சுருதி டிவி – தினமும் அரை மணி நேரமாவது இந்த சேனலில் உள்ள வீடியோக்களை நாம் ஏன் பார்க்க வேண்டும்!

people are must watch Sruthi_TV You tube channel videos

தமிழில் இன்று  ஆயிரக்கணக்கான யூடியூப் சேனல்கள் இருக்கின்றன. ஆனால் அத்தனை யூடியூப் சேனல்களில் பெரும்பாலான சேனல்கள் ஏற்கனவே தெரிந்த விஷயங்களை பலபேர் போட்டு அரைத்து தள்ளிய தகவல்களை புதிதாக கொண்டுவந்து கொடுக்கிறேன் என்கிற பெயரில் கவர்ச்சியான தலைப்பு வைத்து  பார்வையாளர்களே உள்ளே கொண்டுவந்து பார்வைகளை பெற்றுவிடுகின்றனர். அப்படிப்பட்ட வீடியோக்களை ஏதோ அறியாமையில் அல்லது ஆர்வக்கோளாறில் பார்க்கும் பொழுது சரி இந்த யூடியூப் உலகமே இப்படித்தான் போல. இதனால் எந்த பயனும் இல்லை என்று சிலர் யூடியூபே ஒரு பொய் குப்பைகள் நிறைந்த இடமாக தான் பார்க்கிறார்கள். இதனால் பயனுள்ள தகவல்களை அறநெறிக் கருத்துக்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இல்லாமல் போய்,  சுவாரசியமாக நக்கலாக சொல்லக்கூடிய சினிமா விமர்சனங்களை பார்க்கப்போவது, தமிழ் சினிமா நகைச்சுவை காட்சிகளை பார்ப்பது, ஜோசியர்களின் வீடியோக்களைப் பார்ப்பது, ஆலயங்களின் சிறப்பம்சங்களை பார்ப்பது, சின்னத்திரை சீரியல்களை பார்ப்பது என்று திசைமாறி சென்று விடுகின்றனர். 

இப்படிப்பட்ட யூடியூப் உலகில் தொடர்ந்து நல்ல கருத்துக்களை நல்ல தகவல்களை பகிர்ந்து கொள்ளக் கூடிய தரமான வீடியோக்கள் அடங்கிய யூடியூப் சேனல் ஒன்று இருக்கிறது என்பது தெரியாமல் போய்விடுகிறது. அப்படிப்பட்ட நல்ல நல்ல கருத்துக்கள் அடங்கிய வீடியோக்களை சுருதி டிவி என்கிற யூடியூப் சேனலில் பார்க்கலாம். புத்தக வாசிப்பாளர்களுக்கு, சினிமா தீவிர ரசிகர்களுக்கு,  பட்டிமன்ற நிகழ்ச்சி விரும்பிகளுக்கு இந்த சேனல் நன்கு தெரிந்து இருக்கின்றன. காரணம் அந்த அளவுக்கு அவர்களுக்கு தேவையான  கன்டன்ட்களை தொடர்ந்து வழங்கி வருகிறது இந்த சேனல். குறிப்பாக இலக்கியம் சார்ந்த தகவல்களை நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நமக்கு தேவையான அத்தனை தகவல்களும் சேனலில் கிட்டத்தட்ட கிடைத்துவிடுகின்றன.

ஆனால் இந்த சேனலில் உள்ள இவ்வளவு தகவல்களையும் குறிப்பிட்ட சில மக்களைத் தவிர பெரும்பாலான மக்கள் யாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. தினமும் 3 மணி நேரம் 4 மணி நேரம் யூடியூபில் நேரம் கழிப்பவர்கள் கூட,  இப்படி ஒரு சேனல் இருக்கிறது என்று எங்களுக்கு தெரியவில்லை என சொல்கின்றனர். தினமும் 4 மணி நேரம் யூடியூப்பில் நேரம் செலுத்துகிறீர்கள். ஆனால் இந்த சேனலை தெரியவில்லை என்கிறீர்கள், அப்படி யூடிபில் என்னதான் பார்ப்பீர்கள் என்று கேட்டால் அவர்கள் சொல்லகூடிய பதில்கள் எல்லாம், நகைப்புக்கு உரியதாக இருக்கின்றன. அதிகம் பார்வைகளை பெறக்கூடிய இளைஞர்கள் உள்ள யூடியூப் சேனல்களில் கூறப்படும் தகவல்கள் அருமை என நம்பிக்கொண்டு அந்த வீடியோவை நாங்கள் விடாமல் பார்ப்போம் என்றார்கள். ஆனால் அப்படிப்பட்ட சேனலில் உள்ள வீடியோக்களை பார்த்தால் அதில் உள்ள பெரும்பாலான தகவல்கள் எல்லாம்  போலியான தாகவும் கற்பனை கலந்ததாகவும் இருக்கும். அவற்றை சிலர் உண்மை என நம்பி கொண்டு அதில் நேரம் செலுத்துகின்றனர். இன்னும் சிலர் “சொல்வதெல்லாம் உண்மை” மாதிரியான நிகழ்ச்சிகள் நிறைய யூட்யூபில் நடைபெறுகின்றன.  அந்த மாதிரியான நிகழ்ச்சிகளை பார்க்கும் போது சுவாரசியமாகவும்  ஜாலியாகவும் இருக்கிறது. அதை பார்க்கும்போது பொழுது நன்கு கழிகிறது என்கின்றனர். 

கிட்டத்தட்ட 7 லட்சம் சப்ஸ்கிரைபர்களை கொண்டிருக்கிறது சுருதி டிவி. அந்த சேனலில் பெரும்பான்மையான வீடியோக்கள் இலக்கியம் பற்றிய வீடியோக்களாகத் தான் இருக்கின்றன. 7 லட்சம் மக்கள் இருந்தாலும் அந்த சேனலில் உள்ள இலக்கியம் பற்றிய வீடியோக்கள் பெரிய அளவில் பார்வைகளை பெறவில்லை. எந்த மாதிரியான வீடியோக்கள் பார்வைகளை பெறுகிறது என்றால் திரைப்படங்கள் பற்றிய சினிமாக்கள் பற்றிய வீடியோக்கள் தான் பார்வைகள் நன்கு பெற்றிருக்கின்றன. அதிலும் குறிப்பாக பெரிய பெரிய நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள படங்களின் முதல் நாள் முதல் காட்சி முடிந்ததும் வெளியே வரும் ரசிகர்களிடம் கேட்கும் “பப்ளிக் ரிவ்யூ” வீடியோக்கள் லட்சக்கணக்கில் பார்வைகளை பெற்றிருக்கின்றன. 

அந்த மாதிரியான பப்ளிக் ரிவியூ வீடியோக்களின் தலைப்பை பார்த்தால் அவை மற்ற யூட்டுயுப் சேனல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கிறது. காரணம் பார்வைகள் அதிகம் வர வேண்டும் என்பதற்காக மற்ற யூடியூப் சேனல் காரர்கள் “படம் படு குப்பை”, “படத்த பாக்க முடியல”, “நான் பாதியிலே தூங்கிட்டேன்” என்பது போன்ற தலைப்பையும் பப்ளிக் ரிவ்யூ வீடியோக்களுக்கு சில சேனல்கள் வைத்திருப்பார்கள். ஆனால்  அப்படிப்பட்ட தலைப்புகளை ஒரு வீடியோக்களுக்கு கூட இந்த சேனலில் வைக்கவில்லை. அதற்கு அடுத்ததாக அதிக பார்வைகள் பெற்ற வீடியோக்களாக பட்டிமன்றம் சார்ந்த வீடியோக்கள் ஓரளவுக்கு நல்ல பார்வைகளை பெற்றிருக்கின்றன. குறிப்பாக பாரதி பாஸ்கர் மற்றும்  ராஜா இவர்கள் இருவரும் இணைந்து பேசிய வீடியோக்கள் இளைஞர்களிடமும் பெரியவர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதற்கடுத்து சினிமா பிரபலங்கள் கலந்துகொண்ட  திரைப்படம் குறித்த உரையாடல் நிகழ்வுகள் சார்ந்த வீடியோக்கள் ஓரளவுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. மற்றபடி இந்த வீடியோ சேனலில் உள்ள மிக அதிக தகவல்கள் அடங்கிய  வீடியோக்கள் பெரும்பாலும் அதிக பார்வைகளை பெறுவதில்லை. 

எந்தெந்த மாவட்டங்களில் புத்தகத் திருவிழாக்கள் நடக்கிறதோ புத்தக வெளியீட்டு விழா நடக்கிறதோ இலக்கியக் கூட்டங்கள் நடக்கிறதோ அந்த நிகழ்ச்சிகளை எல்லாம் நேரலையில் காட்டுகிறார்கள். இதனால் இந்த சேனலின் மூலம் நம்முடைய நேரமும் பொருளாதாரமும் மிச்சமாகிறது.  அதே சமயம் உடனுக்குடன் சில புதிய தகவல்களை அறிந்து கொண்டு அப்டேட்டாக இருக்க முடிகிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த யூடியூப் சேனல் தமிழ் இலக்கிய உலகிற்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்குமே  நன்மை பயக்கக் கூடிய ஒரு யூடியூப் சேனலாக விளங்குகிறது. அதனால் முடிந்த வரை இந்த சேனலில் உள்ள வீடியோக்களை தினமும் காலையில் ஒரு அரை மணி நேரம் இரவு தூங்கப் போவதற்கு முன் ஒரு அரை மணி நேரம் பார்க்கிறீர்கள் அல்லது கேட்டீர்கள் என்றால் கண்டிப்பாக உங்களுடைய வாழ்க்கையில்  நீங்கள் எதிர்பாராத சில மாற்றங்களும் முன்னேற்றங்களும் உண்டாகும். இந்த சேனலை பற்றிப் பெருமையாகப் பேசும் போது ஒரு சிலர் “அவிங்க கண்டன்ட்காக பெருசா உழைக்கிறது இல்ல,  பிரபலங்கள் பங்கேற்கக் கூடிய நிகழ்ச்சிகளை கவர் பண்றாங்களே தவிர, அல்லது பிரபலங்கள் சார்ந்த நிகழ்வுகளை கவர் பண்ணுகிறார்களே தவிர மற்றபடி  கிரியேட்டிவ் ஆக எதுவும் செய்யவில்லை, அவர்கள் முழுக்க முழுக்க தங்களுடைய நேரத்தை அந்த நிகழ்வுகளை பதிவு செய்வதில் செலுத்தி, அதை எடிட் செய்து நல்ல தலைப்புடன் யூ டியூப்பில் அப்லோடு செய்வதுடன் நிறுத்திக் கொள்கிறார்கள். குப்பைகள் நிறைந்த யூடியூப் உலகில் ஜொலிக்க வேண்டும் என்றால் மனசாட்சிக்கு விரோதமான சில செயல்களை எல்லாம் செய்து தான் ஆக வேண்டும். நான் நல்லது மட்டுமே சொல்லி நல்ல விஷயங்களால் மட்டுமே சம்பாதித்து சாப்பிடுவேன் என்று நினைத்தால் வறுமையை தான் சந்திக்க நேரிடும், தமிழில் உள்ள யூட்யூப் சேனல்களில் கிட்டத்தட்ட பெரும்பாலான சேனல்களெல்லாம் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, சப்ஸ்கிரைப் பண்ணுங்க என்ற வார்த்தைகளை தங்களுடைய எல்லா வீடியோக்களிலும் ஏதாவது பிரபலங்களை வைத்து பேச வைத்து விடுகின்றன. இந்த சேனலில் உள்ள வீடியோக்களில் அப்படிப்பட்ட வார்த்தைகளை கேட்டதாகவே ஞாபகம் இல்லை. இருந்தாலும் 7 லட்சம் உறுப்பினர்களை அந்த சேனல் பெற்றிருக்கிறது என்று நினைக்கும் போது உண்மையிலேயே அது பாராட்டத்தக்க வேண்டிய விஷயம்தான். இவர்கள் சொல்வதில் சில நியாயங்களும் உள்ளன. இந்த சேனலில் உள்ள மிக முக்கியமான பயனுள்ள தகவல்கள் அடங்கிய வீடியோக்கள் எல்லாம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேல் உள்ள வீடியோக்களாக அமைந்துள்ளன. அவ்வளவு நேரம் உள்ள வீடியோக்களை பார்ப்பதற்கு அல்லது கேட்பதற்கு முழுமையாக ரசிப்பதற்கு ஒரு அமைதியான சூழல் வேண்டும். இந்த வாழ்க்கையை வாழவேண்டும் நல்லபடியாக ஏதாவது கற்றுக்கொள்ளவேண்டும் தன்னை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் அந்த மாதிரியான அமைதியான சூழ்நிலையை அவர்களாகவே தேடி கண்டுபிடித்து கொள்கிறார்கள். குறிப்பாக இரவு நேர மொட்டமாடி இந்த சேனலில் உள்ள வீடியோக்களை கேட்பதற்கு  பொருத்தமானதாக சரியானதாக இருக்கிறது. அல்லது வீட்டில் யாரும் இல்லாத பகல் பொழுதுகள், பறவைகளின் ஓசைகள் மட்டுமே கேட்கக்கூடிய தோட்டங்களிலோ  அமர்ந்தால் இந்த சேனலில் உள்ள வீடியோக்களை பொறுமையாக பார்க்க முடியும் கேட்க முடியும்.  ஆனால் எல்லோருக்கும் இந்த மாதிரியான ஒரு சூழல் கிடைப்பதில்லை நேரம் கிடைப்பதில்லை. அது மட்டுமில்லாமல் இந்த சேனலில் உள்ள வீடியோக்களை பார்த்து ரசித்தவர்கள் அதனை தங்கள் முகநூல் பக்கங்களிலோ அல்லது வாட்ஸ் அப்பிலோ பகிர்ந்தால் அவை இன்னும் பலருக்கு நன்மை பயக்கக்கூடியது ஆக இருக்கும். அப்படி நேரம் கிடைக்காதவர்கள் தொடர்ந்து நாங்கள் பயணித்துக் கொண்டே இருப்பவர்கள் என்று சொல்பவர்கள் தங்களின் பயணங்களில் கூட  இந்த சேனலில் உள்ள வீடியோக்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். ரயிலிலோ அல்லது பேருந்திலோ காரிலோ எதுவாக இருந்தாலும் அந்த பயணம் இரண்டு மணி நேரங்கள் அல்லது மூன்று மணி நேரங்களுக்கும் மேலாக தொடர கூடியது என்றால் ஒரு ஹெட்செட்டை எடுத்து காதில் மாட்டிக் கொண்டு  அந்த வீடியோவை முழுவதும் பார்க்கக்கூட வேண்டாம், அந்த வீடியோவில் சொல்லப்படும் கதைகளை கருத்துக்களை உரையாடல்களை கண்கள் மூடி கேட்டாலே போதும். அந்தப் பயணம் உங்களுக்கு உண்மையிலேயே மறக்க முடியாத இனிமையான பயணங்களாக அமையும். 

இந்த சேனலின் பயணம் தொடர்ந்து கொண்டு இருந்தால், இந்த சேனல் மூலமாக நல்ல தரமான நேர்காணல்கள், குழந்தைகள் சம்பந்தப்பட்ட  பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்,  குழந்தைகள் இலக்கியங்கள்  போன்றவை நம் சமூகத்திற்கு கிடைக்கும் என்று நம்பலாம். குறிப்பு இந்த சேனலை பற்றிய இந்த வரிகள் எல்லாம்  இவற்றை விளம்பரப்படுத்துவதற்காக  எழுதப்பட்ட வரிகள் அல்ல. இந்த மரத்தில் நல்ல விஷயங்கள் கிடைக்கிறது இந்த மரத்தை தேடிப்   போகலாம் வாருங்கள் என்று சொல்லும் வரிகள் தான் இவை. இந்த சேனலில் பெரும்பாலும் மேலே குறிப்பிட்டது போல லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க, சப்ஸ்கிரைப் பண்ணுங்க போன்ற இந்த வார்த்தைகளை பெரிய அளவில் பயன்படுத்தியதில்லை. அதனால் அந்தச் சேனலால் பயனடைந்த நாம்தான் இந்த வார்த்தைகளை பயன்படுத்தி ஆக வேண்டும். இப்போது கிடைத்துக் கொண்டிருக்கும் இந்த நல்ல விஷயங்களை அலட்சியப்படுத்தி விட்டு பிறகு இது கிடைக்க முடியாதபடி ஒரு சூழல் வந்து விட்டால் இந்த மாதிரியான ஒரு சேனலை நிகழ்ச்சிகளை நாங்கள் மிஸ் பண்ணுகிறோம் என்று எதிர்காலத்தில் வருந்தி எந்த பயனும் இல்லை. 

Related Articles

உலகின் ஆறாவது பணக்கார நாடு இந்தியா!... நம்ப முடியாத செய்தியாகத் தோன்றலாம். ஆனால் உண்மை. இந்தியா ஏழை நாடு, வளர்ந்து வரும் நாடு என்ற செய்திகள் மட்டுமே கேட்ட நமக்கு இது கொஞ்சம் புதுசு தான். ...
” வேகம் மட்டும் போதாது, விவேகம் வே... சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ளப் போகிறது என்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தது. சிஎஸ்கே ரசிகர்கள்...
வித்தியாசமான நோய்களை காட்டிய தமிழ் சினிம... தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் கேன்சர் என்ற ஒரே நோயை திருப்பி திருப்பி ஆள் மாற்றி காண்பித்திருப்பார்கள். அப்படி இல்லாமல் வித்தியாசமான நோய் உடைய மனித...
இயக்குனர் பாலாவிடம் ஓர் வேண்டுகோள்!... இயக்குனர் பாலாவை பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. நாம் அனைவரும் பாலாவை பற்றி ஓரளவுக்கு தெரிந்து வைத்திருப்போம். இருந்தாலும் இன்னும் கூடுத...

Be the first to comment on "சுருதி டிவி – தினமும் அரை மணி நேரமாவது இந்த சேனலில் உள்ள வீடியோக்களை நாம் ஏன் பார்க்க வேண்டும்!"

Leave a comment

Your email address will not be published.


*