பால் ஆதார் என்றால் ?
மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கென்று தனி ஆதார் அட்டையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. அதற்கு பால் ஆதார் எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. ஆனால், அதில் பெரிய மனிதர்களுக்கு வழங்கப்படுவதை போல குழந்தைகளின் கை விரல் ரேகை, கருவிழிப் படலம் ஆகியவை பதிவு செய்யப்படாது. மாறாக குழந்தைகளின் பிறப்புச் சான்று, பெற்றோரின் ஆதார் எண் ஆகியவை டேப்லெட் கணினியில் பதிவு செய்து, அதன்மூலம் குழந்தைகளின் முகம் படம் எடுக்கப்பட்டு, பின்னர் அவர்களுக்கான ஆதார் அட்டை வழங்கப்படும். குழந்தைகளுக்கான இந்த ஆதார் அட்டை நீல நிறத்தில் வழங்கப்பட உள்ளது.
5 வயதுக்கு பின்?
அதேசமயம், குழந்தைக்கு 5 வயது ஆன பிறகு பயோமெட்ரிக் தகவல்களை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் வெளிநாட்டில் கல்வி பயில்வதற்கோ, அரசின் கல்விச்சலுகையை பெறுவதற்கோ ஆதாரை பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயமில்லை. குழந்தையின் 5, 10 மற்றும் 15 வயதுகளில் அவரின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பள்ளி அடையாள சான்றுடன், பயோமெட்ரிக் தகவல்களையும் இணைக்க வேண்டியது அவசியமாகும் என்று ஆதார் அமைப்பு அறிவித்துள்ளது.
Be the first to comment on "UIDAI அறிமுகப்படுத்திய 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான தனி ஆதார் அட்டை : பால் ஆதார்"