைவேலனின் குடும்பம் சென்னை சூளைமேடு பகுதியில் வன்னியர் இரண்டாம் தெருவில்
வசித்து வருகிறது. அதே தெருவில் வசிக்கும் மற்றுமொரு தம்பதி டேனி மற்றும் ப்ரீத்தி.
இவர்களுக்கு மிகச் சமீபத்தில் தான் திருமணம் முடிந்திருக்கிறது. நேற்று இரவு குழந்தை பவித்ரா
தன் வீட்டுக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களுக்கு இடையே விளையாடிக்
கொண்டிருந்தார்.டேனி தனது மனைவிக்கு கார் ஓட்டக் கற்றுக்கொடுத்து கொண்டிருந்த போது
யாரும் எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கே நிறுத்தப்பட்டிருந்த இன்னொரு
காரின் மீது மோதியது. இதனால் அந்த காருக்கு முன்னே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை
பவித்ராவின் உடல் நசுங்கியது.

குழந்தையின் அலறல் சப்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு தனியார்
மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் குழந்தை கொண்டுவரும் போதே இறந்துவிட்டதாக
மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தையின் உடல் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்கு உடற்கூறு ஆய்வுக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

நடுத்தர குடும்பத்தின் சோகம்

துரைவேலன் அந்தப் பகுதிக்கு தண்ணீர் கேன் விநியோகிக்கும் வேலையைச் செய்து வந்தார்.
அவரது மனைவி இல்லத்தரசி. இறந்த குழந்தை பவித்ரா அதே பகுதியில் இருக்கும் ஒரு தனியார்
பள்ளியில் படித்து வந்திருக்கிறார். அவரது அண்ணன் யுவனேஷ் நான்காம் வகுப்பு படித்து
வருகிறார்.

‘சம்பவம் நிகழ்ந்த போது , ஜெயந்தியும் அவரது மகனும் வீட்டிற்குள் இருந்தார்கள். குழந்தை
பவித்ரா வெளியில் அவரது அப்பா வரும் வரை கார்களுக்கே இடையே விளையாடிக்
கொண்டிருந்தது. குழந்தையின் அலறல் சப்தம் கேட்டு நான் என் வீட்டில் இருந்து வெளியே
ஓடிவந்து பார்த்தேன். அப்போது குழந்தை இரண்டு கார்களுக்கு இடையே சிக்கிக்கொண்டு
இருந்தது. உடனடியாக ஒரு காரை தள்ளி குழந்தையை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு
சென்றோம். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குறுகலான இந்தச் சந்தில் கார் ஓட்டக் கற்றுக்கொடுத்தது தவறான விஷயமாகும். அவரது
மனைவியை அவர் மைதானத்துக்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும்’ என்று துரைவேலனின்
அண்டை வீட்டுக்காரர் மோகன் தெரிவித்தார்.

அண்ணா நகர் போக்குவரத்து காவல்துறை ப்ரீத்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Articles

ஐஎஸஐஸ் தீவிரவாத அமைப்பால் கொல்லப்பட்ட 39... 2014 ஆம் ஆண்டு இராக்கில் காணாமல் போன 39 இந்தியர்களை மீட்கும் முயற்சியின் ஒரு பகுதியாக முன்னாள் இராணுவ தளபதிக்கும், மத்திய அமைச்சர் ஜெனரல் விகே சிங்கு...
இனி இரயில்களில் உணவுக்கு அதிக விலை வைக்க... இரயிகளில் அடிக்கடி பயணம் செய்பவர்களா நீங்கள்? இரயிலில் தரப்படும் உணவுகளின் விலை மிக அதிகமாக இருப்பதாக உணர்ந்திருக்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கா...
பத்து பிரபலங்கள் சேர்ந்து வெளியிட்ட R... கோடை விடுமுறைக்கு சமுத்திரக்கனி படம் ரெடி. தேர்வு முடிவுகள் வெளியாகி பல மாணவ மாணவிகளின் உயிரை காவு வாங்கும் காலம் அது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அ...
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்!... இந்தியாவிலயே தமிழகம் உடல் உறுப்பு தானத்தில் முதலிடம் வகித்து வருகிறது. உடல் தானம் அதிகம் செய்யும் மாநிலம்  என்பதற்காக தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இதற்...

Be the first to comment on "மனைவிக்கு கார் ஓட்டக் கற்றுக்கொடுக்கும் போது விபத்து. சாலையில் விளையாடிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமி பலி"

Leave a comment

Your email address will not be published.


*