வாட்சப் போன்ற சமூக வலை தளங்கள் மூலமாக தொடர்ந்து குற்றங்கள் நடந்து வருகின்றனர். குறிப்பாக பல ஊர்களில் பொய்யாக பரப்பப்பட்ட வாட்சப் வதந்திகளால் பலருடைய உயிர் பறி போயிருக்கிறது. குழந்தை கடத்த வந்தவன் என்று தவறாக உணர்ந்து கொண்டு ஒரு மனிதனை ஊரே சேர்ந்துகொண்டு கல்லால் அடித்துக் கொள்வது, அடித்துக் கொன்று பாலத்தில் தொங்க விடுவது என்று பல அக்கிரமங்கள் நடந்து உள்ளது.
இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வாட்சப் நிறுவனம் ஏதேனும் மாற்று வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள், விதிகள் கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசும், உச்ச மற்றும் உயர்நீதிமன்றங்களும் பல முறை ஆணை பிறப்பித்தது.
அதைத் தொடர்ந்து வாட்சப் நிறுவனமும் சில சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ஒருவர் தனக்குப் பிடிக்காத வாட்சப் குரூப்பில் இருந்து வெளியேறிக் கொள்ளலாம் என்றும் அப்படி வெளியேறினால் அந்தக் குரூப்பின் அட்மினால் கூட மீண்டும் உங்களை அந்த குரூப்பிற்குள் இணைத்து தொந்தரவு செய்ய முடியாது என்றும் கட்டுப்பாடுகள் சமீபத்தில் விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அதிக நபர்களால் பகிரப்படும் வாட்சப் பார்வட் செய்திகளை ” forwarded ” என்று குறிப்பிட்டு காட்டும் வகையில் தற்போது மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
வாட்சப் விவகாரம் இப்படி இருக்க, காஷ்மீர் மாநில அரசு ஒருபடி முன்னே சென்று உள்ளது. அந்த மாநிலத்தில் இனி யாரேனும் புதிதாக வாட்சப் குரூப் தொடங்க வேண்டுமென்றால் அவர்கள் முறைப்படி காவல் நிலையம் சென்று தொடங்க இருக்கும் குரூப்பின் அட்மின் யார்? குரூப்பின் நோக்கம் என்ன? குரூப்பில் எத்தனை பேர் இணைய இருக்கிறார்கள் உள்ளிட்ட முழு விவரங்களையும் கொடுத்து, அதை காவல் அலுவலர்கள் பரிசீலித்த பின்னரே வாட்சப் குரூப்கள் தொடங்க முடியும் என்று புது விதியை விதித்திருக்கிறார்கள்.
காஷ்மீரைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் இதனைப் பின்பற்றினால் நாட்டில் நடக்கும் பெரும்பாலான வன்முறைகளை குறைக்கலாம்.
Be the first to comment on "புதிதாக வாட்சப் குரூப் தொடங்க வேண்டுமென்றால் போலீசிடம் அனுமதி பெற வேண்டும்!"