ஒரு சில படங்களை பார்த்தால் ஏண்டா பார்த்தோம் என்று இருக்கும் ஒரு சில படங்களை பார்த்தால் இந்த மாதிரி படங்களை நல்ல வேளை பார்த்து விட்டோம் என்று தோன்றும். அந்த வகையில் சார்பட்டா படம் நல்ல வேலை பார்த்து விட்டோம் என்ற திருப்தி தரக்கூடிய படம். அட்டகத்தி மெட்ராஸ் கபாலி காலா என்று தொடர்ந்து வெற்றிப்படங்களை தந்தவர் இயக்குனர் பா ரஞ்சித். இவர் காலா படத்தை தொடர்ந்து இந்தி திரையுலகில் கால்பதிக்க விரும்பினார். ஆனால் பா ரஞ்சித் இன் எதிரிகளோ குறிப்பாக தமிழ் சினிமாவில் உள்ள பா ரஞ்சித் எதிரிகளோ பா ரஞ்சித் பற்றி தரக்குறைவாக அதிலும் குறிப்பாக பா ரஞ்சித் என்பவர் ஜாதியை மையமாக வைத்து படம் எடுப்பார் என்று இந்தி திரையுலகில் செய்தி பரப்பி வைத்தனர். அதனால் அமீர்கானை வைத்து படமெடுக்க இருந்த பா ரஞ்சித் ஒரு மிகப்பெரிய ஏமாற்றமும் மிகப்பெரிய சறுக்கல் ஒன்று கிடைத்தது. அதைத்தொடர்ந்து பா ரஞ்சித் தல என்று கருதப்படும் அஜித்தை சந்தித்து கதை கூறி இருக்கிறார் ஆனால் அஜித்தோ தமிழ் சினிமா மூலமாக எந்த ஒரு புரட்சியும் சமூகத்தில் உண்டாக்கி விட முடியாது என்று கூறி பா ரஞ்சித்தை புறக்கணித்துள்ளார்.
இந்த நிலையில் தான் பா ரஞ்சித் நீண்ட நாட்களாக படமாக எடுக்க இருந்த சார்பட்டா படத்தை கையில் எடுத்தார் முதன் முதலில் இந்த படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக சூர்யா இந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது. என்ன பண்ணுவது என்று தெரியாமல் கொஞ்சம் தடுமாற்றத்தில் இருந்த பா ரஞ்சித் தன்னிடம் நீண்ட நாட்களாக படம் பண்ணலாம் என்று கேட்டுக் கொண்டிருந்த ஆர்யாவை நாடினார். ஆர்யா மிகச் சிறந்த நடிகர் என்பது நாம் அனைவருக்கும் நன்கு தெரிந்ததே. நான் கடவுள் மகாமுனி மதராசப்பட்டினம் போன்ற படங்களில் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் ஆர்யா இந்த படங்களுக்காக அவர் தேசிய விருது வாங்கி இருக்க வேண்டும் ஆனால் என்ன அரசியல் காரணமா தெரியவில்லை அவருக்கு எந்த ஒரு விருதும் இதுவரை கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஆர்யாவும் பா ரஞ்சித்தும் தங்களை யார் என்று நிரூபிக்க வேண்டும் என்று வெறித்தனமாக உழைத்த படம் தான் சார் பட்டா. இந்த படத்தில் பா ரஞ்சித் ஜெயின் பட்டாளம் என்று சொல்லப்படும் கலையரசன் ஜான் விஜய் கண்ணன் போன்றோர் நடித்துள்ளனர் இது கபாலி வந்துள்ளதா அல்லது மெட்ராஸ் படம் போல வந்துள்ளதா என்று பார்ப்போம். 1970களில் மெட்ராஸ் பகுதிகளில் மிக ஆர்ப்பாட்டமாக நடந்த ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு தான் குத்துச்சண்டை இதனை முதன் முதலில் வெள்ளைக்காரர்கள் தான் நாம் தமிழ் மக்களுக்கு விளையாட்டு பொழுது போக்காக கற்றுக்கொடுத்தனர். இது இது பின்னாட்களில் எப்படி மனிதர்களுக்குள் நடக்கும் ஒரு வெறித்தனமான சண்டையாக பரம்பரை சண்டையாக மாறியது என்பதை சாட்டப்படும் சுட்டிக்காட்டுகிறது இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் ஆடுகளம் படத்தில் சேவல் சண்டை விளையாடும் மனிதர்கள் எப்படி தங்களுக்குள் சண்டை போட்டு மனிதர்களுக்குள் பொறாமை என்னும் உணர்வு மூலமாக எப்படி காணாமல் போனவர்களை அதேபோல ஆங்கிலம் கற்றுக் கொடுத்த மோசமான ஆங்கில குத்துச்சண்டை மூலமாக மனிதர்கள் எப்படி பிரிந்து போகிறார்கள் அவர்களுக்குள் எப்படி ஈகோ சண்டை நடைபெறுகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது சார்பட்டா. 1970 இல் நடைபெறும் காலகட்டத்தில் சார்பட்டா பரம்பரை இடியாப்ப பரம்பரை என்று இரண்டு பரம்பரைகள் பிரபலமாக உள்ளது இந்த வரிகள்தான் ரோசமான ஆங்கில குத்துச்சண்டையில் வெற்றிகரமான பரம்பரையாக வலம் வருகிறது. இதில் இடியாப்ப பரம்பரையை சேர்ந்த வேம்புலி என்ற பாக்ஸர் சார்பட்டா பரம்பரை சார்ந்த அவர்களை அடித்து நொறுக்குகிறார் தொடர்ந்து இடியாப்ப பரம்பரையை வெற்றிகரமான பரம்பரையாக நீடித்து வருகிறது பலகைகளை வெல்கிறது இடியாப்ப பரம்பரையைச் சார்ந்த வாத்தியார் துரைக்கண்ணு சார்பட்டா பரம்பரை யைச் சார்ந்த வாத்தியார் ரங்கனுக்கு எங்கள் அணியை வென்று பாரு என்று காட்டுங்கள் என்று சவால் விடுகிறார் அவருடைய சவாலை ஏற்றுக் கொள்கிறார் ரங்கன் வாத்தியார் அந்த சவாரிக்காக அங்கன்வாடி 6 மணியிலிருந்து யார் வேம்புலி இடம் மாறுகிறார்கள் அந்த பயன்படுத்தினார்களா என்பதே மீதிக்கதை.
இந்த படத்தின் கேப்டன் என்று அழைக்கப்படும் பா ரஞ்சித் மிகப்பெரிய பாராட்டுக்கு உரியவர் அவருடைய எழுத்து அவ்வளவு அற்புதமாக உள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அவ்வளவு நுணுக்கமாக செதுக்கி வைத்த ஒவ்வொரு கதாபாத்திரங்களும் நன்கு தெரிகின்றன குறிப்பாக ஜான் விஜய் நடித்த ஆங்கிலோ இந்தியன் கதாபாத்திரமும் சபீர் நடித்த கதாபாத்திரம் நிறைய மனிதர்களின் மனதில் நன்கு பதிந்து விட்டது. அதேபோல இந்த படத்தில் இயக்குனர் பா ரஞ்சித் உடன் இணைந்து திரைக்கதை எழுதிய எழுத்தாளர் தமிழ் பரப்பும் மிகவும் பாராட்டுக்கு உரியவர் இருவரும் சேர்ந்து எழுதிய திரைக்கதையை எந்த இடத்திலும் தொய்வு அடையாமல் ரசிகர்களை நுனி சீட்டில் அமர வைக்கிறது. கொஞ்சம் கூட பிசிறு தட்டாமல் இருவரும் சேர்ந்து திரைக்கதையை செதுக்கியுள்ளார்கள். அதே போல இவர்கள் இருவரும் இணைந்து எழுதிய வசனங்கள் ஒவ்வொன்றும் சாட்டையடி வசனங்கள் ஆக இருக்கின்றன தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய வசனங்களாகவும் இவர்களுடைய எழுத்து பிரகாசமாக இருக்கின்றன பின்வரும் நாட்களில் தமிழ் பிரபாவுக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும். படத்தில் மொத்தம் இரண்டு பாடல்கள் தான் இருக்கின்றனர் அந்த இரண்டு பாடல்களுமே மிகவும் அற்புதமாக இருக்கின்றன திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்பது போல் உள்ளது வானம் விடிஞ்சிருச்சு காட்சி படம்போல என்ற பாடல் அற்புதமான நடன கலைஞர்களை வெளிப்படுத்துகிறது அதே போல ஒளி நீயே வழி என்ற பாடல் மிகச் சிறந்த தன்னம்பிக்கை ஊட்டும் பாடலாக ஒலிர்கிறது. அதேபோல பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பா ரஞ்சித் மற்றும் சந்தோஷ் நாராயணன் கூட்டணியில் உருவாகும் ஐந்தாவது படம் இது ஐந்து படங்களிலுமே சில பாடல்கள் அனைத்தும் தனித்துவமாக தெரிகின்றன அத்தனை பாடல்களும் ஹிட் அடித்த இந்த கூட்டணி இன்றுவரை அழியாமல் உள்ளது பலரை அதிசயிக்க வைக்கிறது. அடுத்ததாக பாராட்டப்பட வேண்டியவர் படத்தின் எடிட்டர் மிக நுணுக்கமாக எடிட்டிங் வேலையை செய்துள்ளார் அதிலும் குறிப்பாக டான்சிங் ரோஸ் உடன் கபிலன் மோதப்போகும் போவதற்காக பயிற்சி எடுக்கும் காட்சிகள் அவ்வளவு அற்புதமாக எடிட் செய்து உள்ளார். அதேபோல பாக்ஸிங் காட்சிகளையும் மிக நன்றாக எடிட் செய்து வந்தால் இவருக்கு தேசிய விருது கிடைத்தாலும் கிடைக்கலாம் அதேபோல ஒளிப்பதிவாளர் தனது பணியை மிக நன்றாகவே செய்துள்ளார். குறிப்பாக பாக்ஸிங் நடைபெறும் காட்சிகள் அவ்வளவு அற்புதமாக ஒளிப் படம் பிடித்துள்ளார் தேசிய விருது கிடைக்க வாய்ப்புள்ளது அடுத்ததாக நடிகர்களை பற்றி பார்ப்போம். ஆர்யா இந்தப் படத்திற்காக தன்னை தானே சிற்பியாக மாற்றிக்கொண்டு அவ்வளவு கடின உழைப்பை போட்டிருக்கிறார் தனது உழைப்பிற்கேற்ற வெற்றி இப்போது கிடைத்துள்ளது அவளுக்கு நான் கடவுள் மகாமுனி மதராசப்பட்டினம் போன்ற படங்களில் கிடைக்காத தேசிய விருது இந்த படத்திற்காக அவருக்கு கண்டிப்பாக கிடைக்கும். ஆர்யாவுக்கு ஜோடியாக மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்தவர் மிகவும் பாராட்டுக்கு உரியவர் அவருடைய வசனங்கள் மிகவும் கவனத்தை பெறுகின்றன அதிலும் குறிப்பாக மானத்தை எதுக்குடா கொண்டுவந்த பரம்பரையில வைக்கிறீங்க என்ற வசனம் பாராட்டை பெறுகிறது அதேபோல முதலிரவின் போது மாரியம்மாள் போடும் குத்தாட்டம் அவர் மிகவும் ரசிக்க வைக்கிறது பா ரஞ்சித் எப்படி தான் இதை எழுதினார் என்று தெரியவில்லை அவ்வளவு அருமையாக உள்ளது அந்த குத்தாட்டம். படத்தில் நடித்த எல்லா நடிகர்களும் நடிகைகளும் பயிற்சி பெற்ற பிறகே நடித்துள்ளனர் எல்லா நடிகர்களும் தங்களது நிரூபித்துள்ளனர் ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை என்பதை நிரூபித்து உள்ளனர். படத்தின் கிளைமாக்ஸில் வரும் பீடி ராயப்பன் என்கிறார் தாத்தா மிக அதிகமான கவனத்தை பெறுகிறார் நீயே ஒளி என்ற பாடலின் போது அவர் பேசும் வசனங்கள் அவ்வளவு உற்சாகமாக மோட்டிவேட் செய்யக் கூடியதாக இருக்கின்றன.
பா ரஞ்சித் ஜாதி படம் எடுக்கிறார் அவருக்கு ஜாதியை வைத்து மட்டும் தான் படம் எடுக்கத் தெரியும் என்று கூறியவர்கள் கோன் பாரென்ஹெய்ட் ரஜினியை சாக்கடைக்குள் தள்ளிவிட்டனர் அவருக்கு ரஜினியை வைத்து சரியாக படம் எடுக்கத் தெரியவில்லை சரியான இயக்குனர் இல்லை என்று கூறி அவர்களுக்கும் சார்பட்டா படம் ஒரு சவுக்கடி. பா ரஞ்சித் கண்டிப்பாக இந்தி போன்ற பிறமொழிகளிலும் தன்னுடைய இயக்கத்தில் படம் எடுக்க வேண்டும் இன்னும் நிறைய மொழிகளில் பா ரஞ்சித் தனது திறமையை நிரூபிக்க வேண்டும். அதேபோல நீளம் புரோடக்சன்ஸ் தயாரிப்பில் நிறைய திரைப்படங்கள் உருவாக வேண்டும் தமிழகத்தில் நிலவி வரும் ஜாதிவெறி ஆணவக்கொலைகள் குறைய வேண்டும் அதற்கு அப்பா ரஞ்சித் மிக முக்கியமான காரணமாக இருக்கிறார் என்பது பலருக்கு புரிய வேண்டும். படத்தை இன்னும் பார்க்காதவர்கள் யாராவது இருந்தால் கண்டிப்பாக பாருங்கள் குறிப்பாக வளரும் தலைமுறையினருக்கு இந்த படத்தை போட்டு காமிங்க படம் தியேட்டர் மெட்டீரியல் என்று பலரும் கொண்டாடி வருகின்றனர் ஒரு வேலையை இந்த படம் தியேட்டருக்கு வந்தால் கண்டிப்பாக சப்போர்ட் செய்யுங்கள் அதற்குள் இந்த படத்தில் எம்ஜிஆரை பற்றி தவறாக சித்தரித்து செய்து இருக்கிறார்கள் என்றும் கலைஞருக்கு இந்த படத்தில் சொம்பு தூக்கி இருக்கிறார்கள் என்றும் திமுகதான் அடுத்து ஆட்சிக்கு வரப் போகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்து விட்டதால் திமுகவிற்கு பா ரஞ்சித் சொம்பு தூக்கி இருக்கிறார் என்றும் பலர் கூறுகின்றனர் ஆனால் இது எதுவுமே உண்மை இல்லை நாங்கள் யாருக்கும் ஒரு சார்பாக படம் எடுக்கவில்லை என்று கூறியுள்ளது படக்குழு கட்சியின் பெயரை வெளிப்படையாக பேசும் முறையை முதன்முதலில் கொண்டு வந்தவர் இயக்குநர் வெற்றிமாறன் அவர்தான் தனது வடசென்னை படத்தில் கட்சிகளின் பெயரை வெளிப்படையாகப் பேசுவது போல் காட்சிகள் வைத்தார். அதைத் தொடர்ந்து இப்போது பா ரஞ்சித் தனது படங்களில் அதிமுக மற்றும் திமுக கட்சிகளைப் பற்றி காட்சிகள் வைத்துள்ளார் ஆனால் அதற்கு அதிமுக தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்துள்ளது படைப்பாளிகளுக்கு கட்சிகள் குறித்த காட்சிகள் வைப்பதற்கு முழு சுதந்திரமும் கொடுக்க வேண்டும் அப்போதுதான் படைப்பாளிகளின் மூலமாக இந்த இரு திராவிட கட்சிகளும் மக்களை எப்படியெல்லாம் பயன்படுத்தி வருகிறது உண்மையிலேயே இந்த இரு கட்சிகளும் நல்ல கட்சிகளால் என்பதையெல்லாம் நாம் மக்களுக்கு புரிய வைப்பதற்கான சந்தர்ப்பங்களில் கிடைக்கும்
Be the first to comment on "சார்பட்டா திரைவிமர்சனம்! "