கடந்த வாரம் (ஜூலை 5) ம் தேதியன்று வெளியாகி கலவையான விமர்சனம் பெற்ற படம் ராட்சசி. ஜோதிகா லீடாக நடிக்க பூர்ணிமா பாக்யராஜ், சத்யன் உள்ளிட்டோர் நடிப்பில் கௌதம்ராஜ் இயக்கத்தில் ஷான் ரோல்டன் இசையில் கோகுல்பினாயின் ஒளிப்பதிவில் பாரதி தம்பியின் வசனத்தில் உருவான படம் ராட்சசி.
பெற்றோர்களின் ஆதரவோடும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் எதிர்ப்போடும் திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. கலவையான விமர்சனம் பெற்றிருந்த இந்தப் படத்தை பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்களுக்கு எப்படியாவது கொண்டு சேர்க்க வேண்டுமென்று முடிவெடுத்துளது ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பு நிறுவனம்.
தயாரிப்பாளர்கள் s.r. பிரகாஷ் பாபு, s.r. பிரபு ஆகியோர் இணைந்து எடுத்துள்ள முடிவு உண்மையிலயே வியக்க வைக்கிறது. துளியும் ஆபாசம் இல்லாத இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத இந்தப் படத்தை பள்ளி மாணவ மாணவிகளுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு டிக்கெட் விலையில் பாதி ரேட்டை தள்ளுபடி செய்துள்ளது தயாரிப்பு நிறுவனம். இதை முன்னிட்டு தமிழகத்தின் பல மாவட்டங்களில் பல பள்ளி நிர்வாகங்கள் மாணவ மாணவிகளை ஆசிரியர்களை ராட்சசி படத்துக்கு அழைத்துச் சென்று வருகின்றன.
அதே சமயம் இதெல்லாம் ஒரு படமா என்று ஆசிரிய பெருமக்கள் புறக்கணிக்கவும் செய்கிறார்கள். உண்மை சுடும் என்பதால் அவர்கள் இந்த முடிவு எடுத்துள்ளார்கள் போல. அவர்கள் எல்லாம் எப்போது மனம் மாறி? எப்போது திருந்தி? எப்போது அரசுப்பள்ளிகள் தரம் உயர்ந்து? ஸ்ப்பா…
Be the first to comment on "பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்களுக்கு 50% தள்ளுபடி! – ராட்சசி தயாரிப்பாளரின் நல்ல முடிவு!"